World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம்

World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம், News & Media Website, Kodambakkam, Chennai.
(1)

அன்று ஒரு நாள்  காலையில 5 மணி இருக்கும்.. ஒரு கால் வந்தது.."ஒரு 22 வயசு பொண்ணு நைட் முழுக்க பஸ் ஸ்ட்டாண்டையே சுத்திட்டு ...
01/10/2025

அன்று ஒரு நாள் காலையில 5 மணி இருக்கும்..
ஒரு கால் வந்தது..
"ஒரு 22 வயசு பொண்ணு
நைட் முழுக்க பஸ் ஸ்ட்டாண்டையே
சுத்திட்டு இருக்காங்க,
பார்க்க நல்ல குடும்ப பாங்கான
உடை போட்டுட்டு கைல ஒரு
ஹேண்ட் பேக் கோட நிக்கிறாங்க"ன்னு..
உடனே அந்த இடத்துக்கு
நானும் என்னுடைய நண்பரும்
(உளவியல் ஆலோசகர்) போனோம்..
அந்த இடத்துலருந்து
அந்த பெண்ணை பத்திரமா
ஹாஸ்பிடலுக்கு அழச்சிட்டு வந்து
அந்த பெண்ணோட பேச ஆரம்பிச்சோம்..
சாப்டியாமா?....
இல்ல...
சரி சாப்பாடு வாங்க சொல்லிருக்கோம்
வந்ததும் சாப்டுங்க...
எந்த ஊர் நீங்க.... கன்னியாகுமரி..
ஏன் இங்க வந்துருக்கீங்க...
எனக்கு அந்த பையன் வேணும் வேணும் வேணும்... அவன பாக்கணும்...
சரி சரி.... அவர பாக்க
நாங்க ஏற்ப்பாடு பன்றோம்...
அவர உங்களுக்கு எப்படி தெரியும்...
எனக்கு Facebook லதான் அவரு பழக்கம் ஆனாரு.. என்ன லவ் பன்றாரு
அவர நான் கல்யாணம் பன்னிக்கனும்...
சரி சரி..
நீங்க என்ன படிச்சி இருக்கீங்க...
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
முடிச்சிருக்கேன்..
இவ்ளோ படிச்ச புள்ளையா இருக்கீங்க,
ஏன் இவ்ளோ தூரத்துலேந்து இந்த நேரத்துல இங்க வர்றீங்க, உங்களுக்கு எதும் ஆச்சுனா என்ன பன்றது..
சரி அப்பா அம்மா
மொபைல் நம்பர் சொல்றிங்களா...
அந்த பொண்ணு நம்பர் சொன்னாங்க
கால் பன்னோம் ...
"ரேவதியோட அம்மா வா"ன்னு
கேட்டதும்
எதிர் பக்க குரல் "ஓ"ன்னு அலறல்
அழுகையோட...
"ஐய்யா... என் பொண்ணு எங்கயா இருக்கா?
நீங்க யாரு"... னு
ஒரு பயம் கலந்த பதற்றத்தோட
அந்த அம்மா கேட்டதும்,
அம்மா நீங்க பயப்பட வேணாம்,
உங்க பொண்ணு இந்த இடத்துல ஹாஸ்பிடல்ல பத்திரமா இருக்காங்கன்னு சொல்லி அந்த பொண்ணை பத்தி
கேக்க ஆரம்பிச்சோம்...
[இதுவரை எத்தனையோ கேஸ்
இந்த ஃபீல்ட்ல பாத்துருந்தாலும்
அந்த அம்மா சொன்ன விஷயங்கள்
ரொம்ப அதிர்ச்சியா கஷ்டமா இருந்தது]
வீட்டுக்கு ஒரே பொண்ணு ரொம்ப ரொம்ப செல்லமா வழத்திருக்காங்க...
அதே நேரத்துல
ரொம்ப நல்ல பொண்ணு..
ஸ்கூல் படிக்கிற வரையிலும் எந்த பிரச்சனையுமே சந்திக்காத நல்ல பொண்ணா இருந்திருக்கு..
[ஸ்கூல் டீச்சர்ஸ் கூட இந்த பொண்ண ஒரு ரோல் மாடலா மத்த புள்ளைங்களுக்கு
சொல்ற அளவுக்கு]
அப்புறம் காலேஜ் படிக்க போறேனு சொன்னதும் இன்ஜினியரிங் காலேஜ்ல
சேர்த்து விட்ருக்காங்க..
அங்கயும் ரொம்ப நல்ல பொண்ணு தான் யார்ட்டையும் அதிகம் பழகாம வீடு விட்டா காலேஜ் காலேஜ் விட்டா வீடுன்னு இருந்துருக்கு..
செகண்ட் இயர் படிக்கும் போது ஆண்ட்ராய்டு போன் வாங்கி தர சொல்லி கேட்டிருக்கு..
அவங்க அப்பாவும் நல்ல காஸ்டலியான
மொபைல் வாங்கி கொடுத்துருக்கார்...
அந்த மொபைல் வாங்கி மூனு மாசத்துல
அந்த பொண்ணோட நடத்தையில
பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு...
சரியா அப்பா அம்மாட்ட
முன்ன போல பேசுறதில்ல...
எப்பவுமே தன்னோட தனி அறையில
மொபைல்ல கால், வீடியோ சாட் னு
பேசிகிட்டு இருந்திருக்கு...
இத அவங்க அப்பா அம்மாவும்
ஆரம்பத்துல பெருசா எடுத்துக்கல..
ஒரு நாள் ரொம்ப நேரமாகியும்
அந்த பொண்ணோட ரூம் தொறக்கவே இல்ல..
கடைசியா கதவ வேகமா தள்ளி
உள்ள போய் பார்த்தா கைய அறுத்துகிட்டு
சுய நினைவே இல்லாம கிடந்துருக்கு..
பதறிப்போய் ஹாஸ்பிடல்ல சேர்த்ததுக்கு அப்புறம் என்ன ன்னு கேட்டப்போதான்
அந்த பொண்ணு செல்லிருக்கு..
"ஒரு பையன Facebookல லவ் பன்றேன்
அவன் இல்லாம என்னால வாழ முடியாது,
அவன் இப்போலாம் என்ட பேசமாட்றான்
அதான் கைய அறுத்துகிட்டேன்"ன்னு...
பின்ன அவனோட நம்பர் பார்த்து
எடுத்து அவன்கிட்ட பேசிருக்காங்க..
அப்போ அவன் சொல்லி இருக்கான்
"நான் துபாய்ல வேலை பார்த்துட்டு இருக்கேன், எனக்கு கல்யாணம் ஆகி
2 குழந்தைங்க இருக்கு,
நான் சும்மா டைம்பாஸ் க்காக தான் பேசினேன் உங்க பொண்ணு தான்
தப்பா எடுத்துகிச்சினு சொன்னதும்,
அவங்க அப்பா கடுமையா
அவன திட்டி இருக்கார்..
"இவ்ளோ பிரச்சினைக்கும் காரணம்
அவன் தான்.. அவன் மேல போலீஸ்ல கூட
கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கோம்"னு
சொல்லி ரொம்ப நேரம் அழுதாங்க,
அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்..
அவங்கள சமாதான படுத்தி,
ஏன் உங்க பொண்ணு இங்க வந்தாங்க னு கேட்டதுக்கு,
"அவன் என் பொண்ணோட வாழ்க்கைய
சீரழிச்சிட்டு போய்ட்டான், இன்னும் அவ அவனோட நினைப்பிலயே
அலைஞ்சிட்டு இருக்கா..
அவள எவ்ளோ பத்திரமா வீட்டுல வச்சி இருந்தாலும் அங்க ஓடி போயிடுறா..
அவன தேடி வீதி வீதியா சுத்துறா,
இதோட ரெண்டு தடவை இப்படி வந்துட்டா..
அவள அங்கேயே பத்திரமா வச்சிங்கோங்க ஐயா.. நாங்க உடனே வரோம்"னு சொல்லி
போன வச்சிட்டாங்க..
இப்போ அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால தொடர் சிகிச்சையில வச்சிருக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம்..
ஏன் இவ்ளோ பெரிய பதிவா நான் இங்க பதிவிடுறேனா.. அதுக்கு இன்னிக்கி இதுபோல நிறைய பேர் இந்த முகநூல் பயன்படுத்தி, பல பெண்களோட வாழ்க்கைய சீரழிச்சிட்டு இருக்காங்க..
இந்த ஆசை பேச்சுக்கள்ல விழுந்து
சீரழியாம பெண்கள் தங்களை
பாதுகாத்துக்கனும்ங்குறதுக்கான
ஒரு விழிப்புணர்வுக்காக தான்..
அதே நேரத்துல இந்த பொண்ணுங்களும்
எவ்ளோ சம்பவங்கள் கேள்வி பட்டாலும் தெரிஞ்சாலும்,
திரும்பவும் பல பேர் இப்படி சிக்கி சின்னாபின்னாமாகிட்டே தான்
இருக்காங்க...
இந்த சம்பவத்தையும் சாதாரணமா கடந்து போய்டாம,
யாரோ ஒருவர் வாழ்க்கை இந்த மாதிரி பாதிக்கப்படப்போகுதுனு உங்களுக்கு முன் கூட்டியே தெரிஞ்சா தயவுசெய்து அவங்கள காப்பாத்துங்க..
#பின்குறிப்பு:
இதை நான் முகநூலில் பார்த்து விட்டு பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் share செய்து இருக்கிறேன்.
முடிஞ்சா ஷேர் பண்ணி
ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்க ..

இனியாவின் கருத்துவிஜய்க்கு இவ்வளவு முட்டு கொடுக்கிறிங்களடா..அடுத்த விஜய் மீட்டிங்ல உன் சொந்த பொண்டாட்டி, உன் குழந்தையை த...
01/10/2025

இனியாவின் கருத்து

விஜய்க்கு இவ்வளவு முட்டு கொடுக்கிறிங்களடா..
அடுத்த விஜய் மீட்டிங்ல உன் சொந்த பொண்டாட்டி, உன் குழந்தையை தூக்கிட்டு போவிங்களடா?!

அடப்பாவி எருமை ய கேவலப்படுத்திட்டீங்களே 🤣🤣🤣சனிக்கிழமை சனிதிராவிடன்
01/10/2025

அடப்பாவி எருமை ய கேவலப்படுத்திட்டீங்களே 🤣🤣🤣

சனிக்கிழமை சனி

திராவிடன்

Aravind Raja •பழிவாங்கனும்னு நினைச்சா நான் வீட்ல இருப்பேன் இல்ல ஆபிஸ்ல இருப்பேன்.~ தூக்கனும்னு நினைச்சா உலகத்துல நீ எந்த...
01/10/2025

Aravind Raja •
பழிவாங்கனும்னு நினைச்சா நான் வீட்ல இருப்பேன் இல்ல ஆபிஸ்ல இருப்பேன்.
~ தூக்கனும்னு நினைச்சா உலகத்துல நீ எந்த மூலைல இருந்தாலும் தூக்கிருவாங்க மூதேவி.🤡

Tamil Ka Amutharasan அண்ணன்  சாப்பிடலை அண்ணன் தூங்கல அண்ணன் குளிக்கல அண்ணன் 3 நாள் தூங்காமல் , கண் சிவந்து போய் இருக்கும...
01/10/2025

Tamil Ka Amutharasan

அண்ணன் சாப்பிடலை
அண்ணன் தூங்கல
அண்ணன் குளிக்கல
அண்ணன் 3 நாள் தூங்காமல் , கண் சிவந்து போய் இருக்கும்
அப்படி தானே நெனச்சீங்க ?
மீசை, தாடி Style ஆ trim பண்ணிட்டு…. Touch up பண்ணிட்டு ..A/C room ல background music வச்சு, fresh ஆ வீடியோ போடுவாருன்னு நினைக்கலைல….
இவன் ஒரு சைக்கோ

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும...
01/10/2025

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசாக வழங்கினார்.

Kalaignar Seithigalகரூர் மாவட்ட மக்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி!
01/10/2025

Kalaignar Seithigal

கரூர் மாவட்ட மக்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி!

Kalaignar Seithigalவலிகளை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது!
01/10/2025

Kalaignar Seithigal

வலிகளை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது!

Kalaignar Seithigalஇடத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்!
01/10/2025

Kalaignar Seithigal

இடத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்!

Kalaignar Seithigalகுடிநீர் இன்றி தவித்துள்ளார்கள்!
01/10/2025

Kalaignar Seithigal

குடிநீர் இன்றி தவித்துள்ளார்கள்!

Kalaignar Seithigal“ஒருத்தர், ’நான் எல்லா நாளும் வண்டி ஓட்டுகிறேன். இன்னைக்கு மட்டும் எப்படி விபத்து நடந்தது?’ என்று கேட...
01/10/2025

Kalaignar Seithigal

“ஒருத்தர், ’நான் எல்லா நாளும் வண்டி ஓட்டுகிறேன். இன்னைக்கு மட்டும் எப்படி விபத்து நடந்தது?’ என்று கேட்பது போல உள்ளது விஜயின் கேள்வி.”

- கரூரில் மட்டும் இப்படி ஒரு சம்பவம் எப்படி நடந்தது? என்று கேட்ட விஜய்க்கு திமுக மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ பதிலடி!

Kalaignar Seithigal ·தவெக சூழ்ச்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்!
01/10/2025

Kalaignar Seithigal
·
தவெக சூழ்ச்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்!

Address

Kodambakkam
Chennai
600024

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம்:

Share

WORLD TAMIL SANGAM - உலகத் தமிழ்ச் சங்கம்

உலகிலுள்ள அனைத்து தமிழர்களின் உரிமைக் குரல்! வாழ்க தமிழ்! வெல்க தமிழனம்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர் பண்பாடு பற்றிய பெருமையை பறை சாற்றும் தளம்! Popularize Yourself Worldwide by Your Wisdom, Life Skills, Health, Wealth, Humour, Happiness, Success and Humanitarian Welfare! A Forum of Eminent Tamil Intellectuals and Intelligentsia!