04/02/2024
சங்கம்4 - அரங்கம் 57 -காந்தி மகாத்மாவா? | திரு. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்
சங்கம் 57 - காந்தி மகாத்மாவா ?
சிறப்புரை :
திரு கடற்கரை மத்தவிலாச அங்கதம்
- சொந்த ஊர் விருதச்சலம், சென்னையில் பம்மல் பகுதியில் வசித்து வருபவர்.
- இஸ்லாமியராகப் பிறந்து, பின்னர் மத அடையாளத்தைத் துறப்பதற்காக, “கடற்கரய்” எனப் பெயர் சூட்டிக் கொண்டவர்.
- பள்ளிப் படிப்பைக் கைவிட நேரந்தாலும், தளராமல் மின்னியல் பட்டயத்தையும் & பொருளாதாரத்தில் பட்டத்தையும் பெற்றவர்.
- 23 வருட முழுநேர ஊடகத்துறைப் பணி, ஆய்வுத்துறையில் தீவிரத் தனி இயக்கம், குறிப்பாக பாரதி & காந்தி குறித்த ஆராய்ச்சி, மற்றும் தனித்துவமான புனைப்பெயர் ஆகியவற்றால் சிறப்பாக அறியப்படும் பத்திரிகையாளர்/ஆய்வாளர்.
- குங்குமத்தில் 3 ஆண்டுகள், குமுதத்தில் 12 ஆண்டுகள், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 3 ஆண்டுகள் ஊடகப் பணியாற்றி இருப்பவர்.
- காந்தியடிகளுடன் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றிய தமிழர்களின் ஆவணங்களைத் திரட்டிப் பதிப்பித்துள்ளவர்.
- காந்தியடிகள் கொலை செய்யப்பட்டது குறித்து ஆராய்ந்து, 70 ஆண்டு பழமையான ஆவணங்களைக் கண்டறிந்து 'காந்தி படுகொலை - பத்திரிகைப் பதிவுகள்' என்ற நூலை வெளியிட்டுள்ளவர்.
- இந்த நூலுக்கு, காந்திகிராமப் பல்கலைக்கழகமும் சாகித்ய அகாடமியும் இணைந்து வெளியிட்டு விழா நடத்தியது, நூலின் சிறப்புக்குச் சான்று.
- பாரதியோடு வாழ்ந்த நண்பர்களின் பாரதி அனுபவங்களை ‘பாரதி விஜயம்’ என, 1200 பக்க நூலாக்கி வெளியிட்டதோடு, இரண்டாம் பாகமும் வெளியிட்டுள்ளவர்.
- பாரதி வரலாற்றில் முக்கியமான யதுகிரியின் ‘பாரதி நினைவுகள்’ என்ற நூல்சார்ந்த 80 ஆண்டு பழைய ஆவணங்களை, யதுகிரியின் சந்ததியினர் தந்த தரவுகளுடன் பதிப்பித்துள்ளவர்.
- பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, பாரதி பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளைத் திரட்டி, 1400 பக்கங்களில் 'யாமறிந்த புலவன்' என்ற தலைப்பில் நூலாக்கி வெளியிட்டுள்ளவர். இந்நூலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது மாபெரும் அங்கீகாரம்.
- இதுவரை 6 கவிதைத் தொகுதிகளை வழங்கியுள்ளவர் ; 2016 ஆண்டு, தனது ‘உலகம் சுற்றிய தமிழர்’ நூலுக்காக ‘ஆனந்த விகடன்’ விருதை வென்றவர்.
- ‘விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்’ என்ற நம்மாழ்வாரின் நேர்காணல் நூலாலும், 'அணிநிழற் காடு' என்ற நேர்காணல் தொகுப்பாலும், சூழலியல் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியவர்.
- தமிழ் இலக்கிய முன்னோடிப் பத்திரிகையான ‘மணிக்கொடி’யை ஆராய்ந்து ‘மணிக்கொடி சினிமா’ எனும் ஓர் ஆய்வுநூலை வெளியிட்டுள்ளவர்.
காந்தியார் பற்றி உரை வழங்கத் தகுதி பெற்ற
திரு கடற்கரை மத்தவிலாச அங்கதம் அவர்கள்
வரும் 4 பிப்ரவரி 2023 ஞாயிறு அன்று இந்திய நேரம் மாலை 6 மணிக்கு
சங்கம்4 ஐரோப்பா 57-ஆம் அரங்கில் “* காந்தி மகாத்மாவா ?*” என்ற தலைப்பில்
உரையாற்றுகிறார்.
தவறாமல் இணையவும். நன்றி.
- தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பர்
- இறை.மதியழகன், சிங்கப்பூர்
- குமாரசாமி, ஜெர்மனி
- இராமன் வேலு, டல்லாஸ்(USA)
The Rise Global is inviting you to a scheduled Zoom meeting.
Topic: சங்கம்4 - அரங்கம் 57 -காந்தி மகாத்மாவா? | திரு. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்
Time: Feb 4, 2024 06:00 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89041948055?pwd=WmZxT2djcUszYnJ2anREM2Ezc2p5dz09
Meeting ID: 890 4194 8055
Passcode: sangam4