TIMES 24x7

TIMES 24x7 Tamil News

Times 24x7 include war, government, politics, education, health, the environment, economy, business, and entertainment, as well as athletic events, quirky or unusual events, Government proclamations, concerning royal ceremonies, laws, taxes, public health, and criminals.Humans exhibit a nearly universal desire to learn and share news, which they satisfy by talking to each other and sharing informa

tion.Times 24x7 have increased the speed with which news can spread, as well as influenced its content through Technological and social developments in Tamil language.

https://youtu.be/twd0gIwJgvY
10/02/2018

https://youtu.be/twd0gIwJgvY

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள டாலர் நூற்பாலையில் புதுக்கோட்டை மாவட்டம் கைக.....

https://www.youtube.com/watch?v=RlZMsAk-3lM
08/02/2018

https://www.youtube.com/watch?v=RlZMsAk-3lM

திண்டுக்கல் ஜல்லிக்கட்டில் 21 வருட மாடுபிடி வீரர்வீர மரணம் ... இந்த பூ கட்டும் ஏழைத் தொழிலாளி குடும்பத்திற்கு உத.....

https://youtu.be/xLdHWspxQ1M
06/02/2018

https://youtu.be/xLdHWspxQ1M

நூற்பாலையில் குழந்தை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு உறவினர்கள் நூற்பாலையை முற்றுகையிட்டு போராட்டம் ப.....

https://www.youtube.com/watch?v=f3FC8Uy7rAc
03/02/2018

https://www.youtube.com/watch?v=f3FC8Uy7rAc

தீ விபத்து 2 லட்சம் மதிப்புள்ள விவசாய பயிர்கள் எரிந்து சேதம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல...

10/01/2018

ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ஊழல் முறைகேடு குறித்த செய்தியில், சிறு தவறு அல்லது அந்த செய்தியை வெளியிடுவதில் காட்டப்படும் ஆர்வத்தை அவதூறாக கருத முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

நிலம் ஒதுக்கியது குறித்த செய்தி
பீகாரை சேர்ந்த பெண் ஒருவரின் தாய், அந்த மாநிலத்தின் அமைச்சராக இருந்துள்ளார். அவரது தந்தை மூத்த அரசு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அந்த பெண்ணுக்கு பீஹார் தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான பகுதியில், உணவு பதப்படுத்தும் ஆலை துவக்குவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹிந்தி 'டிவி' சேனலில் ஒரு செய்தி வெளியானது. இந்த செய்தி தன்னை அவதூறாக சித்தரிப்பதாக கூறி அந்த பெண் தொடர்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்க முயன்றது. இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கீ்ழ் நீதிமன்ற விசாரணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த பெண் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

இது அவதுாறு அல்ல
ஜனநாயகம் உள்ள நாட்டில் வாழும் போது சகிப்புதன்மையை கற்றுக் கொள்ள வேண்டும். அவதூறு என்பது அரசியல் சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால், ஊழல் முறைகேடு குறித்து வெளியான தவறான செய்தியை அவதூறாக கருத முடியாது.

ஊழல் முறைகேடு குறித்து செய்தி வெளியிடும் போது அதில் சிறு தவறு நடந்து இருக்கலாம். அல்லது அதில் கூடுதல் ஆர்வம் காட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் நாம், ஊடகங்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக அளிக்க வேண்டும். செய்தி வெளியானதில் தவறு இருந்து இருக்கலாம். அதற்காக அதை அவதூறாக கருத கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://www.youtube.com/watch?v=sd2WglRSD3Q&feature=youtu.be
21/07/2017

https://www.youtube.com/watch?v=sd2WglRSD3Q&feature=youtu.be

அரசு பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு, ஒரு பாட்டில் தண்ணீருக்கு ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை

அதிகவேக இன்டர்நெட் சேவைக்கு 3 செயற்கைகோள்: இஸ்ரோ திட்டம்புதுடில்லி : இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவையை அளிப்பதற்காக ...
18/05/2017

அதிகவேக இன்டர்நெட் சேவைக்கு 3 செயற்கைகோள்: இஸ்ரோ திட்டம்

புதுடில்லி : இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவையை அளிப்பதற்காக 3 தொலைத் தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஜி சாட் 19, ஜி சாட் 11, ஜி சாட் 20 ஆகிய 3 செயற்கைகோள்களையும் அடுத்த 18 மாதங்களில் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படுவதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிவி, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிகளின் எதிர்கால தொலைத்தொடர்பு சேவைக்கும் இந்த செயற்கைகோள்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் ஜிசாட் 19 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இன்டர்நெட் மூலம் தொலைத்தொடர் தொழில்நுட்பத்தை மேலும் எளிதாக்குவதுடன், இன்டர்நெட் மூலம் வயர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம் கொண்ட டிவி.,க்களையும் பயன்படுத்த வழிவகை செய்யும். இந்த இன்டர்நெட் சேவைகள் வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு அதிவேகம், குறைந்த விலை, கையாள எளிமையான முறையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஜிசாட் 11 செயற்கைகோள் அடுத்த ஆண்டு ஜனவரியிலும், ஜிசாட் 20 அடுத்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தபட உள்ளது. நாடு முழுவதும் விநாடிக்கு 70 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேடா வழங்க இந்த செயற்கைகோள்களை பயன்படுத்துவதே எங்கள் நோக்கம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நாத்திக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!காலில் முள் குத்தினாலே, வலியில், எல்லா கடவுள்களையும் உதவிக்கு அழைப்போருக்கு மத்தியில்,...
18/05/2017

நாத்திக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!

காலில் முள் குத்தினாலே, வலியில், எல்லா கடவுள்களையும் உதவிக்கு அழைப்போருக்கு மத்தியில், 20 வயதில், மோட்டோர் நியூரான் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வலது கையின் இரு விரல்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டுடன் மட்டுமே, 75 வயது வரை வாழ்ந்து வரும், ஸ்டீபன் ஹாக்கிங், கடவுள் இல்லை என்று சவால் விட்டு, வாழ்ந்து வருகிறார்.
தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, விஞ்ஞான சிந்தனைகளால், உலகை வியக்க வைக்கும் இவர், ஊனமுற்றவர் என்று, மூலையில் முடங்கி விடவில்லை. சீனா பெருஞ்சுவரை சுற்றிப் பார்ப்பது, நீர் மூழ்கி கப்பலில், கடலுக்கு கீழே பயணிப்பது என்று, எப்போதும், சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
'வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனர்; அவர்கள் பூமிக்கு வருகின்றனர்...' என்று கூறும் இந்த நாத்திக விஞ்ஞானியின், ஆசை என்ன தெரியுமா... விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே!

'செயற்கை கருப்பை'யில் வளர்ந்த ஆட்டுக்குட்டி!குறைப் பிரசவத்தில் பிறந்த ஆடு ஒன்றை, 'செயற்கை கருப்பை'யில் வைத்து வளர்த்து ம...
05/05/2017

'செயற்கை கருப்பை'யில் வளர்ந்த ஆட்டுக்குட்டி!

குறைப் பிரசவத்தில் பிறந்த ஆடு ஒன்றை, 'செயற்கை கருப்பை'யில் வைத்து வளர்த்து மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இந்த பரிசோதனையின் முடிவு, 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரின் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆலன் பிளேக் இந்த சாதனையை செய்துள்ளார். ஏற்கனவே செயற்கை கருப்பை பரிசோதனைகள் பல நடந்து வருகின்றன. ஆனால், இயற்கையான கருப்பையில் சிசுவைச் சூழ்ந்திருக்கும் பனிக்குட திரவம் உட்பட அனைத்தையும், செயற்கையாக உருவாக்கி, அதை ஒரு செயற்கைப் பையில் அடைத்து, சில வாரங்கள் சிசுவை வளர்த்து இருப்பது இதுவே முதல் முறை. கருப்பையில் ஆட்டின் சிசு மிதக்கும் திரவத்தை சுத்திகரிக்கவும், ஆக்சிஜன் மற்றும் இதர சத்துக்களை செலுத்தவும், பையிற்கு வெளியே உள்ள ஒரு கருவி பயன்படுத்தப்பட்டது. இதனால், குறைப் பிரசவத்தில் வெளியுலகிற்கு வரும் சிசுக்கள் படும் பல அவஸ்தைகள் குறைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் பிளேக் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

செயற்கை கருப்பையில் சில ஆடுகள் நான்கு வாரம் வரை வைத்து வளர்க்கப்பட்டன. அவற்றில் சில ஆடுகளுக்கு நோய்த் தொற்று போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால், ஒரு ஆடு ஆரோக்கியமாக வளர்ந்து, 'நார்மல் வார்டுக்கு' வந்து, ஒரு வயதை கடந்திருப்பதாக மருத்துவர் பிளேக் தெரிவித்தார். குறைப் பிரசவத்தில் பிறக்கும் மனித சிசுக்களுக்கு இதே போன்ற செயற்கை கருப்பையை பயன்படுத்தும் பரிசோதனையை மேற்கொள்ள, 'மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்' என்று பிளேக் கூறினார்.

கல்விக் கடன் மறுத்த வங்கிக்கு நீதிமன்றம் கண்டனம்பெற்றோர் வாங்கிய கடன் நிலுவைக்காக, கல்விக் கடன்கேட்டு விண்ணப்பித்த மகளுக...
03/03/2017

கல்விக் கடன் மறுத்த வங்கிக்கு நீதிமன்றம் கண்டனம்

பெற்றோர் வாங்கிய கடன் நிலுவைக்காக, கல்விக் கடன்கேட்டு விண்ணப்பித்த மகளுக்கு கடன் வழங்க மறுத்த வங்கியின் செயலை உயர்நீதிமன்றம் கண்டித்தள்ளது.

அந்த மாணவிக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்கும்படியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவியான ஆர். சஹானா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2008ம் ஆண்டு முகப்பேரில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் கல்விக் கடன் பெற்றேன். 2009லும் கல்விக் கடன் கிடைத்தது. ஆனால், 2010ம் ஆண்டில், அதே வங்கியில் எனது பெற்றோர் வியாபாரத்திற்காக பெற்ற கடன் பாக்கி நிலுவையில் உள்ளதைக் காரணம் கூறி எனக்கு கல்விக் கடன் வழங்க வங்கி மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மூன்றாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு கட்டினர். ஆனால் இறுதியாண்டு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, முதலாம் ஆண்டில் எனக்கு வழங்குவதாக அறிவித்த கல்விக் கடனை தொடர்ந்து வழங்க வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாணவிக்கு வழங்க வேண்டிய கல்விக் கடனின் மீதித் தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டார். எந்த நோக்கத்திற்காக கல்விக் கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு முரணாக வங்கி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இறதியாண்டு படிக்கும் மாணவிக்கு கடன் மறுத்தது சரியானது அல்ல. பெற்றோரின் கடன் நிலுவைக்காக மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுக்கக் கூடாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சி., மாணவர்களுக்கு கல்விக் கடன்எஸ்.சி. பிரிவு மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வ...
03/03/2017

எஸ்.சி., மாணவர்களுக்கு கல்விக் கடன்

எஸ்.சி. பிரிவு மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம் வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.

பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., பயோ டெக்னாலஜி, ஆர்கிடெக்சர், கல்வி, சட்டம், நர்சிங், இதழியல், பிஎச்.டி., சி.ஏ. அல்லது ஐசிடபிள்யுஏ போன்ற படிப்புகளை படிக்கும் எஸ்.சி., மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

பிற்பட்ட வகுப்பினருக்கான கல்விக் கடன்பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில ...
03/03/2017

பிற்பட்ட வகுப்பினருக்கான கல்விக் கடன்

பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய பிற்பட்ட வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம் வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள பிற்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.

பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

Address

Annanagar
Chennai
600040

Alerts

Be the first to know and let us send you an email when TIMES 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIMES 24x7:

Share