19/09/2025
இது மக்களுக்கான படம் 🔥 #சக்தித்திருமகன் (3/5)
ஒரு அரசியல்–ஆக்ஷன் திரில்லர். ஊழல், அதிகார அரசியல், சாதாரண மக்களின் பிரச்சினைகள் என சமூகத்தைக் கையாண்ட கதை இது.
புதுமையான அரசியல் பின்னணி, சுவாரஸ்யமான முதல் பாதி.
விஜய் ஆண்டனியின் வழக்கம் போல் நிதாதமான நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார்.
நல்ல ஒளிப்பதிவு, பின்னணி இசை...
கதை, திரைக்கதையின் பங்களிப்பு ஒருபுறம் என்றால் படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள்தான்.
அருண் பிரபுவின் இதுவரையிலான அற்புதமான ஒர்க் இந்த படம் தான். இதுபோன்ற கதைக்காகவே அளவெடுத்து செய்யப்பட்ட நடிகர் விஜய் ஆண்டனி.
சமகால பிரச்னைகளைத் திரையில் பேசும் கதைகளில் அதிகம் நடிக்கும் விஜய் ஆண்டனி சக்தித் திருமகன் மூலம் பெரிய பாய்ச்சலாக பாய்ந்திருக்கிறார்.
⭐ மொத்தத்தில் சமூகச் செய்தியுடன் கூடிய சராசரி மேல் நிலை அரசியல் த்ரில்லர். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம்..