Chennaivision

Chennaivision ChennaiVision.com offering online latest tamil news, Chennai News, Tamil movie review, Tamil Movie S Chennai based Tamil News Portal

IFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” படத்திற்கு சிறப்புத் திரையிடல் மரியாதைஉலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு...
02/12/2025

IFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” படத்திற்கு சிறப்புத் திரையிடல் மரியாதை

உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு பெருமையுடன் திரையிடப்பட்டது.

இந்த சிறப்புத் திரையிடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வில்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,உட்பட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

லைகா புரொடக்ஷன்ஸின் படைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச மேடைகளில் கவனம் பெறுவது பெருமைக்குரிய சாதனையாகும்.

மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள லைகா புரொடக்ஷன்ஸின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் இரண்டு நாட்களுக்கு முன்பு IFFI மேடையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athleti...
02/12/2025

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (நவம்பர் 29, 2025) துவங்கியது.

இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க சிறப்பு விருந்தினர்கள் நடிகர் அருண் விஜய், நடிகர் விஷ்ணு விஷால், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் Dr. ஐசரி கே கணேஷ் (Vels Film International), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of Companies) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

விருதுகள் விவரம்

John Devasir Memorial Award - Life time Achievement Award - திரு.சிகாமோனி V - 75+ yrs
Daisy Victor Memorial Award - Life Time Achievement Award - திருமதி தெரேஸா - 89 yrs

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

02/12/2025

பாடகி சின்மயிடம்
விளக்கம் கேட்டு இயக்குனர் மோகன். G.
காணொளி பதிவு

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில், உருவாகிவரும்
திரௌபதி 2' படத்திலிருந்து "எம்கோனே " என்ற பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜிப்ரான் இசையில் பாடகி சின்மயி இந்த பாடலை பாடியிருந்த நிலையில், திடீரென்று பாடல் பாடியதற்கு மன்னிப்பு கேட்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி சின்மயிடம் விளக்கம் கேட்டு வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலையை தெரிந்து கொள்ளுங்கள் இனியாவது அந்த உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக் க...
02/12/2025

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலையை தெரிந்து கொள்ளுங்கள் இனியாவது அந்த உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்....

1. ஒரு செயற்கைப் பல் வைக்க - ரூ 6,000 முதல் 1இலட்சம்வரை.. (இருந்தாலும் இயற்கை பற்கள் போல் இருக்காது).

2.செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்.

3. ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் (பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம்),

4. செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்..

5. ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 முதல் 5லட்சம்வரை..

6. செயற்கைக்கால் வைக்க - ரூ 2 லட்சம் முதல் 10 இலட்சம் வரை..

7. கண்ணுக்கு லென்ஸ் பொருத்த - ரூ 50, 000முதல்..

8. எலும்புக்குப் பதிலாக plate வைக்க -ரூ 50,000முதல்..

9. கிட்னிக்குப் பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000முதல்.. (மூன்று நாட்களுக்கு ஒரு முறை டயாலிஸ் செய்ய வேண்டும்).

10. இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45,000முதல்..

11. ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000முதல்..

12. இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000முதல்..
( இரத்தத்தின் குரூப்பை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும் )

13. மேலும்,நம் உயிருக்கு விலை மதிப்பே இல்லை. அது போனால் என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
14. காதுகளுக்கும் செயற்கை கருவி பொருத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50000 முதல்..

இதற்கே தலை சுற்றுகிறது அல்லவா..

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதை இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்.. முடிந்தவரை உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருங்கள்.. அந்த வாழ்க்கையே தனி சுகம்தான்.. சொன்னால் புரியாது அனுபவித்து பாருங்கள்..

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா? சிந்திப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்.

மது, புகையிலை, ஹான்ஸ், இன்னும் பிற போதை பொருட்களைத்தவிர்ப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்..

இந்த மனித உறுப்புகளின் புது விலையைப் பட்டியலை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் தயவு செய்து பகிருங்கள்.. இதில் ஒருவர் திருந்தினாலும் நமக்கு மாபெரும் வெற்றிதான்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று 02.12 .2025 தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர...
02/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று
02.12 .2025 தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் திரு. டி .இ. ஆர். சுகுமார் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர்
திரு.நா.முருகானந்தம்,இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ. ஆ. ப., செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குனர் (செய்தி)
திரு.ச. செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

02/12/2025
AthulyaRavi radiates pure elegance and charm in these pictures 🤍✨
01/12/2025

AthulyaRavi radiates pure elegance and charm in these pictures 🤍✨



Address

Radha Nagar
Chennai
600044

Alerts

Be the first to know and let us send you an email when Chennaivision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennaivision:

Share