05/09/2023
"லிங்கம்"
கதை திரைக்கு வருகிறது
தென் மாவட்டங்களில் 1990களில் மிகவும்
பிரபலமாக பேசப்பட்டு வந்த ஒரு கேங்ஸ்டர் அல்லது டான் என்று சொல்லலாம்,அவர் பெயர்
லிங்கம்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த லிங்கம் ஒரு சிறந்த கபடி விளையாட்டு வீரர்,
நெல்லை மாவட்டத்தில் கராத்தே செல்வினும் கபடி வீரர்.
இருவரும் நண்பர்களும் கூட ...
நண்பர்களான இருவரும், 1987 ல்
ஒரு கபடி போட்டிக்காக நாங்குநேரி பகுதியில் கபடி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில்,
ஒரு கோஷ்டி மோதல் கொலையில் முடிகிறது.
கராத்தே செல்வினுக்கும்,
லிங்கத்துக்குமே இதுதான் முதல் கொலை.
குமரி மாவட்டத்தை தனது தாதாயிசத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் லிங்கம்.
லிங்கம் நாகர்கோவில் டவுனுக்குள் வரும் பொழுது,
30 புல்லட்டில்,
இளைஞர்கள் ஒரே கலரில் சபாரி டிரஸ் சீருடையுடன் ,
தனது காருக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து செல்வதுண்டு.
குமரி மாவட்டத்தை பொருத்தவரை,
அரசு நிர்வாகமே குறிப்பாக மார்க்கெட், சந்தை, ஒயின்ஷாப் போன்று அதிக பணம் தரக்கூடிய,
எந்த அரசு இலாகவாக இருந்தாலும் ,
அதன் விலையை நிர்ணயம் செய்வது லிங்கமாகத்தான் இருக்கும்.
பலமுறை போலீஸ் நிர்வாகம்,
பல சிக்கலான கேசுகளுக்கு,
லிங்கத்தின் உதவியை நாடிய துண்டு.
லிங்கத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்,
ஆங்காங்கே பல கேங்ஸ்டர்கள் பலர் இருந்தார்கள்.
குமரி மாவட்டத்தின் உச்சகட்ட கேங்குவார் என்று,
இரு சம்பவங்களை குறிப்பிடலாம்.
இரண்டு கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட பகையினால்,
அய்யாவு என்பவரை,
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ,
நீதிபதி கண் முன்னே,
சாட்சிகூண்டில் வைத்து,
வெடிகுண்டு வீசி,
வெட்டி சாய்த்தது.
இந்த வழக்கில் ,
ஷேக் மிரான், செல்வம்,
ராதா உட்பட ஒரு சிலருக்கு,
தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு,
சிறைச்சாலை கடந்த 30 வருடங்களாக,
இருந்து வருகிறார்கள்.
லிங்கம் சிறையில் இருக்கும் பொழுது, அவரது எதிர் கோஷ்டி,
சிறையின் உள்ளே நுழைந்து ,
லிங்கம் அடைக்கப்பட்டு இருந்த செல்லை உடைத்து,
அவரை துப்பாக்கியால் சுட்டும், அருவாளால் வெட்டியும் கொலை செய்து,
கழுத்தை அறுத்து தனியே வெளியே கொண்டு போய் ,
பல கிலோமீட்டர் தள்ளி உள்ள அரசு பேருந்து நிலையத்தில் வைத்து விட்டு சென்று விட்டது.
லிங்கம் கொலை வழக்கில் சுமார் 31 பேர் தூக்கு தண்டனையும் இரட்டை ஆயுள் தண்டனையும் பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த 31 பேரும் பல்வேறு பகுதியில் பிரபல தாதாக்கள் (Notarias Gangsters).
இந்த கேங்வார்
1990களில் உச்சத்தில் இருந்தது.
குமரி மாவட்டத்தில்1992 இல் 46 கொலைகளும், 1993 ல் 43 கொலைகளும்,
ஆக மொத்தம் 89 கொலைகள் நடந்தேறியன.
இந்தியாவில் காலிஸ்தான்,
பாகிஸ்தான், காஷ்மீர் தீவிரவாதிகளை,
அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் தடா. Terrorist and Disruptive Activities (Prevention) Act.
தேசிய அளவில் உள்ள தீவிரவாதிகளுக்கு மட்டுமே போடப்படும்,
மேற்படி தடா சட்டம்,
நெல்லை மாவட்டத்தில் கராத்தே செல்வினுக்கும்,
குமரி மாவட்டத்தில் லிங்கம் கோஷ்டிக்கும் போடப்பட்டது.
இத்தருணத்தில் ,
குமரி மாவட்டத்தில்,
சில போலீஸ் அதிகாரிகள் பணிபுரிய பின்வாங்கினர் .
1994 ல் ஆய்வாளராக,
திரு. சந்திரபால்,
துணை ஆய்வாளராக,
திரு. ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகிய இருவரும் ,
பயம் என்றால் என்னவென்று தெரியாத,
ஒரு கிராமத்து சூழலில் வளர்ந்தவர்கள்,
தாங்களாகவே,
முன் வந்து,
குமரி மாவட்டத்தில்,
போலீஸ் அதிகாரிகளாக
பொறுப்பேற்றுக்கொண்டனர்.
Eradication of Rowdisim from Kanyakumari District
என்ற ஆபரேஷன் மூலம்,
பிரபல தாதா அர்னால்ட், பாரதி போன்ற ஒரு சிலரை,
என்கவுண்டரில் போட்டு தள்ளினர்.
பல கேங்ஸ்டர்கள்,
இவர்கள் இருக்கும் மாவட்டத்தை விட்டு,
வேறு மாவட்டத்திற்கு, இடம்பெயர தொடங்கினர்.
மாவட்டத்தின் நிலைமை ஓரளவுக்கு போலீஸ் ,
கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
இந்த திகிலான கதையை 2005ல்
ஜூனியர் விகடன் பத்திரிகை
*தெக்கத்தி டெர்மினேட்டர்*
என்ற தலைப்பில் தொடர்கதையாக வெளியிட்டு ,
மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
சரி ஒரு பிரபல தாதாவை, மாவீரனை,
துணிச்சலுடன் ஒருவன் சிறைச்சாலை உள்ளே புகுந்து ,
சிறைச்சாலை கதவை திறந்து ,
லிங்கத்தின் தலையை அறுத்து வெளியே கொண்டு வந்தவன் யார் என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபட்டோம்.
பெருவளை மோகன் தான் அந்தக் கதையின் எதிர் நாயகன் .
நாம் நமது நாடார் முரசில் அந்த எதிர் நாயகனின் கதையை பனங்காட்டு நரிகள் என்ற தலைப்பில் ஒரு டெர்மினேட்டரை டெர்மினேட் செய்தவனின் கதை
என்ற துணை தலைப்புடன்,
2008 களில் தொடர் கதையாக வெளியிட்டு,
மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
தற்போது ஆனந்த விகடன் குழுமம்,
தெக்கத்தி டெர்மினேட்டர்
கதையை *லிங்கம்*
என்கின்ற தலைப்பில்,
வெப் சீரியஸ் ஆக தயாரிக்க,
முன்வந்துள்ளது.
90களில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை திரட்ட,
நம்மை தொடர்பு கொண்டனர்.
மதுரை மத்திய சிறைச்சாலையில் வைத்து ,
பெருவிளை மோகன்
நடந்த உண்மை சம்பவங்களை சொல்ல,
அதை புத்தகமாக, மதுரை சிறைச்சாலை ஜெயிலர் நல்லதம்பி,
ஸ்கிரிப்ட் ஆக எழுதப்பட்ட ,
அசல் நகலை 2008 இல் அண்ணா நூற்றாண்டு விழாவில்,
பொது மன்னிப்பு அளித்து ,
விடுதலை பெற்ற மோகன் ,
நம்மிடம் கொடுத்திருந்தார் .
அந்த ஒரிஜினல் நகலை லிங்கம் பட கதை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுமார் 20 வயதுகளில் ஒரு மனிதன் வன்முறை என்கின்ற தவறான பாதையில் சென்றதனால்,
அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி,
அவர்களை சுற்றி உள்ள சமுதாய சொந்தங்கள் பட்ட இன்னல்கள்,
வருங்கால சந்ததியினர்கள், இளைஞர்கள் இந்த படத்தின் மூலம்,
வன்முறை மனித வாழ்க்கைக்கு எவ்வாறு எதிரானது,
அதனால் ஏற்படும் சீரழிவுகள் போன்றவற்றை,
இந்த படம் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
திரைப்படம் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இவன்
J. அர்னால்டுஅரசு
Joint Secretary
Tamilnadu Press and Media Reporters Union
Chennai.