16/05/2024
Received "Best Social Entrepreneur" Award at Malaysia.
கடந்த மே 5 ஆம் தேதி, மலேசியா தலைநகர், கோலாலம்பூரில், கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெற்ற, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மலேசியா முத்தமிழ் படிப்பகம் மற்றும் தமிழ்நாடு மலர்க்கண்ணன் பதிப்பகம் இணைந்து நடத்திய "இலக்கியத் திருவிழா 2024" நிகழ்வில் நமக்கு "BEST SOCIAL ENTREPRENEUR" என்கிற விருது வழங்கப்பட்டது.
தமிழ் பேசும் நல் உள்ளங்கள் வணிகர்களாக, வியாபாரிகளாக உலகெங்கும் கோலோச்ச வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து பயிற்சி பட்டறைகளை தமிழில் வழங்கி வருவதற்காகவும், தொடர்ந்து தமிழில் நூல்களை வெளியிட்டு வருவதற்காகவும் இந்த விருது நமக்கு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில், சர்வதேச அரங்கில் முதல் விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.
மேலும் "மொழியும், வணிகமும் இனம் பெருக்கும் ஆயுதங்கள்" என்கிற தலைப்பில் சிற்றுரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. அதற்கு நல்ல வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தன. புது மேடைகளும், புது வாய்ப்புகளும் கிடைக்கும் என நம்புகின்றேன்.
இந்த மலேசியா பயணத்தில் 5 நிகழ்வுகள் வெற்றிகரமாக நடந்தேறின...
1. நமது முதல் நூலான "பணம் மனம் ஞானம்" நூல் அறிமுகம்,
2. இரண்டாவது நூலான "சொத்து உங்கள் கெத்து" நூல் வெளியீடு,
3. தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சிறப்பு பயிற்சி,
4. இலக்கிய விழாவில் விருது பெற்று, சிறப்புரை ஆற்றிய நிகழ்வு,
5. மலேசியா இன்பச் சுற்றுலா,
என ஐம்பெரும் பகுதிகளாக இந்த மலேசியா பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது.
விழாவில் கலந்து கொண்டு மதிப்பு சேர்த்து, வாழ்த்திய மலேசியா தேசத்தின் மதிப்பிற்குரிய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அயலகத் தொடர்புக்குழுத் தலைவர் உயர்திரு. பெ.இராஜேந்திரன் அய்யா அவர்களுக்கும், எனது ஆசான் தன்னம்பிக்கை பேச்சாளர் உயர்திரு. மலேசியா தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அய்யா அவர்களுக்கும், முத்தமிழ் படிப்பகம், செந்தூல், மலேசியா தலைவர் உயர்திரு பெ.இராமன் அய்யா அவர்களுக்கும், சைபர் ஜெயா பல்கலைக்கழக சார்பு நிலை பேராசிரியர் டத்தோ, முனைவர். என்.எஸ்.இராஜேந்திரன் அய்யா அவர்களுக்கும், விழா முன்னெடுப்புகளை மேற்கொண்ட தமிழகத்தை சார்ந்த உலக சாதனை நாயகன், கவிஞர் திமிரி. க. மணி எழிலன் அய்யா அவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் பங்கேற்று ஆதரவு அளித்த மலேசிய கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மலேசியவாழ் தமிழ் மக்கள், இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்கள், விருந்தினர்கள், ஏனைய நூல் ஆசிரியர்கள் மற்றும் விருதாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
மலேசியா மண்ணில் இந்த ஒட்டு மொத்த நிகழ்வுகளையும், விழாவையும், சுற்றுலாவையும் முன்னின்று நடத்தி எங்களை கௌரவப்படுத்திய, பாசத்திற்குரிய அண்ணன் மலேசியா.சண்முகநாதன், SHAN TOURS அவர்களுக்கும் அவர் தலைமையிலான விழாக் குழுவினர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனது இரண்டாவது படைப்பான "சொத்து உங்கள் கெத்து" நூல் எழுதவும், அதனை பயிற்சி வடிவில் வழங்க தூண்டுதலாகவும், பல உள்ளீடுகளை வழங்கியும், வழிகாட்டியும், இந்த மலேசியா பயணத்திற்கு ஒத்துழைப்பும், உதவியும் நல்கிய ஆதியோகி குழும நிறுவனத் தலைவர் டாக்டர்.மணிக்கண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பயணத்தில் என்னோடு சேர்த்து 6 நண்பர்களும் மலேசியாவிற்கு பயணம் செய்தனர். அவர்கள் இந்த பயணம் வெற்றி பெற பல வகைகளில் பெரிதும் துணை நின்று, வழி நடத்தி, ஒத்துழைப்பு நல்கினார்கள்.
குறிப்பாக மலேசியாவில் முக்கிய வணிக தொடர்புகளை வழங்கி, இணைப்புகளை ஏற்படுத்திய எனது இனிய நண்பர் திரு.ரத்தினாபால் அவர்களுக்கும், 'சொத்து உங்கள் கெத்து' நூலின் இணை ஆசிரியரும், எனது இனிய நண்பருமான திரு. குளோபல் ஸ்டார் ரகு அவர்களுக்கும், பயிற்சியாளர் மற்றும் எனது நலம் விரும்பியுமான திரு. பாஸ்கரன் அய்யா அவர்களுக்கும், வணிகத் கூட்டாளிகளான மரக்காணம் திரு.அன்பரசு அவர்களுக்கும், சேலம் திருமதி. சக்சஸ் சசிகலா அவர்களுக்கும் மற்றும் வணிகத் தோழரான திருமதி. மாலதி அவர்களுக்கும் எனது நன்றிகள்...
பயணங்கள் தொடரும், சாதனைகள் தொடரும், உங்கள் அன்போடும், ஆதரவோடும்,
'பாசிடிவ்' பெருமாள்