செய்திகள்

செய்திகள் தமிழ் நாட்டு செய்திகளை பெற்று கொள்ள Fully active Tamil News website and entertainment
(430)

26/01/2025
90s கிட்ஸ் பிடித்த புளியங்கா 🤤🤩🤩😍🤩🥰😘 உங்களுக்கும் பிடிக்கும் என்றால் ஒரு like 👍
04/01/2025

90s கிட்ஸ் பிடித்த புளியங்கா 🤤🤩🤩😍🤩🥰😘 உங்களுக்கும் பிடிக்கும் என்றால் ஒரு like 👍

138 வருட வரலாற்றில் 18 ஆவது சாம்பியன் குகேஷ்! இரண்டாவது இந்தியனாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார் மிக இளம் வயது...
13/12/2024

138 வருட வரலாற்றில் 18 ஆவது சாம்பியன் குகேஷ்!

இரண்டாவது இந்தியனாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்

மிக இளம் வயது (18 வயது) சாம்பியனாக உருவாகியிருக்கிறார்

ஏறக்குறைய 40 வருடங்களாக கேரி காஸ்ப்ரோவிடம் (22 வயது) (படத்தில் 13 ஆவது இடம்) இருந்த இளம் வயது சாதனையை குகேஷ் தட்டிப் பறித்திருக்கிறார்.

கேரி காஸ்ப்ரோ சாதாரண நபர் இல்லை, 255 மாதங்கள் அதாவது 21 வருடங்கள் தரவரிசையில் முதலிடத்தை வைத்திருந்திருக்கிறார்

ஆறு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

அத்தகைய பெருமை மிகுந்தவரின் சாதனையை தகர்த்து, செஸ் உலகிற்கு தனது வருகையை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் குகேஷ்!

11/12/2024

சரிகமப ஸ்டார் யோகஸ்ரீக்கு கண் பட்டிடிச்சு

பரோட்டா செய்வது எப்படி .....தேவையான பொருட்கள் -மைதா - 750 கிராம்உப்பு - தேவையான அளவுமுட்டை - 1சர்க்கரை - 1 மேஜைக்கரண்டிப...
08/12/2024

பரோட்டா செய்வது எப்படி .....

தேவையான பொருட்கள் -
மைதா - 750 கிராம்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
பால் - 125 ml
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதில் முட்டை மற்றும் வெதுவெதுப்பான பால் சேர்த்து பிசையவும்.

பிறகு தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு நனைந்த துணியை வைத்து மூடி மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மறுபடி 5 - 10 நிமிடம் வரை பிசையவும். மறுபடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு அதை கொஞ்சம் பெரிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டும் பொது கொஞ்சம் நன்றாக அழுத்தம் கொடுத்து உருட்டி கொள்ளவும். கிட்டதட்ட 10 உருண்டைகள் வரை வரும். லேசாக எண்ணெயை மேலே தடவி 15 நிமிடம் ஊற விடவும்.

ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் மைதா மாவு எடுத்துக் கொள்ளவும். பூரி கட்டை மற்றும் தேய்க்கும் கல் அனைத்திலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

ஒரு உருண்டை மாவை எடுத்து எவ்வுளவு மெலிதாக பூரி கட்டையால் தேய்க்க முடியுமோ அது வரை தேய்க்கவும். தேய்க்கும் பொது மாவு சுருங்கினால் எண்ணெய் தடவி கொள்ளவும். பிறகு கையை வைத்து எல்லா ஓரங்களிலும் முடிந்த அளவுக்கு இழுத்து விடுங்கள்.
பிறகு அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படுமாறு தடவி விடுங்கள். பிறகு கொஞ்சம் 1/2 மேஜைக்கரண்டி மைதா மாவை தூவி தடவி விடுங்கள். பிறகு அதை விசிறி போல் மடிக்கவும்....

பிறகு அதை சுருட்டி விடவும். லேசாக எண்ணெய் மேலே தடவி ஈர துணியால் மூடி விடவும்.

அணைத்து உருண்டையும் இவ்வாறு செய்து ஈர துணியால் மூடி விடவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடு படுத்திக் கொள்ளவும். ஒரு சுருட்டிய உருண்டையை எடுத்து பூரி கட்டையால் தேய்த்துக் கொள்ளவும்.

தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் நன்றாக சிவந்து வேகும் வரை மாற்றி போட்டு எடுத்து விடுங்கள்.

மூன்று பரோட்டா போட்டதும் எல்லாம் சேர்த்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள்.
சுவையான பரோட்டா ரெடி. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு அல்லது வெஜ் குருமாவுடன் சேர்த்து சாப்பிடவும்....

தன் வினை தன்னைச்சுடும் –மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..அவர்...
14/09/2024

தன் வினை தன்னைச்சுடும் –
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை

நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!

கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!

கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!

காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்....

பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ

மட்டுமே இருந்தது !!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!

‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!

‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!

இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!

இது தான் உலகநியதி !!

நாம் எதைத் தருகிறோமோ

அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும் !!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,

ஆனா....

நிச்சயம் வரும் !!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கி...
07/09/2024

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.

6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.

7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.

8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

9. மண், செம்பு, வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.

10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இனியாவது இத்தலைமுறையினர்

“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்” என்றுணர்வோமா?

சுருக்கமாக சொல்லப்போனால் முன்பெல்லாம் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்று கக்கூஸ் இருக்கும், இப்போது வெளியில் சென்று கண்டதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து கக்கூஸ் இருக்கிறோம்...

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்!பூஜா என்ற  இளம்பெண், ”ப...
30/08/2024

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!
முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்!
பூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.

இந்தப் பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்....

“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும்.

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” என்றார்

(வாசித்ததில் நேசித்ததது)
பணத்திற்காக மணந்தவர்கள் ஏராளம்...
குணத்திற்காக மணந்தவர்கள் சிலரே....

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share