True Pix

True Pix True Pix Channel initiated to present contents like Entertainment, News, cookery, Fitness, home reme

After jailer success Nelson's next Film also Sun Pictures.. kalanitimaaran confirmed....
31/08/2023

After jailer success Nelson's next Film also Sun Pictures.. kalanitimaaran confirmed....

🎥 தலைவர் 169: தீயாய் வேலை செய்யும் நெல்சன்..சபாஷ் என்ற ரஜினி..!

🎥 ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியின் சமீபத்திய படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ரஜினியும் சில விமர்சனத்திற்கு ஆளானார். இந்நிலையில் ரஜினி இனி படங்களில் நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என பலர் பேசிவந்தனர். அந்த பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தன் அடுத்த படத்தின் அறிவிப்பை மாஸான ப்ரோமோவின் மூலம் வெளியிட்டார். மேலும் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்தி

🎥 கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என தொடர் வெற்றிகளை கொடுத்த நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. மேலும் இயக்குனர் நெல்சனும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினியின் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்கப்போவதில்லை, பீஸ்ட் படத்தை பார்த்த பிறகு ரஜினி நெல்சனின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால் இந்த விமர்சனத்தையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத ரஜினி நெல்சனின் மீது முழு நம்பிக்கை வைத்து தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு

🎥 பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்ததாக இதுவரை இப்படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இருப்பினும் இணையத்தில் அவ்வப்போது தலைவர் 169 படத்தை பற்றிய தகவல்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றது. அதன் படி இப்படத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்குவதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் துவங்கவுள்ளது. மேலும் இப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. எனவே விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டைட்டில் மற்றும் கதைக்களம்

🎥 தலைவர் 169 படத்தின் கதைக்களம் பற்றி தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன் படி இப்படம் சிறையில் இருக்கும் கைதிகளை பற்றிய கதையாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இக்கதையை கேட்ட ரஜினி மிகவும் இம்ப்ரெஸ் ஆகியுள்ளாராம். இந்நினையில் இப்படத்திற்கு ஜெயிலர், பாஸ், சாம்ராட் என மூன்று தலைப்புகளை நெல்சன் ரஜினியிடம் சொல்லியிருக்கின்றார். எனவே இந்த மூன்று டைட்டில்களில் ஒன்றை ரஜினி தேர்ந்தெடுப்பார் என தெரிகின்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிவது குறிப்பிடத்தக்கது. 🎬

🎥 ருத்ரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக...
18/04/2023

🎥 ருத்ரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் படக்குழுவினர்.


🎥 முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது.

🎥 இந்த வெற்றியை பயனுள்ள வகையில் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கதாசிரியர் திருமாறன் மற்றும் நடிகர் இளவரசு ஆகியோர் சென்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடி உணவும், நன்கொடையும், அத்தியாவசிய பொருட்களும் அளித்து மகிழ்ந்தனர்.

🎥 இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன், "ருத்ரன் திரைப்படத்திற்கு தங்களது மேலான ஆதரவை அளித்த ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான். எனவே பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை கொண்டாடியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது," என்றார்.

🎥 காஞ்சனா' வெற்றிக்குப் பின்னர் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து 'ருத்ரன்' படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🎥 ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் தவிர, பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளதுனர்.

🎥 ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு கதையான‌ 'ருத்ரன்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பையும், ராஜு கலை இயக்கத்தையும், சிவா-விக்கி சண்டைக்காட்சிகளையும் கையாண்டுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதையை கே.பி.திருமாறன் எழுதியுள்ளார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 🎬

🎥'யாத்திசை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*🎥'யாத்திசை' டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரு...
11/04/2023

🎥'யாத்திசை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*

🎥'யாத்திசை' டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

🎥 வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'.
ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் 'யாத்திசை'. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'யாத்திசை' தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர்.

🎥 இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெற்றது.

🎹இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசியதாவது…

முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இது பீரியட் படம் என்பதால் இசையமைப்பது பெரும் சவாலாக இருந்தது.

🎥 நடிகை சுபத்ரா பேசியதாவது…

டிரெய்லருக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. படத்திற்கும் அதே ஆதரவு தாருங்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது, படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி. 🙏

💰தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் பேசியதாவது…

எங்கள் குழுவை நம்பி மட்டுமே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்தின் டிரெயல்ருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.

🎬 இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசியதாவது.

தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள், அதன் பிறகே இந்தப்படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல ஆனால் யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.

🎬 விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…*

யாத்திசை சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம் அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப்படத்தில் இருக்குறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்.

🎥 நடிகர் விஜய் சேயோன் பேசியதாவது…*

யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் வெற்றிபெற ஆதரவு தாருங்கள், நன்றி. 🙏

🎥இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.🎬

🎥 📚நடிகர் சரத்குமார் தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கினார்.📚 தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்கள...
11/04/2023

🎥 📚நடிகர் சரத்குமார் தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கினார்.

📚 தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார்.

📚 தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:

📚 நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

📚 இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன்.

📚 இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிலை நான் படித்திருக்கிறேன், அந்த பண்பை பழகிக்கொண்டும் இருக்கிறேன்.

📚 என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள்.

📚 இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன்.

📚 நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்குவோருக்கு புத்தகத்தில் நான் கையெழுத்திட்டு தந்து வருகிறேன்.

📚 தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசி, அமேசான் கிண்டில், ஐபேட், மடிக்கணினி ஆகியவைகளால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. இதனால் புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

📚 இதே போல பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று சரத்குமார் கூறினார்.

📚 இந்த முன்முயற்சியின் பலனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 📖

30/03/2023

🎥 Ponniyin Selvan Part - 2,
Release 28th, April 2023
Tamil Trailer HD
🎬

It’s a wrap for the song!! 🕺💃 Team   &   kickstart Megapower Star  Birthday Celebrations.
26/03/2023

It’s a wrap for the song!! 🕺💃

Team & kickstart Megapower Star Birthday Celebrations.




🎥 விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்துகிறார்🎥 லோகேஷ் கனகராஜுடன் விஜய் நடிக்கும்...
26/03/2023

🎥 விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்துகிறார்

🎥 லோகேஷ் கனகராஜுடன் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் படக்குழு காஷ்மீரில் தங்களது சமீபத்திய ஷெட்யூலை முடித்துள்ளது. காஷ்மீரில் குளிர்ந்த காலநிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘லியோ’ படக்குழு சென்னை (மார்ச் 23) திரும்பியது. இப்போது, லேட்டஸ்ட் அப்டேட் என்னவெனில், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன் தனது படத்திற்காக காஷ்மீரில் படமாக்குகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தை அறிவித்துள்ளார், மேலும் அவர் வரவிருக்கும் படத்தில் இராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்காலிகமாக ‘எஸ்கே 21’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை முடித்துள்ளார், மேலும் இயக்குனர் இப்போது இருப்பிட வேட்டையை தொடங்கியுள்ளார்.

🎥 ராஜ்குமார் பெரியசாமி ஏற்கனவே காஷ்மீரில் சிவகார்த்திகேயனுடன் தனது படத்திற்கான படப்பிடிப்பு இடத்தை இறுதி செய்ய உள்ளார், மேலும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும். நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படம் வெளியாகும் முன் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில்.. 🎬

🎥 மீண்டும் வருகிறார் மலைச்சாமி - நடிகர்திலகம்!🎥 March 24 முதல் டிஜிட்டல். தொழில்நுட்பத்தில்1. சென்னை சத்யம் வளாகம், 2. எ...
25/03/2023

🎥 மீண்டும் வருகிறார் மலைச்சாமி - நடிகர்திலகம்!

🎥 March 24 முதல் டிஜிட்டல். தொழில்நுட்பத்தில்

1. சென்னை சத்யம் வளாகம்,
2. எஸ்கேப்,
3. கோடம்பாக்கம் பலாசோ,
4. பீ.வீ.ஆர் அரங்குகள்,
5. பேபி ஆல்பர்ட் மற்றும் தமிழகம் எங்கும்..

🎥 நடிகர்திலகத்தின் முதல் மரியாதை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தயாரித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த திரைப்படமும் இதுதான்.

🎥 திரையுலக ஜாம்பவான்களான பஞ்சுஅருணாச்சலம் அவர்கள்,இளையராஜா அவர்களின் கணிப்பையெல்லாம் தவிடுபொடியாக்கிய திரைப்படம்தான், 'முதல் மரியாதை'.

🎥 'இந்தப் படம் அதிர்ஷ்டத்தால் கூட ஓடாது என்றிருக்கிறார்', பஞ்சுஅருணாச்சலம் அவர்கள்.

🎥 படத்தின் Double positive பார்த்து விட்டு இளையராஜா அவர்களுக்கு திருப்தியே இல்லாமல்தான் படத்திற்கான பின்னணி இசையை கோர்த்திருக்கிறார். அதுவும் சிவாஜி அவர்கள் சாகும் தருவாயில் இருக்கும் முதல் காட்சியைப் பார்த்து, 'என்னய்யா இது',என்றே பாரதிராஜாவைப் பார்த்து கேட்டிருக்கிறார் இளையராஜா.

🎥 பாரதிராஜா- அவனுக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும் தொழில் தர்மம் காப்பவன். அதனால்,அந்தப் படத்திற்கான பங்களிப்பை நூறு சதவீதம் செய்தான்". என்று சொல்லியிருக்கிறார் அவருடைய பேட்டியில்.

🎥 அன்றைக்கு இளம் வயதுக் காதலையே பார்த்த தமிழ்சினிமா நடுத்தர வயது உள்ள ஒரு பெரியவருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் உண்டாகும் காதலை ஏற்றுக்கொள்ளுமா என்றே திரைப்படத்துறையினர் நினைத்திருப்பார்கள்.

🎥 ஆனால், எதையும் காரண காரியத்தோடு திரைக்கதையில் விளக்கினால் எந்தக் கதையையும் மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்பதற்கு இத்திரைப்படத்தை உதாரணமாக சொல்லலாம்.

🎥 இந்தப் படத்தைப் பற்றிய பின்னணி தகவல்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் நிறைந்தவையே, அதையெல்லாம் நாள் பூரா எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

🎥 திரையில் புதிய சிவாஜியை நடமாட விட்டு அவரையே ஆச்சர்யப்படுத்தியவர்தான் பாரதிராஜா அவர்கள்.

🎥 இப்பொழுது தமிழ்நாடு முழுவதுமே ரிலீஸ் செய்துள்ளார்கள். சென்னையில் சத்யம் தியேட்டரில் 6.30pm.,
ஆல்பட் தியேட்டரில் நான்கு காட்சிகள் மற்றும் மேலும் சில தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்துள்ளார்கள்.

🎥 கர்ணன், திருவிளையாடல், வசந்தமாளிகை போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் உறுதியாக சேரும் என்பதில் சந்தேகம் இல்லை...

🎥 நடிகை யாஷிகா மீது பிடிவாரன் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 🎥 கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தே...
25/03/2023

🎥 நடிகை யாஷிகா மீது பிடிவாரன் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🎥 கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த விசாரணை செய்து வந்தனர்.

🎥 சிகிச்சை பெற்று பின்பு யாஷிகா உடல்நலம் தேரினார். அவ்வப்போது விபத்தில் உயிரிழந்த தன்னுடைய தோழி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டு வந்தார் இந்நிலையில் யாஷிகாவிற்கு பிடிவாரும் பிறப்பித்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

🎥 செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆஜராக வேண்டியதாக இருந்தது ஆனால் அவர் ஆஜராகவில்லை.

🎥 இந்த நிலையில் வரும் 2023 மார்ச் 25ஆம் தேதிக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அப்படி ஒரு வேலை அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது..

🍜சுவை எனும் நஞ்சு :இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறே...
25/03/2023

🍜சுவை எனும் நஞ்சு :
இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

🍗🌮அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு உணவு உணவு. 🍕🍔

🍩🧋தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌ 🌍

🍚அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. பல உணவகங்களில் இவை இல்லை.

🍗🥪ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது. மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது.

🫕இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன். விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.

🍚ஒரே ஒரு வகை உணவு பரிமாறப்பட்ட என் சொந்தங்கள் வீட்டில் அனைத்திலும் இரண்டு மூன்று வகை சேர்த்து பரிமாறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் நடந்தேறியிருக்கிறது. அதனை அவர்கள் உணரவே இல்லை. யூடியூப் போன்ற வலையொலிகளின் உணவு நிகழ்ச்சிகள் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

🍨🍧🍦ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன். ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்டா ஏன். 🍨🍧🍦

🍕உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.🌮

🎂 திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார். சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும். 🍰

🦷ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை. இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது. 🏥🩺

🛍️அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது. ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர்.

🛒இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள்.

⏰அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும். என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள். அந்த மக்களைத் தங்கள் கடைக்கு அழைக்க அண்ணாச்சிகளும் அதே பொருளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

🥹இதனால். தமிழ் பொருட்களை உற்பத்தி செய்த பல குடும்பங்கள் அழிந்து இருக்கும். எங்கள் ஊரில் கூட மெட்ரோ என்ற பெரும் கடை மற்ற அனைத்தையும் உண்டு வளர்கிறது.

🚂100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி நான்கு மணி நேரம் செல்லும் ரயில் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. மக்கள் அதற்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள். உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.

👀 உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.

🏍️முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto #தூதுணவு வந்துவிட்டது.

👅 இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது,
ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர்.

🎥 அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.

🌍⏰ தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை, என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது.

🥪🍕 தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

👅சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும். அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

😷🦠இது நடக்காவிட்டால். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும், இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.🩺🏥

படித்து வருந்தியது.
பகர்கிறேன். 😥

🎥 இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா.🎹 ஜி வி பிரகாஷ் இசையில் அதிரடி ஆரம்பம் அதிவிரைவ...
24/03/2023

🎥 இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா.

🎹 ஜி வி பிரகாஷ் இசையில் அதிரடி ஆரம்பம் அதிவிரைவில்.

🎥 இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார்.

🎥 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

🎼 ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.

🎥 பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

🎥 இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

🎥 இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

🎼 இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

🎥 இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. 🎬💐💐💐💐

🎼🎹🎵🎶🎧🎙️🎷🎸🎻🎺இசையமைப்பாளர்  #தேவா பங்குபெறும்   Grand LIVE IN CONCERT 🎶 by    விரைவில் நம்ம புதுச்சேரியில் 🤩
24/03/2023

🎼🎹🎵🎶🎧🎙️🎷🎸🎻🎺இசையமைப்பாளர் #தேவா பங்குபெறும் Grand LIVE IN CONCERT 🎶 by

விரைவில் நம்ம புதுச்சேரியில் 🤩



Address

Chennai
600032

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Pix posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share