Sengodimediaworks

Sengodimediaworks செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENKODI PRODUCTION CENTER)

செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENKODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம்.

16/11/2025

ஆதலால் காதல் செய்வீர் | Tamil Heartwarming Short Film | Humanity | Black Pasanga | KAAL KATTU

22/11/2017
31/10/2017
வெகுஜன பத்திரிகையான குமுதம் வாரஇதழில் கார்ட்டூனிஸ்டாக இருப்பவர் பாலா. அரசியல் நையாண்டித்தனத்தோடு, சற்று சமூகக் கோபத்துடன...
06/03/2016

வெகுஜன பத்திரிகையான குமுதம் வாரஇதழில் கார்ட்டூனிஸ்டாக இருப்பவர் பாலா. அரசியல் நையாண்டித்தனத்தோடு, சற்று சமூகக் கோபத்துடன் வெளிப்படுபவை இவரது கார்ட்டூன்கள். முகநூலில் தொடர்ந்து எழுதுகிறார். இவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய உரையாடல்களாக விரிகின்றன அப் பதிவுகள். புறக்கணிக்கப்படும் விளிம்பு நிலை மனிதர்களிடம் பாலா உரையாடுகிறார். அவர்களுக்கு உதவுகிறார். அப்படி அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய பதிவுகளின் தொகுப்பு இந்நூல். பத்திரிகையாளனாக அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றியும் தீவிரமாக எழுதுகிறார். இவரது எழுத்திலும் சமூகக் கோபம் மிஞ்சி நிற்பதை தவிர்க்க முடியவில்லை. களத்தில் நிற்கும் ஒரு பத்திரிகையாளரின் அனுபவங்களின் தொகுப்பு என்பதால் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

Tamil Books Online | Tamil CD's | Online Shopping

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரும் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளாத் துயரம் நிறைந்தது. அப்படியொரு அகதியாக சி...
07/02/2016

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரும் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளாத் துயரம் நிறைந்தது. அப்படியொரு அகதியாக சிறுவயதில் ராமமேஸ்வரம் வந்தவர்தான் தொ.பத்திநாதன். முகாம்களில் இருந்து வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் துயரம் நிறைந்த வரலாற்றுப் பதிவுகள். அகதிகளின் அவல நிலையை, அவர்களின் துன்பம் மிகுந்த வாழ்க்கையைத் தொடர்ந்து பதிவு செய்து வருபவர், பத்திநாதன்.

Tamil Books Online | Tamil CD's | Online Shopping

புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பிரத்யேக புத்தக இணைய அங்காடி. தமிழ்நாட்டு விலையிலேயே புத்தகங்களை பெற்...
02/02/2016

புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பிரத்யேக புத்தக இணைய அங்காடி. தமிழ்நாட்டு விலையிலேயே புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். தபால் செலவு மட்டும் கூடுலாக செலுத்தினால், போதும்

ஒவ்வொரு அத்தியாயத்தையும் திரைக்கதை போல் சொல்லி, படிப்பவர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றுள்ளார். ஆஷ் கொலை ...
04/01/2016

ஒவ்வொரு அத்தியாயத்தையும் திரைக்கதை போல் சொல்லி, படிப்பவர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றுள்ளார். ஆஷ் கொலை வழக்கு, மருதுபாண்டியர் நகைகள் வழக்கு, சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு, அன்னிபெசன்ட்& ஜெ.கிருஷ்ணமூர்த்தி வழக்கு, தூத்துக்குடி சதி வழக்கு என்று பழைய வழக்குகளையும் எடுத்துக்கொண்டது இந்தத் தலைமுறையும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான். இந்த நூலில் உள்ள பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே இதுவரை தெரியாதது வேதனையையும் வியப்பையும் தான் தருகிறது. சரித்திரத்தின் ரத்தம் படிந்த பக்கங்களைப் புரட்டிப் பார்க்க மனோ தைரியத்துடன் உள்ளே செல்லுங்கள்...

Tamil Books Online | Tamil CD's | Online Shopping

மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய...
27/11/2015

மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாறு நிகழ்வின் புனைவு.

Tamil Books Online | Tamil CD's | Online Shopping

கூளமாதாரிஒடுக்கப்பட்டவர்களின் வலியினை யாதுமறியா சிறுவர்களின் மூலம் சொல்லும் நாவல். ஆடு மேய்க்கும் சிறுவர்களை சாதி எப்படி...
31/01/2015

கூளமாதாரி

ஒடுக்கப்பட்டவர்களின் வலியினை யாதுமறியா சிறுவர்களின் மூலம் சொல்லும் நாவல். ஆடு மேய்க்கும் சிறுவர்களை சாதி எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை வலியோடு சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

குழந்தைகள் உலகம் அற்புதமானது.கற்பனைகளும், கனவுகளும் கொண்டு துள்ளி திரியும் அந்த பருவத்தின் மீதான ஏக்கம் யாவருக்கும் உண்டு. கிராமத்து சிறார்களின் உலகம் இதனிலும் சுவாரசியமானது. வயல் வெளிகளில் ஓடி திரிந்து, விருப்ப மரங்களின் ஏறி ஆடி, பூக்களையும்,பழங்களையும் தனதாக்கி கொண்டு, வித விதமாய் விளையாட்டுகள் பழகி, நினைத்த பொழுதில் கிணற்றில் குளித்து மகிழும் வாழ்கை ஒடுக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கும் உண்டு...

Tamil Books Online | Tamil CD's | Online Shopping

Address

Old No 40, New No 22/1
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Sengodimediaworks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share