Tamilnadu Press & Media Reporters Union

Tamilnadu Press & Media Reporters Union News Channel. Follow to get updated on Top Stories across the World

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன...
28/08/2025

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். இது அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி (commission) “ஊர் கேப்ஸ்” செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படும்.
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு CNG ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் சர்வதேச மகளிர் தினமான 08.03.2025 அன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து CNG ஆட்டோக்கள் மூன்றாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.09.2025 தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வரவேற்கப்படுகின்றன.

ஏங்க கூமாபட்டி பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 10 கோடி ஒதுக்கீடுங்கதமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுங்க   ...
28/08/2025

ஏங்க

கூமாபட்டி பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 10 கோடி ஒதுக்கீடுங்க

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுங்க

போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்புதிய டி.ஜி.பி. யார்? பரபரப்பு தகவல்கள்தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக...
24/08/2025

போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்
புதிய டி.ஜி.பி. யார்? பரபரப்பு தகவல்கள்
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி பதவியேற்றார்.அவருடைய பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. தமிழக போலீஸ்துறையில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். என்ஜினீயரான இவர் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
'இவர், சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகள் பணியாற்றியவர். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறைஜனாதிபதி பதக்கம் பெற்றவர். இவருடைய மகள் தவ்தி ஜிவால் நடிகர் ரவிமோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கர் ஜிவால் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் சென்னையிலேயே தங்குவதற்கு முடிவெடுத் துள்ளார். இந்த தகவலை அவர் நேற்று பத்திரிகையாளர்களி டம் பகிர்ந்துகொண்டார்.
டி.ஜி.பி.சங்கர்ஜிவால் ஓய்வு பெறுவதைத்தொடர்ந்து புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர் பார்ப்பு போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மூத்தஐ.பி.எஸ். அதிகாரிகளான சந்தீப்ராய்ரத்தோர், சீமா அகர்வால், வெங்கடராமன் உள்ளிட்டோர் பெயர்கள் அடங் கிய டி.ஜி.பி. பதவிக்கான பரிந்துரை பட்டியல் தயார் நிலை யில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஒருவர்தான் டி.ஜி.பி. யாக வருவார் என்றும் கூறப்படுகிறது.
இதில் சந்தீப்ராய்ரத்தோர், தமிழகபோலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி.யாகவும், சீமா அகர்வால், தீயணைப்புத்துறை இயக் குனராகவும்,வெங்கடராமன், நிர்வாகபிரிவு டி.ஜி.பி.யாகவும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி  கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி...
23/08/2025

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி

கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.

கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர்.

அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.

சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும்

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக ஆர். வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு
22/08/2025

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக ஆர். வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு

22/08/2025

Breaking

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முழுமையாக தடை செய்தது உச்ச நீதிமன்றம்

3644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியீடு காவல் துறை 2ம் நிலை காவலர் - 2833 சிறைத்துறை 2ம் நிலை காவலர் - 180த...
21/08/2025

3644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியீடு

காவல் துறை 2ம் நிலை காவலர் - 2833

சிறைத்துறை 2ம் நிலை காவலர் - 180

தீயணைப்பாளர் - 631

செப். 21ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

நவம்பர் 9ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்காக தகுதிவாய்ந்த நிறுவனங்கள...
20/08/2025

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்காக தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20/08/2025

சென்னையில் ரிப்பன் மாளிகைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதற்காக விசாரணைக்கு வருமாறு முதலில் பெரியமேடு காவல்நிலையத்திற்கும், பின்னர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கும் என மாறிமாறி அவர் அலைக்கழிக்கப்படுவதாக அந்த அமைப்பினர் ஊடகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் மூர்த்தி அசாம் மாநிலத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட...
20/08/2025

பத்திரிக்கையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் மூர்த்தி அசாம் மாநிலத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பத்திரிக்கை கண்டனங்களை பதிவு செய்துள்ளது
பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ளது

20/08/2025

AI வந்துவிட்டதால், கற்பனைக்கு எல்லை ஏது?
சென்னைக்கு புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட கோயம்பேடு, மீனம்பாக்கம், கிளாம்பாக்கம், பறாந்தூர், வேலூர், திண்டிவனம் என இடம் தேடி அலையாமல், சென்னைக்கு மிக அருகிலிருக்கும் மெரீனா பீச்சில் கட்டி மக்கள் பாவனைக்கு முனையத்தை திறந்தால் எப்படி இருக்கும்?

“இருக்கும் இடத்தை விட்டு,
இல்லாத இடம் தேடி..
எங்கெங்கோ அலைகின்றார்,
ஞானத்தங்கமே..!”

வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள் முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை திட்டம்இதற்காக மெட்டா  நிறுவனத...
19/08/2025

வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்

முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை திட்டம்

இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

50 சேவைகளின் விவரம்

Address

OFFICE. 72/41
Chennai
600015

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+914448529911

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Press & Media Reporters Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu Press & Media Reporters Union:

Share

We meet theHon’ble Governor Govt.Of Pondicherry for inviting for the 21st annual meeting of by October 26th by TNPMRUNION

We meet theHon’ble Governor Govt.Of Pondicherry for inviting for the 21st annual meeting of by October 26th by TNPMRUNION