மணி மேகலை

மணி மேகலை Some of the clips in video are not owned by me, if any copyright issue please contact massage whatsapp
(456)

எனக்கு இன்று பிறந்தநாள் ஒரு வாழ்த்து சொல்வீர்களா அண்ணா அக்கா
22/09/2025

எனக்கு இன்று பிறந்தநாள் ஒரு வாழ்த்து சொல்வீர்களா அண்ணா அக்கா

வாய் பேச முடியாத எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்களா
28/08/2025

வாய் பேச முடியாத எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்களா

90ஸ் கிட்ஸ் யாராவது இருந்தால் ஒரு லைக் போட்டு போங்க
25/08/2025

90ஸ் கிட்ஸ் யாராவது இருந்தால் ஒரு லைக் போட்டு போங்க

21/08/2025
எங்கள் வீடுகளில் பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் வெற்றிலையைக் களிப்பாக்கு மற்றும் சுண்ணாம்புடன் சேர...
03/08/2025

எங்கள் வீடுகளில் பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் வெற்றிலையைக் களிப்பாக்கு மற்றும் சுண்ணாம்புடன் சேர்த்துக் கட்டாயம் மெல்ல வைப்பார்கள் .

இதனால் அப்பெண்களுக்குச் செரிமானம் நன்கு ஆவதோடு பிரசவ காலத்தில் ஏற்பட்ட இரத்த இழப்பு ஈடு செய்யப்படுகிறது என்பது கண்கூடாகக் கண்ட உண்மை !

வெற்றிலையில் சிறிது விளக்கெண்ணெய் தடவி.. நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றப்பட்ட அகல் விளக்கில் காட்டினால் அந்த வெற்றிலையில் தீபச் சுடர் பட்டுக் கருமையாகப் படியும். அதை விரலால் வழித்தெடுத்து ஒரு கொட்டாங்கச்சியில் சேகரிப்போம். அதைத் தான் பச்சிளங் குழந்தைக்குப் பொட்டு வைக்கவும் கண்களில் மையமாக இடவும் பயன்படுத்துவோம்.

ஏதாவது காணாக்கடி ஏற்பட்டால் (அதாவது இன்ன பூச்சி தான் கடித்தது என்று தெரியாத ஒரு நிலை) மூன்று நான்கு வெற்றிலையுடன் சிறிது கல்லுப்பு மற்றும் நாலைந்து மிளகு சேர்த்து நன்கு மென்று விழுங்கினால் அந்தக் கடி விஷம் விரைவாகப் பரவாது என்பார்கள் எங்கள் கிராமத்தில். அதோடு பூச்சிக் கடியினால் ஏற்பட்ட கடுகடுப்பும் சில நிமிடங்களில் குறையத் தொடங்கும்.

வெற்றிலையை விளக்கெண்ணெய் விட்டு நன்கு வதக்கிப் பழுத்து நிற்கும் கட்டியின் மேல் வைத்து வைத்து எடுத்தால் கட்டி உடைந்து விடும்.

இரண்டு வெற்றிலை.. கொஞ்சம் துளசி.. மற்றும் ஓமவல்லித் தழை.. அல்லது அரை டீஸ்பூன் ஓமம்.. ஓரிரு பூண்டுப் பற்கள்.. ஓரிரு சின்ன வெங்காயம்.. ஒரு சிறிய துண்டு சுக்கு வைத்து நன்கு அம்மியில் அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு சாப்பிட நெஞ்சுச் சளி கரையும்.

சின்னச் குழந்தைகளுக்குக் கூடச் சிறிது தேன் சேர்த்துப் போட்டி விடலாம்.

வாந்தி மூலமோ.. மூன்று நான்கு முறை ஏற்படும் வயிற்றோட்டம் மூலமாகவோ சளி கரைந்து வெளியேறிவிடும் விடும்.

நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ முறைகளைப் பின்பற்றி நலமே வாழ….

நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பர்களே

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிர...
01/06/2025

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்…

அந்த வட்டாரத்தில் இவர் கடை மிகவும் பிரபலம்...

ஒரு நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே

"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க

தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப் போல பெரிய அளவு முன்னேறி இருக்கலாம் இல்ல" என்றார்....

அதைக் கேட்ட அந்த சமோசா கடைப் பெரியவர் புன்னகைத்து விட்டுச் சொன்னார்...

"இல்லை, நான் இப்போது உங்களை விட நன்றாகவே முன்னேறி இருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்தத் தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்றப் போது நீங்கள் இந்தக் கம்பெனியில் அப்போ தான் வேலைக்குச் சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபாய்...

அப்போது உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமாக இந்தக் கடை இருக்கு...

இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்....

நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப் போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்துக் கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்கு மட்டும் தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து தான் துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்...

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க...

ஒருவேளை உங்க மகன் என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்...

அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு ஓடியே விட்டார்...

கதையின் நீதி:-

சொந்தத் தொழிலும், விவசாயமும் கைக்கொடுப்பது போல வேறு எதுவுமே நிச்சயமாக கைக்கொடுக்காது…

அடுத்தவர்களுக்கு உழைத்து உழைத்து ஓடாய் போவதை விட நம்முடைய மூளையை நமக்கு ஏற்றத் தொழிலில் இறக்குவது மட்டும் தான் நமக்கு நல்லது .

ஒரு லைக் வருமா அண்ணாமலைக்கு
25/05/2025

ஒரு லைக் வருமா அண்ணாமலைக்கு

லட்டு செஞ்சு இருக்கேன்.. ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 😊😊😊
25/05/2025

லட்டு செஞ்சு இருக்கேன்.. ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 😊😊😊

 #பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு  #பெயர்கள்....கோவில் உண்...
24/05/2025

#பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்....

கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் #காணிக்கை...

யாசிப்பவருக்கு கொடுத்தால்
#பிச்சை...

அர்ச்சகருக்குக் கொடுத்தால்
#தட்சணை....

கல்விக் கூடங்களில்
#கட்டணம்...

திருமணத்தில்
#சீதனம்....

திருமண விலக்கில்
#ஜீவனாம்சம்....

விபத்துகளில் இறந்தால்
#நஷ்டஈடு...

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் #காப்பீடு....

வங்கிகளில் வைத்தால் #வைப்புந்தொகை...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#தர்மம்....

நாமாக விரும்பி ஏழைகளுக்குக்
கொடுத்தால்
#தானம்...

திருமண வீடுகளில் பரிசாக
#மொய்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது
#கடன்....

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது
#அன்பளிப்பு...

விரும்பிக் கொடுத்தால்
#நன்கொடை....

நீதிமன்றத்தில் செலுத்தினால்
#அபராதம்....

அரசுக்குச் செலுத்தினால்
#வரி....

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது
#நிதி...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது
#சம்பளம்...

தினமும் கிடைப்பது
#கூலி...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம்.....

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
#லஞ்சம்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல்...

வாங்கியக் கடனுடன்
கொடுக்கும் போது
#வட்டி....

தொழில் தொடங்கும் போது
#முதலீடு...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #லாபம்.....

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை....

ஹோட்டலில் நல்குவது
#டிப்ஸ்.....

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

Address

3 Sami Street
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மணி மேகலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category