
19/05/2025
மனித நேயம் மாய்ந்தபோன அரபு & முஸ்லிம் நாடுகள்!
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் "இஸ்லாமிய போர்வையில் ஒழிந்து கொத்தடிமைகாளாக வாழ்ந்துவரும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அடிமை மன்னர்கள் ஆட்சியாளர்கள் மேற்க்கத்திய ஏகாதிபத்திய கொடுங்கோலார்களுக்கு தனது நாட்டின் செல்வத்தை லட்சம் கோடிகளில் வாரி இரைத்து இருக்கின்றனர் "
அடுத்த நொடி தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தினந்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு "ஷஹிதாக" மரண அடையும் #இறைவன் புறத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இறைவனே மட்டுமே சார்ந்து இருக்கும் பாலஸ்தீன மக்கள் இன்றுவரை கடந்த 75 வருடங்களாக சொல்லனா துயரத்தில் வாழ்ந்து அல்ல, மடிந்து வருகின்றனர். மரணத்தையே தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் வடிவமைப்பது #உன்னத வாழ்க்கையை வாழ்கின்றனர் பாலஸ்தீன மக்கள்.
அதே நேரத்தில் தங்களை முஸ்லிம் நாடுகளாக காட்டிகொள்ளும் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள், தங்கள் நாட்டின் வளங்களையும், ஆட்சி அதிகாரத்தையும் மேற்க்கத்திய அமெரிக்க சியோனிச ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு தாரை வார்த்து வருகிறார்கள். பெரும்பாலான அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் பல்லாண்டுகளாக மேற்க்கத்திய நாடுகளுக்கு தங்கள் நாட்டை அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் சவூதி அரேபியா 600 பில்லியன் டாலர் (60 லட்சம் கோடிகள்), கத்தார் 1.2 ட்ரில்லன் (120 லட்சம் கோடிகள்) மற்றும் UAE ஐக்கிய அரபு அமீரகம் (140 லட்சம் கோடிகள்) என இத்தனை கோடிகள் கோடிகள் லட்சம் கோடிகளை அமெரிக்காவில் முதலீடு என்ற பெயரில் அள்ளி கொடுத்துள்ளான்கள்; அதுவும் இவ்வளவ்வு பெரிய இனப்படுகொலை நடக்கும் பொழுது ..அதுவும் கடந்த 78 வருடாமாக தொடர்ச்சியாக.
இந்த கேடுகெட்ட அரபு மற்றும் முஸ்லிம் நாட்டு மன்னர்கள், முஸ்லிம் பெயர் வைத்து இருக்கலாம், முஸ்லிம் நாடுகள் என்ற பெயரில் வாழ்ந்து வரலாம், ஆனால் இவர்கள் இஸ்லாமிய போர்வையில் ஒழிந்து கொண்டு வாழும் கொத்தடிமைகள், இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் அல்லது மனித நேயத்திற்கும் தொடர்பற்ற ஜென்மங்கள். இவர்கள் நினைத்தால், இஸ்ரேல் ஒன்றுமே செய்யமால் செய்து விட முடியும், ஆனால் இவர்கள் கோழைகள். அண்ணல் நபிகள் (ஸல்) எவன் ஒருவன் கோழையாக வாழ்கிறானோ, அவனுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த இஸ்லாமிய மற்றும் அரபு அடிமை மன்னர்கள் இருக்கும் வரை .... புனித நபிமார்கள் வாழ்ந்த புனித நகரம் அல் குத்ஸ் பாலஸ்தீனம் "சுஹாதாக்களின்" ரத்தத்தால் மட்டுமே அப்பூமி செழுமையாகும்....ஆனால் வெளியே இருந்து பார்க்கும் நாம், இந்த கேடுகெட்ட ஆட்சியார்களை அவர்கள் சுகபோக பதவியில் இருந்து நீக்கி நல்ல ஆட்சியாளர்கள் வர பிரார்த்தனை செய்யவேண்டும் . மேலும் பாலஸ்தீன மக்களுக்காக நம்மால் முடிந்த வரை அல்லாஹுவிடம் கைஏந்துங்கள், நாம் அவர்களின் நிலையால் வாழ்ந்தால்..அந்த நிலையில் துவா செய்யவும் இன் ஷா அல்லாஹ்