20/08/2026
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.டி.கே. சிவகுமார், மாண்புமிகு கேரளம் மாநில முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன், மாண்புமிகு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் திரு. டி.கே. ஜோஷி, மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன், மாண்புமிகு தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் திரு. மல்லு பட்டி விக்ரமார்க்கா, மாண்புமிகு லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் திரு. பிரஃபுல் படேல், தென் மண்டலக் குழுவினைச் சேர்ந்த மாநிலங்களின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.