Tamilthisaipublications

Tamilthisaipublications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilthisaipublications, Media/News Company, 124, wallajah Road, Chennai.

நூல்  தலைப்பு          : கொஞ்சம் Technique கொஞ்சம் Englishஆசிரியர்                     : ஷர்மிளா ஜெயக்குமார்விலை        ...
12/12/2024

நூல் தலைப்பு : கொஞ்சம் Technique கொஞ்சம் English
ஆசிரியர் : ஷர்மிளா ஜெயக்குமார்
விலை : 150/-
பக்கம் : 136
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

தமிழ் வழியில் பள்ளி இறுதிவரை படித்த மாணவர்கள் ஆங்கிலம் ஒரு
பாடம் என்ற அளவிலேயே படித்திருப்பார்கள். கல்லூரியில் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டும், கல்லூரி வகுப்புகளில் பேராசிரியர்களோடு ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்னும் நிலையில், “ஆங்கிலம் - என்பதை ஒரு பாடமாக சுருக்கி அணுகியதற்குப் பதிலாக ஒரு மொழியாக ஆழமாகப் படிக்கத் தவறிவிட்டோமே..” என்று பெரும்பாலான மாணவர்கள் வருந்துவார்கள். அப்படி வருந்தியவர்களில் ஒருவர்தான் இந்நூலின் ஆசிரியர் ஷர்மிளா ஜெயக்குமார்.

ஆழமான புரிதலுடன் தான் கற்ற ஆங்கிலம் என்னும் மொழியை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிமையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசையின்’ ‘வெற்றிக் கொடி’ பகுதியில் ஷர்மிளா ஜெயக்குமார் எழுதியபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம்தான் ‘கொஞ்சம் Technique கொஞ்சம் English’.

நூலின் தலைப்பில் இருக்கும் Technique, ஆங்கில இலக்கணத்தை எளிமையாக அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் நூல் முழுவதும் பல நுட்பங்களாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

நூல்  தலைப்பு          : டாக்டர் பதில்கள்ஆசிரியர்                     : டாக்டர் கு. கணேசன்விலை                          ...
12/12/2024

நூல் தலைப்பு : டாக்டர் பதில்கள்
ஆசிரியர் : டாக்டர் கு. கணேசன்
விலை : 200/-
பக்கம் : 192
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

மருத்துவ சந்தேகங்கள் நிறைய எழும் காலம் இது. அன்றைக்குப் பலரும் அண்டை அயலார், உறவினர்களிடம் இதற்கு ஆலோசனை கேட்டார்கள். இன்றைக்குப் பலரும் கூகுள் மருத்துவரிடம் தஞ்சமடைந்து, மருத்துவ சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறார்கள். இது தேவையற்ற குழப்பத்துக்கும், நோய் தீவிரமடைவதற்கும் காரணமாகிவிடுகிறது..

டாக்டர் கு.கணேசன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறை சார்ந்து எளிய தமிழில், சாதாரண மக்களும் மருத்துவ அறிவியலை புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி எழுதிவருபவர். மக்களை அச்சுறுத்தாமல், அறிவூட்டும் வகையிலும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் பொறுப்புள்ள ஒரு மருத்துவராக எழுதிவருகிறார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவர் எழுதிவருகிறார். அவருடைய கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றவை. இந்த நிலையில் வாசகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மருத்துவ சந்தேகங்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அனுப்பினர். அதற்கு டாக்டர் கு.கணேசன் அளித்த பதில்கள் வரவேற்பைப் பெற்றன. அதுவே தற்போது நூலாகத் தொகுக்கப்பட்டு்ள்ளது.

நூல்  தலைப்பு          : உலக மொழி உங்களிடம் பாகம் - 3ஆசிரியர்                      : ஜி.எஸ்.எஸ்விலை                     ...
12/12/2024

நூல் தலைப்பு : உலக மொழி உங்களிடம் பாகம் - 3
ஆசிரியர் : ஜி.எஸ்.எஸ்
விலை : 160/-
பக்கம் : 160
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

ஆங்கிலத்தில் பிழையின்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உதவும் கட்டுரைகளைத் தொடர்ந்து `இந்து தமிழ் திசை' நாளிதழின் பல இணைப்பிதழ்களிலும் எழுதி வருபவர் ஜி.எஸ்.எஸ்.

ஆங்கிலத்தை அலுவல் சார்ந்த மொழியாகவே பெரும்பாலும் அணுகுவார்கள். ஆனால், ஜி.எஸ்.எஸ். அதையும் தாண்டி, அந்த மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அர்த்தம், அந்த வார்த்தையின் வேர்ச்சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பது போன்ற விரிவான தகவல்களையும் போகிற போக்கில், படிப்பவர்களின் மனத்தில் பதியவைத்துவிடும் வல்லமை மிக்கவர்.

வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமான `போட்டியில் கேட்டுவிட்டால்', `கேட்டாரே ஒரு கேள்வி' போன்ற சுவாரஸ்யங்கள் இந்நூலிலும் இடம்பிடித்துள்ளன. மேலும், கேலிச் சித்திரங்களின் வழியே வெளிப்படும் ரசனையான உரையாடல்கள், குட்டிகுட்டியான வடிவில் பெட்டிச் செய்திகள்... என சுவாரஸ்யங்களின் பட்டியல் நூலில் இடம்பெற்றுள்ளன.

12/12/2024
நூல் தலைப்பு : வெற்றி நிச்சயம் மூன்றாவது காலாண்டு 2024ஆசிரியர்                       : இந்து தமிழ் திசை   விலை          ...
17/10/2024

நூல் தலைப்பு :
வெற்றி நிச்சயம் மூன்றாவது காலாண்டு 2024

ஆசிரியர் : இந்து தமிழ் திசை
விலை : 95/-
பக்கம் : 96
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401329402 / 7845875723

பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள்,
ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும்.

IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவாதக் கையேடு.

நூல் தலைப்பு       : டிங்குவிடம் கேளுங்கள் பாகம் 2ஆசிரியர்                      : எஸ். சுஜாதா   விலை                    ...
26/09/2024

நூல் தலைப்பு : டிங்குவிடம் கேளுங்கள் பாகம் 2
ஆசிரியர் : எஸ். சுஜாதா
விலை : 130/-
பக்கம் : 112
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications

‘கேள்வி கேட்கும் குழந்தையே, அறிவின் விதையை விதைக்கும் விவசாயி’ என்று சொல்வது உண்டு. உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது.

குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தான் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருப்பதுதான். அதனால், கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது.

உங்கள் கைகளில் தவழும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ இரண்டாம் பாகம், வெறும் புத்தகம் அல்ல. இது ஓர் அறிவியல் களஞ்சியம். இந்து தமிழ் திசை ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் கேட்கப்பட்ட அற்புதமான கேள்விகளின் தொகுப்பு இது.

நூல் தலைப்பு            : புதிய கண்டுபிடிப்புகள்ஆசிரியர்                      : த.வி. வெங்கடேஸ்வரன்   விலை              ...
26/09/2024

நூல் தலைப்பு : புதிய கண்டுபிடிப்புகள்
ஆசிரியர் : த.வி. வெங்கடேஸ்வரன்
விலை : 140/-
பக்கம் : 128
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications

ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளுடன் காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற மனிதர்களின் ஆர்வம்தான் கண்டுபிடிப்புகளுக்கு வழிசெய்திருக்கிறது. இயற்கையாக உருவான நெருப்பைக் கண்டு முதலில் பயந்த மனிதன், பிறகு அந்த நெருப்பை எப்படிக் கட்டுப்படுத்துவது, எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பது பற்றி அறிந்துகொண்டபோது, பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தான். பின்னர் சக்கரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. அது மனிதனை இன்னும் வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

இப்படிப் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கண்டுபிடித்த ஏராளமான விஷயங்களால்தான் இன்று அறிவியலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டிருக்கிறது. ஆனால், இன்றும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாமல், மனிதனால் அறிந்துகொள்ள முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தன்னுடைய அறிவாலும் அறிவியல் தொழில்நுட்பத்தாலும் அறியாதவற்றையும் அறிந்துகொள்வதற்குத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறான் மனிதன்.

Address

124, Wallajah Road
Chennai
600002

Opening Hours

Monday 10:30am - 5:30am
Tuesday 10:30am - 5:30am
Thursday 10:30am - 5:30am
Friday 10:30am - 5:30am
Saturday 10:30am - 5:30am

Alerts

Be the first to know and let us send you an email when Tamilthisaipublications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilthisaipublications:

Share