
21/09/2025
அரசியல் ட்ராமா, அதிரடி பேச்சுகள்… சக்தி திருமுகன் ஹிட் ஆ? மிஸ் ஆ?
விஜய் ஆண்டனி எப்போதும் சற்றே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் கொண்டவர். இந்த முறை அவர் நடித்தும், தயாரித்தும், இசையமைத்தும் வந்திருக்கும் சக்தி திருமுகன் ஒரு பொலிட்டிகல் திரில்லர்.
படம் தொடங்கும் முதல் அரைமணி நேரத்தில் தான் – ஒரு பழங்குடி பெண்ணின் மரணம், அதை “சுயகொலை” என்று மறைக்க முயலும் அரசியல் கும்பல், அதிலிருந்து பிறக்கும் குழந்தை… அங்கிருந்து கதையை உச்சக்கட்ட சஸ்பென்ஸுடன் நம்மை இழுத்துச் செல்கிறது. அந்த நேரத்தில் நம்மக்கு “அடா… சுத்தமான வேற மாதிரி படம் பாக்கறோமே!” என்றே தோன்றும்.
விஜய் ஆண்டனி இந்த முறை “ஹீரோ” போல சீராக நடந்து செல்லும் கதாபாத்திரம் அல்ல. அவர் “கிட்டு” என்ற ஒரு ப்ரோக்கர் மாதிரி – அரசியல்வாதிகளின் மறைமுக வேலைகளை சரிசெய்பவன். நல்லவரா, கெட்டவரா என்ற கலவையில் இருப்பது, கதைக்கு ஒரு புதுசு சுவை.
ஆனா பிரச்சனை எங்கே தெரியுமா? இரண்டாம் பாதி!
முதல் பாதியில் கொடுத்த அதிரடி, அதிர்ச்சி எல்லாம் அடுத்த பாதியில் மெல்ல குறைய தொடங்குகிறது. இடம் பிடிக்காத நீண்ட உரைகள், எதையும் புரிய வைக்க “கற்பிப்பது” மாதிரி வரும் டயலாக்கள் – படம் சீராக பாயும் போக்கை சிதறடிக்கின்றன. ஒரு கட்டத்தில் “இது சினிமாவா? இல்ல பிரசங்கமா?” என்று தோன்றும் நிலை.
டெக்னிக்கல் சைட்ல பிளஸ் பாயிண்ட் தான். விஜய் ஆண்டனி இசை, ஷெல்லி காலிஸ்ட் கேமரா – சில சண்டை காட்சிகள், சில உரையாடல் சினிமாட்டிக் டோன் எல்லாம் அருமையாக இருக்கு. ஆனா சில சீன்கள் லாஜிக் எல்லாம் பறக்க, “அவ்வளவு சுலபமா உலகமே மாறிடுதா?” என்று சிரிப்பும் வரும்.
மொத்தத்தில் – சக்தி திருமுகன் ஒரு நல்ல அரசியல் திரில்லராக துவங்கினாலும், பாதியிலேயே சோர்ந்து போகும் படம். சினிமாவை ரசிக்க வந்தவருக்கு அரை நேரம் ருசியாக இருக்கும், அடுத்த அரை நேரம் “இப்போ முடிஞ்சுடுமா?”ன்னு தோன்றும்.
அரசியல் பேச்சுகள், பவர் கேம்ஸ் எல்லாம் பிடிக்கும் என்றால் ஒரு முறை பார்க்கலாம்.
ஆனால் சீரான திரில்லர், டைட்டான கட்டமைப்பு தேடுபவருக்கு இங்க சற்று ஏமாற்றமே.