28/01/2025
Best wishes to Mr Gingee Masthan
50 ஆண்டுகால அரசியலில் ஆளுமை ஐயா செஞ்சி மஸ்தான்
🖤❤️🔥💯
திண்டிவனத்தில் ஒரு முன்னாள் அமைச்சரும்,திண்டிவனத்தில் ஒரு கட்சியின் தலைமை மருத்துவர் எல்லாம் இருந்தும் கொண்டு வர முடியாத "திண்டிவனம் பேருந்து நிலையத்தை கொண்டு வந்த ஆளுமை மிக்க ஒருவர்"
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி,மயிலம்,திண்டிவனம் தொகுதியில் உள்ள திண்டிவனம் நகராட்சி, செஞ்சி பேரூராட்சி, அனந்தபுரம் பேரூராட்சி,மரக்காணம் பேரூராட்சி,செஞ்சி,மேல்மலையனூர்,வல்லம்,மயிலம்,ஒலக்கூர் மரக்காணம் மொத்தம் உள்ள 6 ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் என விழுப்புரம் வடக்கு மாவட்டத்தை திமுக கோட்டையாக இரவு பகல் பாராது உழைத்து கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த உழைப்பால் உயர்ந்தவர்.
கொரோனா காலகட்டத்தில் வீட்டிற்கு வெளியே வர பயந்தவர்கள் மத்தியில் தன் வயதையும் தன் குடும்பத்தையும் தாண்டி வீட்டில் முடங்கியவர்களின் பசி தீர்த்த வள்ளல் 5 கிலோ அரிசி என விமர்சனம் செய்தவர்களின் குடும்பத்தையும் பசியாற்றிய ஒரு மகான்.கொரோனா நேரத்தில் குடும்பத்தில் உள்ள ஒரு தம்பியும் இழந்தார்.குடும்பமே கொரோனா நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். இது எல்லாம் ஓட்டுக்காக ஒருவரால் செய்ய முடியாது, ஐந்து முறை பேரூராட்சி தலைவர்,இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்,ஒருமுறை அமைச்சர் இது எல்லாம் பணம் வைத்திருப்பவர்களால் ஆக முடியாது பொதுமக்கள் இதயங்களை வென்றவர்களால் மட்டுமே சாத்தியம். இது சத்தியம்.
2014 மாவட்டச் செயலாளர் ஆனதற்கு பிறகு செஞ்சி,மயிலம்,திண்டிவனம் என மூன்று தொகுதியையும் திமுக கோட்டையாக மாற்றினார்.இதுவரை 50 ஆண்டுகளாக கைப்பற்ற முடியாமல் இருந்த திண்டிவனம் நகராட்சியை திமுக வின் கோட்டையாக மாற்றியதும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள "செஞ்சி, மேல்மலையனூர், வல்லம், மைலம்,ஒலக்கூர், மரக்காணம்" ஆறு ஒன்றியங்களையும் திமுக வின் கோட்டையாக மாற்றியவர் இந்த செஞ்சி கோட்டையின் மன்னன் செஞ்சி மஸ்தான் தான்,எதிர்க்கட்சியினர் இவர் அளவுக்கு உழைக்க முடியாமல் ஓய்வெடுக்க சென்றவர்கள் அதிகம்.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மூத்த கட்சி நிர்வாகிகளின் பெயர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தெரிந்து அறிந்து அவர்களையெல்லாம் அரசியலில் ஆளாக்கி அழகு பார்த்து கட்சியை வளர்த்தவர். பொதுமக்களின் நம்பிக்கை பெற்றவர்.
திண்டிவனம் பேருந்து நிலையம், திண்டிவனத்தில் சிப்காட், செஞ்சி அரசு கலைக் கல்லூரி,செஞ்சி பேருந்து நிலையம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம், திண்டிவனம் கருவூலம் கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் எண்ணிலடங்காத திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சரிடத்திலே தொடர்ந்து வலியுறுத்தி திட்டங்களை பெற்று கொண்டு வந்த ஒருவர்.
திண்டிவனம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு நம்ம சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்ற கவலையே இல்லாத அளவிற்கு கழக உடன்பிறப்புகளையும், மக்களையும் பார்த்துக்கொண்டார்,மூன்று தொகுதிகளையும் தன் சொந்த தொகுதிகளாகவே கருதி பணி செய்தார், திட்டங்களை தீட்டி அதனை செயல் வடிவமும் படுத்தினார் ஐயா செஞ்சி மஸ்தான்.
தீவனூரில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தை ஒரு நாளில் ஏற்பாடு செய்தார், மரக்காணத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தை ஒரே நாளில் ஏற்பாடு செய்தார். மஸ்தான் என்றாலே மாஸ் தான் என முதலமைச்சரிடம் பேர் வாங்கியவர்.
செஞ்சி,திண்டிவனம் ,மயிலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள்,இறப்பு செய்தி விஷயங்கள் அனைத்திலும் பங்கு எடுத்து தன்னால் முடிந்த உதவிகளை வழங்கியும் கல்வி உதவி,மருத்துவ உதவி,மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...
ஒரு வரியில் சொல்லப்போனால் அவரை எதிர்த்தவர்களையும் நேசிக்க வைத்த ஒருவர் உழைப்பால் உயர்ந்தவர் நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் நம்ம மு. அமைச்சர் திரு. Gingee Masthan அவர்களின் தொண்டன் என்பதில் பெருமை. 🖤❤️🔥💯
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. M. K. Stalin , மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் திரு. Udhayanidhi Stalin ஆகியோரின் நம்பிக்கை நட்சத்திரம்.2026 திமுக ஆட்சி அதற்கு செஞ்சிக்கோட்டையை சாட்சி 🔥💯