30/09/2025
கரூர் கொடூரம்...
தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் நடந்த விபத்து பெறும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
அந்த சோகத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை.. அதற்குள் அரசியல் கணக்குகள் ஆரம்பித்து விட்டது.
ஒருபக்கம் மாநில அரசு ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி விசாரணை செய்வதாக கூறியுள்ளது.
விசாரணை முடிவு என்ன என்று தெரிவதற்கு முன்னதாகவே தமிழக அரசு இரண்டு முறை விளக்கம் கொடுத்துள்ளது. இரண்டிலுமே விஜய் மீது குற்றம் மட்டுமே சாட்டியது.
சதி நடந்துள்ளது என தவெக தரப்பும், விஜய்தான் காரணம் என திமுக தரப்பும் இறந்த அப்பாவி மக்களின் பிண்த்தில் அரசியல் செய்ய துவங்கி விட்டார்கள். .
இடையில் பிஜெபியும் அதன் பங்கிற்கு இதில் சதி நடந்துள்ளது என குற்றம்சாட்டி திமுகவை சிக்கி வைக்க முயற்சிக்கிறது.
ஆரம்பத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் உள்பட அனைவருமே இதில் அரசியல் வேண்டாம் என்ற நிலையிலே பேசினார்கள்.
ஆனால் திமுகவினர் சும்மா இருக்காமல் இதை வைத்தே விஜயை டேமேஜ் செய்யலாம் என சகட்டு மேனிக்கு அவதூறுகளை வீச ஆரம்பித்தனர்.
பிரச்சனையை சூடுபிடிக்க துவங்கியது திமுக மீதும் கரூர் பாலாஜி மீதும் மக்கள் சாட ஆரம்பித்தனர். நிலமை கைமீறி போவதை கண்டு முதல்வர் ஒரு வீடியோ வெளியிட்டார்.. பின்னர் அதிகார பலத்தில் வழக்குகளில் சிக்க வைத்தனர்..
திமுக இந்த பிரச்சனையை ஆரம்பித்ததில் சிறப்பாக கையாண்டது. பெயருக்கு இரண்டு அதிகாரிகளை சஸ்பென்ட் செய்து ஸ்கோர் செய்வதை விட்டுவிட்டு விளக்கம் கொடுப்பதிலே குறியாக இருந்தனர்.
கடைசியில் விஜயின் வீடியோ வெளியான போது மொத்த திமுகவினரும் ஆடிப் போனார்கள்..
வேறு வழியில்லாமல் திமுக ஐடி விங் ஏற்கனவே பறப்பிய ஒரு கேள்வி பதில் வீடியோவை எடிட் செய்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டு குறையொன்றுமில்லை என்று கூறினார்கள்...
இப்போது நிலமை கைமீறி போய்விட்டது... திமுகவுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது.... வாழ்க்கை மத்திய அரசு கையில் எடுத்தால் ஏதாவது ஒருவிதத்தில் செந்தில் பாலாஜியை சிக்கவைக்க பார்கள் என்பதை புரிந்து கொண்டனர்...
திருமாவளவன் மற்றும் வைகோ இருவரும் வெளிப்படையாக தவெக வை சாடினார்கள்....
இந்த பிரச்சனையை சரிவர கையாள தெரியாமல் அரசியல் செய்து பெறும் அவப்பெயரை திமுக தலையில் வாங்கிக் கொண்டது.. மட்டும்தான் மிச்சம்...
இப்போது விஜயை இயக்குவது பிஜெபி என மீண்டும் அதே B டீம் வேலையை செய்கிறது.
எப்போதும் திமுகவின் அரசியலுக்கு பதில் சொல்வதே பிற கட்சிகளின் வேலையாக இருக்கும்... ஆனால் இப்போது திமுக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது..
விஜய் நடத்திய எல்லா கூட்டத்திலும் பிரச்சனைதான் என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது... அப்படியானால் பிரச்சனைகளை தீர்க்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது... அப்படி எடுத்திருந்தால் 41 உயிர்கள் காப்பாற்றபட்டிருக்குமல்லவா என்ற மக்களின் கேள்விக்கு யார் பதில் சொல்வது...
இத்தனை பிரச்சினைக்கும் முதல் குற்றவாளி விஜய்தான் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் முன் ஏற்பாடாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்பதுதான் இப்போதைய கேள்வி...
பிரச்னை வரவேண்டும் அதன் மூலமாக அரசியல் செய்ய வேண்டும் என காத்திருந்தது போலவே எல்லாம் நடந்திருக்கிறது..
விஜயும் முடங்க போவதில்லை...என்பது தெரிந்து விட்டது இப்போது ஆட்டம் பிஜெபி திமுக என மாறி விட்டது...