Tamil Xpress

Tamil Xpress Welcome to Tamil Express on Facebook.

மலையாள நடிகையை நடிகர் திலீப் கடத்திய விவகாரத்தில், திரையுலகில் பெண்களின் நிலை குறித்து அறிய அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின...
19/08/2024

மலையாள நடிகையை நடிகர் திலீப் கடத்திய விவகாரத்தில், திரையுலகில் பெண்களின் நிலை குறித்து அறிய அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானது. அதில் கேரள சினிமாவை குற்றப்பின்னணி கொண்டவர்கள் ஆள்வதாகவும், Adjustments செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை & வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவு...
19/08/2024

தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை & வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தாமே முன்வந்து விசாரிக்கும்...
19/08/2024

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தாமே முன்வந்து விசாரிக்கும் வழக்கை வரும் செப்டம்பர் 9ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்துள்ளார்.

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் திருநாளை அன்புச் சகோதரிகளுடன் செவ்வந்தி இல்லத்தில் கொண்டாடி மகிழ்வுற்றேன். மதங்க...
19/08/2024

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் திருநாளை அன்புச் சகோதரிகளுடன் செவ்வந்தி இல்லத்தில் கொண்டாடி மகிழ்வுற்றேன். மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூல் ஓரம்-ன் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சல் பாதிப்பால், புவனேஷ்வரில் உள்ள ...
19/08/2024

மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூல் ஓரம்-ன் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சல் பாதிப்பால், புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுவோர், சமூக வலைதளத்தில் அவரை விமர்சிப்போர் அடையாளம்...
19/08/2024

கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுவோர், சமூக வலைதளத்தில் அவரை விமர்சிப்போர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும். வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை அரசு இங்கே ஒருபோதும் அனுமதிக்காது: மேற்குவங்க அமைச்சர் உதயன் குஹா

கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, முல்லை பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விஷம...
19/08/2024

கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, முல்லை பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதில் பிரதமர் மோடி தலையிட்டு மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில...
19/08/2024

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, தெலங்கானாவில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரியில் மிக-கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிரு...
19/08/2024

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரியில் மிக-கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் & திருவண்ணாமலையில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம்

தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட...
19/08/2024

தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

கருணாநிதி நாணய வெளியீட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசு நிகழ்ச்சி. எனவே தான் ராகுல் காந்தியை அழைக்கவில்லை. பாஜக...
19/08/2024

கருணாநிதி நாணய வெளியீட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசு நிகழ்ச்சி. எனவே தான் ராகுல் காந்தியை அழைக்கவில்லை. பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் திமுக எப்போதும் அதன் கொள்கையோடு இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, ர...
19/08/2024

தமிழக முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் இன்று காலை நியமிக்கப்பட்டார்.

Address

#16, Ram Colony, West Mambalam
Chennai
600033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share