நேதாஜி மாத இதழ்

நேதாஜி மாத இதழ் உண்மையை சொல்!
உறுதியாக சொல்!
என்ன இடர?

 #யார்_இந்த_முகவை_முத்துராமலிங்கம்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உறவினர். தேவர் பிறந்த அதே  கமுதி மண்ணில் பிறந்தவர் ...
13/06/2025

#யார்_இந்த_முகவை_முத்துராமலிங்கம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உறவினர். தேவர் பிறந்த அதே கமுதி மண்ணில் பிறந்தவர் . மதுரையில் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் தலைவர்களின் தளபதியாக வலம் வந்துக்கொண்டிருகிறார் ... இவரது தீபந்த பேரணி மதுரையில் இன்றும் பிரசித்தி பெற்றது. தனியாகத்தான் புலி வந்துபோகும் என்பதை போல் தனிஒருவனாக அரசியலிலும் கட்சியிலும் இவர் சாதித்தது பல பல.. இது அவரது எதிரிகளுக்கும் தெரியும் ஏனெனில் பலன் பெற்றவர்களில் எதிரிகளும் அடங்குவர்.

ஏ.ஆர.பெருமாள்,ஆண்டித் தேவர், அய்யன் அம்பலம் , வல்லரசு, சந்தானம் போன்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த அரசியல் தலைவர்களின் செயல்திறன் அவர் .. மாநில தலைவராகவும் இன்று தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவராக பொறுப்பு வகித்து கொண்டிருக்கிறார். ஏன் இதை இப்போது சொல்லவேண்டும்?

திருப்பூரில் கஞ்சா வழக்குள்ள ஒரு கந்துவட்டிக்காரனை கட்சி பொறுப்பில் இருந்து நீங்க வேண்டும் அவன் திருந்தினால் சேர்த்துக்கொள்ளலாம் என கருத்து சொன்னதிற்காக இவரை மிரட்டும் தோனியில் பேசும் நான்கடி கந்துவட்டிக்காரனை எச்சரிக்கிறோம். தனது கஞ்சா வியபாரத்துக்கும் கந்துவட்டி தொழிலுக்கும் தேவர் பெயரை பயன்படுத்துவதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம்.

-நாடமாடும் ராணுவம்

09/05/2025

ரயில் சென்ற பயணிகள் வெளியிட்ட வீடியோ!

ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி பாகிஸ்தான் செய்த டோரோன் தாக்குதல் இந்தியா முறியடிப்பு !

06/05/2025

தற்போது இந்தியா ஏவுகணை ஏவி பாகிஸ்தானை பகுதியை தாக்கிய காட்சி

10/04/2025

“Delhi Chalo” - மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அகில இந்திய ஃபார்வட் பிளாக் சார்பில் பாராளுமன்றத்தை நோக்கி போராட்டம்!

மத்திய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, அகில இந்திய ஃபார்வட் பிளாக் சார்பில் “Delhi Chalo” எனும் முழக்கத்துடன் தலைநகர் டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நாளை (11.04.2025) நடைபெற இருக்கிறது.

இதில் தமிழ்நாட்டின் சார்பாக 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் இருந்து 5000க்கும் மேற்பட்ட நிரவ்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:

1. அத்தியாவசிய மற்றும் மருத்துவப் பொருட்களின் விலை அதிகரிப்பு: மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக அத்தியாவசியமான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட முக்கிய தேவைகள் விலை அதிகரித்துள்ளதை கண்டிக்கிறோம்.

2. வேலைவாய்ப்புக்கான வாக்குறுதிகள்:
பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதாக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெயரிடல்: மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயர் சூட்டும் நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

4. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: இப்போதுள்ள 142 அடியில் இருந்து 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. நேதாஜி மற்றும் INA ஆவணங்கள்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் (INA) தொடர்பான மறைக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசு முழுமையாக வெளியிட வேண்டும்.

6. பொதுத்துறையை தனியார்மயமாக்கல்: மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

7. புதிய கல்விக் கொள்கை - மும்மொழி திட்டம்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வந்துள்ள மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஏற்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும்.

8. மதச்சார்பற்ற இந்தியா - வக்ஃப் திருத்தச் சட்டம்: இந்திய அரசியலமைப்பின்படி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் அதற்கு எதிராக உள்ளது. எனவே, அந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, பாராளுமன்றத்தை நோக்கி நாளை ஒரு பெரும் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் அகில இந்திய ஃபார்வட் பிளாக் சார்பில் நடைபெற இருக்கிறது.

டாக்டர் பி.வி. கதிரவன், Ex M.L.A.
மாநில பொதுச் செயலாளர்
தேசிய துணைத் தலைவர்
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
தமிழ்நாடு மாநிலக் குழு

15/02/2025

தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள்:

தமிழச்சி, தமிழ்ச்செல்வன், அழகிரி, தமிழரசி, செந்தில் வேலன்

தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள்:

அறிவழகன், அழகுமதி, பொன்னரசி, திருமாறன்

தமிழகத்தின் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள்:

நரேஷ், மோனிஷா, ஹர்ஷவர்தன், சோமேஷ், சவும்யா, தீஷிதா, ஜித்தேஷ், சாய் நேத்ரா

Hard Truth ....

27/01/2025

'நைனா' பெரியார் அறிவுரைகளின் படி நடக்கும் பெண்!

27/01/2025

பெரியாரால் தான் பெண்களுக்கு சம உரிமை கிடைத்தது - வைகோ மகன் துரை வைகோ

பெரியார் காலத்தில் திராவிட கழகத்தில் எத்தனை பெண்கள் மாவட்ட செயலாளராக மாநில பொறுப்பாளராக இருந்தனர்? ஒருவருமில்லை

ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து ஜான்சி ராணி என்ற படையை உருவாக்கி இருந்தார்கள். பெண்களுக்கு சம உரிமை கொடுத்தது தேச அபிமானமும் தமிழ் அபிமானமும் கொண்டவர்கள்தான் பெரியாரல்ல..

27/01/2025

அடுத்தப் பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் என விரும்புகிறேன் ‍ ‍- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

தமிழர்கள் முட்டாள்கள் காட்டுமிராண்டிகள் ‍ - தந்தை பெரியார்

ஆழ்ந்த இரங்கல்கள் 😭
11/11/2024

ஆழ்ந்த இரங்கல்கள் 😭

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் போர் முரசு பி.என்.வல்லரசு அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு தினம்.அகில இந்திய ஃபார...
21/10/2024

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் போர் முரசு பி.என்.வல்லரசு அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு தினம்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பேரியக்கத்தை தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வழியில் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு பின்பு மிகச் சிறப்பாக வழிநடத்திய ஆற்றல்மிகு தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

தனது வாழ்நாள் முழுவதும் மிக எளிமையான அரசியலை கடைபிடித்தவர். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து அகில இந்திய செயலாளராக உயர்ந்தவர். வாழ்நாள் கடைசிவரை திருமணம் முடிக்காமல் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தவர். உசிலம்பட்டி தொகுதியின் செல்லப்பிள்ளை என்றும் போர் முரசு என்றும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

உசிலம்பட்டி பகுதிவாழ் விவசாயிகளின் துயர் துடைக்க 58 கிராம கால்வாய் பாசன திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியவர். இடைநிலை ஆசிரியர் 200க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் இருந்த நிலையில் அவர்களை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் வேவையில்
அமர்த்திய பெருமைக்குரியவர் மரியாதைக்குரிய பி.என்.வல்லரசு அவர்கள்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் உழைத்த உழைப்பையும் அவர் செய்த அளப்பரிய தியாகங்களையும் நினைவுகூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.

15/09/2024

பார்க்காமல் சரளமாக மலையாளம் பேச தெரிந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களால்
தூண்டு சீட்டு இல்லாமல் தமிழ் மொழியை பேச தெரிவில்லை

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when நேதாஜி மாத இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நேதாஜி மாத இதழ்:

Share