Vasantham Media

Vasantham Media TV Commercials Jingles Promotions Events Printing Media Photography Audio-Visual Films Television Programs Magazine Software

In the world of Media (communication), tools used to store and deliver
information or data, there’s Advertising media, Broadcast media, Digital media, Electronic media, Hypermedia, Mass media, Multimedia, New media, News media, Print media, Published media, Recording media, Social media. One stop solution for all your media needs, and we are here for you
VASANTHAM MEDIA

15/08/2025
23/04/2015
20/10/2014

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார் நண்பர் தனசேகரன். அவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 2,500 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். பெரும்பாலும் இயற்கையாக இல்லை. லாரி மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, தற்கொலை செய்துகொண்டு... இப்படி விதம்விதமாக. அச்சம் தருகிறது அகால மரணங்களின் பட்டியல்.

காரணம், மது அரக்கன். அவர்களுக்கெல்லாம் வயது 30 முதல் 40 வரை மட்டுமே. சாக வேண்டிய வயதா இது? இந்திய ஆண்களின் சராசரி வயதே 64தானே. அதில் பாதியைக்கூட வாழவில்லையே இந்த இளைஞர்கள். அநேகமாக, படித்த பட்டதாரி இளைஞர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் கண்ணீர் வருகிறது.

சோகம் அந்த 2,500 பேருடன் முற்றுப்பெறவில்லை. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கணவனை இழந்திருக்கிறார்கள். சுமார் 5,000 குழந்தைகள் தந்தையை இழந்திருக்கிறார்கள். சுமார் 5,000 அம்மா - அப்பாக்கள் அன்பு மகனை இழந்திருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலமெல்லாம் என்னவாவது? சமீபத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரு குழந்தைகளை அடையாளம் கண்டு அதிர்ந்துபோய், வீடு சேர்த்திருக்கிறார் டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.

எது எதற்கோ புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் துறைகள், இதைப் பற்றி புள்ளிவிவரங்களைச் சேகரித்ததா என்று தெரியவில்லை. ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் அலட்சியம். சாவது கடைநிலை ஊழியர்தானே என்கிற இளப்பம்.

குடிநோயாளியாகிவிட்ட சில ஊழியர்களிடம் பேசினால், “பாடப் புத்தகங்களுக்கு நடுவே வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவருக்கே குடியை மறக்க முடியவில்லை. தினமும் காலையிலேயே கடைக்கு வந்து, பாட்டிலுக்கு நடுவே வேலை பார்க்கும் எங்களால் எப்படி முடியும்?” என்று கலங்குகிறார்கள். அவர்களின் கை, கால்கள் வெடவெடவென்று நடுங்குகின்றன. கணிசமான பேருக்கு காலையில் கடையைத் திறந்ததும் ஒரு குவார்ட்டரைக் குடித்தால்தான் நடுக்கம் நிற்கிறது. அப்புறம்தான் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

வட சென்னையில் ஒரு பார். காலையிலேயே கூட்டம் மொய்க்கிறது. ஊழியர்கள் இருவர் மட்டுமே. காலையில் வந்தவுடன் சிறிது நேரம் ஒருவர் எழுத்து வேலை செய்ய வேண்டும். ஒருவர் மட்டுமே விற்பனையைக் கவனிக்க முடிகிறது. தாமதமாவதால் எரிச்சலடையும் குடிநோயாளி ஒருவர், உலகத்தின் உச்சபட்ச கெட்ட வார்த்தைகளையெல்லாம் ஊழியர் மீது பிரயோகிக்கிறார். ஆனால், ஊழியர் முகத்தில் சலனமே இல்லை.

“சொந்த ஊர் கொடுமுடிங்க. ஒருகாலத்துல ‘நீ, வா, போ’ன்னு கூப்பிட்டாக்கூட சுர்ர்ருனு கோபம் வருமுங்க. வேலைக்கு வந்த புதுசுல கோபப்பட்டு அடிதடியாகி, சஸ்பெண்டாகி, சம்பளம் இழந்து நிறையப் பட்டுட்டேன். என்னவோ தெரியலைங்க, இப்பல்லாம் யார் எவ்வளவு கெட்ட வார்த்தையில திட்டினாலும் கோபமே வரமாட்டேங்குது” என்கிறார். பச்சையாகத் திட்டினாலும் கோபமே வரவில்லை என்பதை இங்கு பக்குவப்பட்ட தன்மையாக எடுத்துக்கொள்ள இயலாது. “மன அழுத்தம் அதிகமாகி மூளை மழுங்கிப்போன நிலை இது. வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் அவர் அப்படித்தான் இருப்பார். என்னிடம் இதுபோன்று நிறையப் பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள்” என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி.

2,500 பேர் இறந்திருக்கிறார்கள். சரி, இருக்கும் மிச்சம் பேரெல்லாம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்களா? இப்போது இருக்கும் சுமார் 30,000 பேரில் சரி பாதிப் பேர் குடிநோயாளிகள்; அதில் பாதிப் பேர் மனநலமும் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். மிகையாகச் சொல்லவில்லை. அவர்களின் பணியிடச் சூழல் அப்படி. பணியிடங்களில் கழிப்பறை வேண்டும் என்பது ஐ.நா. சபை வகுத்த அடிப்படை மனித உரிமை விதிமுறை. எத்தனை மதுக் கடைகளில் கழிப்பறை இருக்கிறது? மதுக் கடைகளே கழிப்பறை போலத்தானே இருக்கின்றன. அங்கேதான் அவர்கள் சாப்பிட வேண்டும். வேலை பார்க்க வேண்டும். வேலை என்றால் 12 மணி நேரம் வேலை. ஷிஃப்ட் கிடையாது. ஆட்கள் பற்றாக்குறை. தீவிர விற்பனை இலக்கு மன உளைச்சல். தீபாவளி, பொங்கல் என்று நல்ல நாட்களுக்குக்கூட குடும்பத்துடன் இருக்க முடியாது. கூடவே, குடி அடிமையாவதற்குக் கூடுதல் சாத்தியங்கள். வகைவகையாக வசவுகள். வயது 40-ஐ நெருங்கியும் பலருக்கும் திருமணம் ஆகவில்லை. பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

டாஸ்மாக் ஆரம்பித்ததிலிருந்து இல்லாத அதிசயமாக முதல்முறையாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) மதுவிலக்கை வலியுறுத்திப் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறது. கடந்த காந்தி ஜெயந்தியில் உதித்த புதிய புரட்சி இது. ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என்றுதான் போராடிவந்தார்கள். ஆனால், இன்றைக்கு ஊழியர்களின் தொடர் மரணங்கள், அவர்கள்தம் குடும்பங்களில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழல் ஆகியவை அவர்களை இந்த முடிவை எடுக்கச் செய்திருக்கின்றன.

வேறு வழியில்லை. நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட இங்கு யாருக்கும் நேரம் இல்லை. எப்போதுமே நமக்கான விடிவுக்காலம் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

(தெளிவோம்)
Thanks:The Hindu
- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: [email protected]

24/09/2014

ரூ.136 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உதவியதாக முன்னாள் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். அரசு நிலம் அபகரிப்பு சென்னை சோழிங்கநல்லூர் தாசில்தார் டி.ரவிச்சந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார...

24/09/2014

சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவ...

03/09/2014

Kalanithi Maran

31/08/2014

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வி...
27/08/2014

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.
ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.
அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.
இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:
* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:
மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:
இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது.
அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும்.
புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.
இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.
இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:
தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது.
இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
தூய இரத்தம் – 35 நாட்கள்
இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்
பிளாஸ்மா – 1 வருடம்
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது.
இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.
தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றனர்.
தமிழ் நாட்டில் நிறைய தன்னார்வ அமைப்புகள் உள்ளன அவற்றில் சத்யா சாய் என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து தமிழ் நாட்டில் இரத்த தானத்தில் முதலிடம் வகித்தது ,ஆனால் தற்போது தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்(TNTJ ) என்ற முஸ்லிம் அமைப்பு கடந்த ஏழு வருடங்காளாக முதலிடம் வகிக்கிறது , இந்த அமைப்பின் சாராம்சம் என்னவென்றால் நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியிலும் இருந்தாலும் சரி , இவர்களுடைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி எந்த சாதி மதம் இனம் பாராமல் எந்த பொருள் செலவையும் எதிர் பாராமல் ரத்த தானம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை.
மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.
இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது.
இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!
இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

Visit the post for more.

26/08/2014

தி இந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்.-ரா.பார்த்திபன்

எப்போதுமே தனிமையில் இருக்கீங்க. எப்படி இந்தளவிற்கு ஒரு கதை பண்ணி பெரிசா திரும்பவும் வரணும் முடிவு பண்ணீங்க?

தனிமைக்குள் தள்ளப்பட்ட உடனே, என்னை நேசிப்பது நான் மட்டும் தான் அப்படினு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு யாருமே இல்ல. நான் மட்டும் தான். நான் சொல்றது சினிமா உலகத்தில் கூட. இப்போ கூட, சினிமா உலகில் என்னை எல்லாரும் இப்போ பாராட்டுறாங்கன்னா அதற்கு பின்னாடி ஒரு பெரிய ஆச்சர்யம் இருக்கிறது. செத்துப் போயிட்டான்னு நினைச்சோம். என்னடா எந்திருச்சு வந்துட்டான்னு நினைக்கிறாங்க. நான் மட்டும் தான், நான் உயிரோட இருக்கேன்னு நினைச்சேன். மற்றவங்க எல்லாரும், இவன் அவ்வளவு தான் இவன் காலினு நினைச்சுட்டாங்க. இப்போ நான் உயிரோடு வந்த உடனே, அவங்களுக்கு பெரிய ஷாக்காக இருக்கிறது. இவங்க ஷாக்காகிறதை பார்த்தால், எனக்கு பயமா இருக்கு.

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Vasantham Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share