10/03/2022
மகளிர் தினத்தில் நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தில் வெளியான முத்தான மூன்று அறிவிப்புகள்!
நிர்வாகத்திற்கும் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மலுக்கும் AIUJ (அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம்) வாழ்த்து!
பெண் தொழிலாளர்களின் புரட்சியின் நீட்சியில் உருவான உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.
ஒரு சமூகம் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை கண்டறிவதற்கு அந்த சமூகத்தில் பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அறியமுடியும்.
என்றார் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர். தமிழகத்தில் குயிலி போன்று இந்தியா முழுவதும் போர் புரிந்து வீரமரணம் ஏற்ற பெண்கள் ஏராளம்.
1800 களில் பிரான்ஸ் குவாடேலூப்பி வெயில்ஸ்ட் (Guadelope whilst) என்கிற இடத்தில் அடிமைகளாக இருந்த மக்களிடம் கிளர்ச்சி செய்து, புரட்சி பாதைக்கு நகர்த்தியவர் லா முலெட்ரெஸ்ஸி சோலிட்யூட் ( La Mulatresse Solitude).
மக்களை திரட்டி புரட்சியில் ஈடுபட்டதால் இவர் தூக்கிலடப்பட்டார். அப்போது அவர் 8 மாத கர்பிணி . அப்படியென்றால் அவர் கர்பமாக இருந்த போதிலிருந்தே காலணி ஆதிக்கத்திற்கு எதிராக போர் புரிந்துள்ளார் என்கிறது வரலாறு. சாதிப்பதற்கு பெண்களுக்கு எதுவும் பொருட்டல்ல
என்பதற்கு சான்றுகள் வாலாற்றில் ஏராளம் உண்டும்.
பெண்களுக்கு எதிராக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அடிமை கருத்துகளை உடைத்து ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.
அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கக்கூடிய சம வாய்ப்பு, சம ஊதியமும், பெண்கள் பணியற்றக்கூடிய இடங்களில் ஏதுவான புறச்சுழலை, போன்றவற்றை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
பல நிறுவனங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். அந்த அவகையில் கடந்த மார்ச் 8 மகளிர் தினத்தன்று நியூஸ் 7 தமிழ் ஊடகத்தில் பெண் பணியாளர்களுக்கு முக்கியமாக மூன்று அறிவிப்புகனை நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் அறிவித்துள்ளார். அவை,
1, மாதவிலக்கு நாளின் முதல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு. (மாதத்தில் 3 நாட்கள் அனைத்து ஊழியர்களுக்கும் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி உள்ள நிலையில் இனி மகளிர் 4 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்)
2, நிறுவனத்தில் பணி செய்யும் மகளிரின் குழந்தைகள் வார இறுதி நாட்களில் அலுவலகம் அழைத்து வர அனுமதி, குழந்தைகளுக்கு தனியாக CRECHE ஏற்பாடு,
3, பெண் பணியாளர்களின் உடல் நலனை தேவைப்படும்பட்சத்தில் பரிசோதித்துக்கொள்ள இரண்டு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
மகளிர் தினத்தை பரிசு பொருட்கள் வழங்கும் விழாகவும், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும் விழாவாகவும் மாற்றிவிடமால் அதன் வரலாற்று தன்மை உணர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ள இம்மூன்று அறிவிப்புகளுக்காக நியூஸ் 7 தமிழ் நிர்வாகத்திற்கும், நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ( ALL INDIA UNION OF JOURNALIST)) வாழ்த்தி மகிழ்கிறது.