Left Lane Tamil

Left Lane Tamil ஒடுக்கப்படுபவர்களின் வாழ்வியலையும்; அவர்களுக்கான அரசியலையும் முன்னெடுக்கும்
Left Lane தமிழ்!
(4)

LeftLane Tamil is a dynamic and influential platform dedicated to providing comprehensive coverage and analysis of political developments within the Tamil Nadu region and beyond. With an unwavering commitment to unbiased reporting and in-depth journalism, this channel serves as a go-to source for viewers seeking to stay informed about the latest political happenings. Our channel stands out by focu

sing on the left-leaning perspectives and ideologies, presenting a diverse range of voices that challenge mainstream narratives and the Ideologies of Social Justice, Liberty, Equality, Fraternity, Uplifting Sovereignty and the Constitution. We delve into the intricacies of political issues, dissecting policies, and offering viewers a nuanced understanding of the socio-political landscape. Whether you are a seasoned political enthusiast or a casual viewer wanting to stay updated on the political landscape, LeftLane Tamil Political Channel strives to be your reliable source for insightful, thought-provoking, and unbiased political content.

UPI பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணமில்லை – PCI..!நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால் குழப்பம் நிலவும் நிலைய...
08/08/2026

UPI பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணமில்லை – PCI..!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால் குழப்பம் நிலவும் நிலையில், UPI பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர் மற்றும் பணத்தைப் பெறும் சிறு வணிகர்களிடம் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) உறுதி செய்துள்ளது.

தாயின் பூர்வீகத்தில் சாதிச் சான்றிதழ்!சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆகஸ்ட் 6-ல் மனுதாரர்களுக்கு தாயின் பூர்வீக அடிப்...
08/08/2026

தாயின் பூர்வீகத்தில் சாதிச் சான்றிதழ்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆகஸ்ட் 6-ல் மனுதாரர்களுக்கு தாயின் பூர்வீக அடிப்படையில் சாதிச் சான்றிதழ்களை புதுச்சேரி அரசு வழங்கியது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, புதுச்சேரி அரசின் மேல்முறையீட்டை முடித்து வைத்தது.

கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது - RBI..!கடன் வாங்​கிய​வர்​களை மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை த...
08/08/2026

கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது - RBI..!

கடன் வாங்​கிய​வர்​களை மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை தருதல் போன்ற செயல்களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடு​படக்​ கூ​டாது என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதி​களை வெளியிட்டுள்​ளது. வங்​கி​கள் மற்​றும் வசூல் முகவர்​களுக்​கான இந்த விதி​முறை​கள் 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நாடு முழு​வதும் அதி​காரப்​பூர்​வ​மாக அமலுக்கு வரவுள்​ளன.

இந்தியாக்கு 100% வரி..!ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது கூடுதலாக 100% வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக...
08/08/2026

இந்தியாக்கு 100% வரி..!

ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது கூடுதலாக 100% வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் , ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கும் வகையிலும் புதிய மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்றம்.

FCRA திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!🪧சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு FCRA  மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத...
08/08/2026

FCRA திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!🪧

சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு FCRA மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப்பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் பிற அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு..!தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக்...
08/08/2026

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு..!

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் பங்கேற்க மறுப்பு. கர்நாடக மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்து பங்கேற்க மறுப்பு.

நீட் எதிர்ப்பு பட்டினிப் போராட்டம்!🪧தமிழ்நாடு நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை கோயம்பேட்டில்  தமிழக வாழ்வுரிம...
08/08/2026

நீட் எதிர்ப்பு பட்டினிப் போராட்டம்!🪧

தமிழ்நாடு நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில் 8வது நாளாக பட்டினி போராட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற 2 பிரதான கோரிக்கைகளை முன் வைத்து பட்டினிப் போராட்டம்.

UPI பரிவர்த்தனை கட்டண முன்மொழிவு - CPI-M கண்டனம்..!UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் ஒன்றிய அரசின் முன்மொழிவுக்க...
08/08/2026

UPI பரிவர்த்தனை கட்டண முன்மொழிவு - CPI-M கண்டனம்..!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் ஒன்றிய அரசின் முன்மொழிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.கட்டண முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற்று, UPI சேவையை அனைவருக்கும் இலவசமாகத் தொடர வேண்டும் என வலியுறுத்தல்.

07/08/2026

நிதி பகிர்வு தனி தீர்மானம் நிறைவேற்றம்! | TN Budget | TVK Vijay | Left Lane Tamil

அமெரிக்க குடியேற்ற விண்ணப்பத்திற்கு புதிய கட்டுப்பாடு!அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களில் தகுதிக்கான ஆதாரங்களை முழும...
07/08/2026

அமெரிக்க குடியேற்ற விண்ணப்பத்திற்கு புதிய கட்டுப்பாடு!

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களில் தகுதிக்கான ஆதாரங்களை முழுமையாக சமர்ப்பிக்கத் தவறினால், முன்னறிவிப்பின்றி விண்ணப்பங்களை நிராகரிக்க USCIS அனுமதி வழங்கியுள்ளது. முன்பு இருந்த 12 வார திருத்த அவகாசம் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

Address

129, NTR Garden Street, KG NTR Heritage, Rangarajapuram, Kodambakkam
Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when Left Lane Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Left Lane Tamil:

Shortcuts

Share