04/06/2025
பாமகவின் வாக்கு வங்கி இணையத்தில் எழுதுபவர்களாலோ, ஊடகப்பேரவையாலோ அல்லது நிர்வாகிகளாலோ இல்லை
எங்க தலைவன் முகம் எங்க ப்ராண்டுனு வசனம் வந்த மாதிரி
இராமதாஸ் என்பவரின் முகத்திற்கு மட்டும்தான் பாமகவின் வாக்கு பலம்
குடும்பத்தின் பிரச்சனையை அப்பாவிடம் இறங்கிப்போய் மகன்தான் தீர்க்க வேண்டும். தந்தை இறங்கி வரமாட்டார், அது அவருக்கு கௌரவமும் இல்லை
வீம்பு காட்டினால், இராமதாஸ் ஒருமுறை பொதுவில் வந்து கண்கலங்கி விட்டால், நிர்வாகிகள் கட்சியில் இருக்கலாம். ஆனால் ஓட்டு சிதறி சின்னாப்பின்னமாகும்
பாமகவை பொறுத்தவரையில் இராமதாஸ் ஒரு சூரியன்
அங்கிருந்து வரும் வெளிச்சம் தன்னுடைய சொந்த வெளிச்சம் போல தெரிந்தாலும், அது மாயை. சூரியன் மறைந்ததும் அஸ்தமம் ஆகிவிடும்
அவர் இருக்கும்வரை அவரை சார்ந்து இருப்பதே கட்சிக்கு நல்லது
இல்லையெனில் 87 வயதிலும் இருந்த இடத்திலேயே பாமக2.0 உருவாக்கும் வல்லமை கூட அவருக்கு உண்டு.
அவர் ஜாதகம் அப்படி