
29/04/2025
கோவையில் பியூர் சினிமா தொடக்க விழா
04-05-2025, ஞாயிறு காலை 10.30 மணிக்கு
📢 *கோயம்புத்தூர் உள்ளவர்கள் மட்டும் இணைந்துகொள்ளுங்கள்.*
https://chat.whatsapp.com/Bk67SrY9h0v1N9axKP79bT
தொடங்கி வைப்பவர்: இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ASC
நண்பர்களே தமிழ் நவீன புத்தக அங்காடி வரலாற்றில் முதல் முறையாக சென்னையை தாண்டி கோவையில் புதிய கிளையை தொடங்குகிறது பியூர் சினிமா. கோவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கிளஸ்டர் மீடியா கல்லூரியுடன் இணைந்து பியூர் சினிமா புத்தக அங்காடி, கோவை திரைப்பட விழா, கோடை குறும்பட விழா என கோவையை சினிமா பண்பாட்டுத் தளமாக மாற்ற தொடர் முன்னெடுப்புகளை நிகழ்த்தவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. மிக முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை கோவையில் தொடங்கி வைக்க ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ASC அவர்கள் கோவை வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஒளிப்பதிவாளர் இந்தி திரையுலகை ஆளும் ஒளிக்கலைஞர் என்றால் அது ரவிவர்மன் அவர்களே. இந்தியாவில் இருந்து அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சொசைட்டி உறுப்பினராக தெரிவாகியிருக்கும் ரவிவர்மன் அவர்களுக்கு அங்கேயே பாராட்டும் வழங்கி நிகழ்வில் பங்கேற்க கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சினிமா ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
பியூர் சினிமா மற்றும் கிளஸ்டர் மீடியா கல்லூரி
பியூர் சினிமாவின் இன்றைய காணொளி
https://youtu.be/vsVMzWVH8Ts?si=Kn8amvB2Ir9nYTtA