VTV

VTV VTV is a infotainment, devotional, Music, daily horoscope, astrology channel.

02-07-2025 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிப...
01/07/2025

02-07-2025 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:
விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.
வாழ்வில் துக்கத்தையும், துயரத்தையும் மட்டுமே பார்த்தேன் என்று விரக்தியுடன் இருப்பவர்கள் கூட, விநாயகரை வீட்டில் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் செல்வ கணபதி.

வெற்றிகளைக் குவிக்கும் விநாயகரின் துணையுடன் வாழ்வை வெற்றிக் கொள்ளலாம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்வது விசேஷம். எருக்கஞ்செடி விநாயகருக்கு உரிய செடி, எருக்கன் மாலை விநாயகருக்கு உகந்தது. வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட விநாயகருக்கு, துளசி தீர்த்தம், சந்தனம்,பன்னீர் என அபிஷேகம் செய்த பிறகு பூஜை அறையில் வைத்து வழிபடத் தொடங்கலாம்.

விநாயகரை அப்படியே வைத்து வழிபாடு செய்வதைவிட, பித்தளைத் தாம்பாளத்தில் பச்சரிசி அல்லது நெல்லை விரவிவிட்டு, அதன்மேல் விநாயகரை வைத்து வழிபடலாம். விநாயகருக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து தீபம் ஏற்றி வேண்டுதல்களை சொல்லி பூஜித்தால் போதும். வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு அகல் தீபத்தின் சுடர் எரி

வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு அகல் தீபத்தின் சுடர் எரியுமாறு விளக்கேற்றவேண்டும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றி விரதம் இருந்து விநாயகரை துதித்தால்,
தும்பிக்கை முகத்தோன், வினைகளை அறுத்து, வாழ்வில் வளம் சேர்ப்பார்.

அனுமனை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலர் இவரின் தீவிர பக்தர்களாக இருந்து வருகின்றனர். பிரிந்திருந்த ராமரையும், ...
30/06/2025

அனுமனை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலர் இவரின் தீவிர பக்தர்களாக இருந்து வருகின்றனர். பிரிந்திருந்த ராமரையும், சீதையையும் ஒன்று சேர்த்து வைத்ததுடன், ராமர் போரில் வெற்றி பெற்று சீதையை மீட்க முக்கிய பங்கு ஆற்றியவராகவும் இருந்தவர் அனுமன். அதனால் அவரை வழிபட்டால் பக்தர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நமக்கும் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை
தீவிர ராம பக்தரான ஆஞ்சநேயர், ராமரின் வாயாலேயே சிரஞ்சீவி வரம் பெற்றவர். பக்தி, வீரம், பேச்சுதிறன், சேவை ஆகியவற்றிற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் வீர ஆஞ்சநேயர். அவரை வழிபடுபவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனுமனை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் அனைதஅது காரியங்களும் வெற்றி அடையும். அனுமனை வழிபடுபவர்கள் ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன், இறுதி காலத்தில் ராமரின் அருளால் முக்தி அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அனுமனை வழிபடுவதால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

உடல் வலிமை உதாரணமாக கருதப்படுபவர் என்பதால் உடல் வலிமை பெற விரும்புபவர்கள் அனுமனை வணங்கலாம். அனுமனை வழிபட்டால் மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடைவதுடன், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும், நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கிரக தோஷங்கள் விலகும்.

ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் அவரை வழிபட அனைத்து நாட்களும் ஏற்ற தினங்களாகும். இருந்தாலும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். இந்த கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை, துளசி மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஆஞ்சநேயர் சிறப்பான பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

அனுமனின் மந்திரம் தினமும் உச்சரிப்பதால் நமக்கு தனிப்பட்ட வகையில் நல்ல பலன் உண்டாவதோடு, குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே நல்ல அன்னியோன்னியமும், குடும்ப முன்னேற்றமும் உண்டாகும்.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ, சிவன் வழிபாடு இந்த வழிபாட்டை நீங்கள் திங்கள்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வில்வ இலை எடுத்...
29/06/2025

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ, சிவன் வழிபாடு இந்த வழிபாட்டை நீங்கள் திங்கள்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வில்வ இலை எடுத்துக்கோங்க. ஏழு என்ற எண்ணிக்கையில் வில்வ இலை இருக்க வேண்டும். அந்த வில்வ இலையில் சிவன் பார்வதி என்ற பெயரை எழுதி விடுங்கள். நீல நிற பேனாவில் எழுதலாம். முடிந்தால் மஞ்சளை கரைத்து அதில் எழுதுங்கள்

ஏழு வில்வ இலையில் மட்டும் தான் சிவன் பார்வதி என்ற பெயர் இருக்க வேண்டும். இந்த வில்வ இலைகளை அப்படியே உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு கொண்டு போய் எம்பெருமானுககு சமர்ப்பணம் செய்ய வேண்டும். சிவபெருமானின் பாதங்களில் இந்த இலைகள் போய் சேர வேண்டும். கணவன் மனைவியும் ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் பெயர், உங்கள் வாழ்க்கை துணையின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த சிவன் கோவிலை ஏழு முறை வளம் வந்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.

கணவன் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவி மட்டுமும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரண்டு பேரும் சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய அன்யூன்யம் இன்னும் மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவி, மனைவியை விட்டு பிரிந்து வாழும் கணவன் இவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

அப்படி நீங்கள் பிரிந்து வாழ்ந்திருந்தால் உங்கள்வாழ்க்கைத் துணை உபயோகப்படுத்திய துணியை, உங்கள் கையில் எடுத்துக் கொண்டு, சிவன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாடு செய்வது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அதாவது நீங்கள் மனைவியாக இருந்தால், உங்கள் கணவர் பயன்படுத்திய துணி உங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்கள் கணவராக இருந்தால் உங்கள் மனைவி உடுத்திய துணி உங்கள் கையில் இருக்க வேண்டும். அப்படி துணி இல்லை என்றால் அவர்களுடைய புகைப்படத்தை யாவது கையில் எடுத்துக்கொண்டு இந்த சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளவும். புகைப்படமும் கையில் இல்லை என்றால் தொலைபேசியில் எடுத்த போட்டோ இருக்கும் அல்லவா அதையாவது கையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை ஏழு திங்கட்கிழமை செய்து வரும் பட்சத்தில் நிச்சயம் கணவன் மனைவி பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை

26-06-2025 வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு:- வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வரும் கடவுளாக சாய்பாபா மாறிவ...
25/06/2025

26-06-2025 வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு:-
வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வரும் கடவுளாக சாய்பாபா மாறிவிட்டார், கடந்த பத்தாண்டுகளில் சாய்பாபாவை வழிபடுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையில் சாய்பாபாவை வழிபடுவதன் மூலம், மிகப்பெரிய நெருக்கடிகள் கூட நீங்கும், மேலும் மனதின் விருப்பங்களும் நிறைவேறும்.

சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.

வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலிலுக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களின் துக்கங்கள், வலிகள் மற்றும் நோய்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. சாய் பாபாவின் இந்த திருத்தலத்திற்கு வரும் எந்தவொரு பக்தரும் வெறுங்கையுடன் செல்வதில்லை என்று நம்பப்படுகிறது. அவரது மனம் எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்

25-06-2025 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:வாழ்வில் ஏற்படும் தடைகள், துன்பங்களை போக்க கூடிய சக்தி படைத்தவர் விநாயகப் பெரும...
24/06/2025

25-06-2025 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:

வாழ்வில் ஏற்படும் தடைகள், துன்பங்களை போக்க கூடிய சக்தி படைத்தவர் விநாயகப் பெருமான் என்பது அனைவருக்கும் தெரியும். முழு முதற்கடவுளாக இருக்கும் விநாயகப் பெருமானுக்கு சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விநாயகப் பெருமான் எளிமையான கடவுள். இதனால் அவருக்கு செய்யும் வழிபாடுகளும் எளிமையாகவே இருக்கும்.

கிழமையில் விநாயகர் வழிபாட்டினை துவக்க வேண்டும். அதிலிருந்து சரியாக 7 நாட்கள் தொடர்ந்து, தடை இல்லாமல் இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். வீட்டில் உள்ள விநாயகர் படம் அல்லது கோவிலில் உள்ள விநாயகருக்கு மஞ்சள், குங்குமம் படைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் திரியில் வெற்றிவேரையும் சேர்த்து திரித்து விளக்கேற்ற வேண்டும். வெற்றிவேர் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக் கூடியதாகும். நல்லெண்ணெய் ஊற்றி இந்த தீபத்தை ஏற்றி வைத்து, விநாயகர் மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபட வேண்டும்.

"ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்"

இந்த மந்திரங்களைச் சொல்லி விநாயகரின் காலடியில் சிறிது அருகம்புல்லை வைத்து வழிபட வேண்டும். தினமும் இந்த அருகம்புல்லை மாற்றி விட்டு, புதிய அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக இரண்டு ஏலக்காய் மற்றும் தண்ணீர் வைத்து வழிபட வேண்டும். ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்து, இந்த வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

24-05-2025 செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு :-வாழ்வில் ஏற்றம் தரும் சக்திவாய்ந்த முருகன் கோயில்திண்டுக்கல் மாவட்டம் ரெட்ட...
23/06/2025

24-05-2025 செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு :-
வாழ்வில் ஏற்றம் தரும் சக்திவாய்ந்த முருகன் கோயில்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கப்பட்ட என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் கோயில் அமைந்துள்ளது. பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இந்த கோயில் கருவறை அமைந்துள்ளது. அதில் 17-க்கு 21 அடி என்ற கணக்கில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. அதில் 8-க்கு 8 என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பூமிக்கு அடியில் அதாவது பாதாளத்தில் செம்பினாலான முருகன் சிலை உள்ளது. இதனால் இது பாதாள செம்பு முருகன் என்ற பெயர் உருவானது.
பழனியில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் திருக்கோவிலூர் சித்தர் வசித்து வந்துள்ளார். இவர் 600 ஆண்டுகளுக்கு முன்பு 1.5 அடி உயரத்தில் உலோகத்திலான முருகன சிலையை வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்துள்ளார். ஆனால் நாளடைவில் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியில் வந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர் மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.
இந்த கோயிலுக்குள் நுழையும் 12 அடி உயர சங்கிலி கருப்பு சிலை இருப்பதை நம்மால் பார்க்க முடியும். உலகிலேயே முருகன் கோயிலில் சங்கிலி கருப்பு சிலை இருப்பது இங்கு மட்டும் தான். மேலும் கோயிலின் முன்பு ஜலகண்டேஸ்வரர் சிலையும் உள்ளது. அதை தொடர்ந்து கால பைரவர் சிலையும் இருக்கும். அதனை தாண்டி செல்லும் போது 16 அடி ஆழத்தில் முருகனை 18 படி கொண்ட குகையில் இறங்கி சென்றால் பாதாள செம்பு முருகனை தரிசிக்கலாம்.
பொதுவாக முருகன் கோயில்களுக்கு செல்லும் போது ஏற்றமாகவும், திரும்பி வரும் போது இறக்கமான பாதையாகவும் இருக்கும். ஆனால் இந்த பாதாள செம்பு முருகன் கோயிலில் இறங்கி சென்று முருகனை தரிசித்துவிட்டு, ஏற்றமான பாதையில் வருவது சிறப்பு. இது நம் வாழ்விலும் ஏற்றத்தை கொடுக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை.
பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் முக்கிய அதிகாரிகள் இந்த கோயிலுக்கு செல்வதாக கூறப்படுகிறது. பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கருங்காலி மாலை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

23-06-2025 திங்கட் கிழமை என்பது, சிவனுக்கு மிகவும் உகந்த தினமாகும். சிவனை நினைத்து, அவருக்காக விரதமிருந்து வழிபட்டு பால்...
22/06/2025

23-06-2025 திங்கட் கிழமை என்பது, சிவனுக்கு மிகவும் உகந்த தினமாகும். சிவனை நினைத்து, அவருக்காக விரதமிருந்து வழிபட்டு பால், அரிசி, சர்க்கரையையும், பழங்களையும் நைவேத்தியமாக சமர்ப்பணம் செய்திடலாம்.

சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது.

சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

வழிபாடு செய்யும் முறை

திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம்.

Address

44/55 5th Cross Street, Trustpuram, Kodambakkam
Chennai
600024

Website

Alerts

Be the first to know and let us send you an email when VTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share