20/02/2025
நான் அறிந்த கேதுவைப் பற்றி,
கிரகங்களில் மூத்தவர் என சொல்லக்கூடியவர் கேது .
தான் இருக்கின்ற பாவகத்தை வளர்க்கவும் செய்வார், நசுக்கவும் செய்வார்.
விரக்தியையும் கொடுப்பார், தான்நின்ற பாவகத்தின் வளர்ச்சி மூலம் கர்ம புரிதலை உணர வைப்பார்.
ராகுவிற்கு எதிர்வினை கேது என்பதால் ராகு தசை நடக்கும் பொழுது கேதுவும் தூண்டப்படுகிறார் மறைமுகமாக ,இதை நிறைய ஜாதகங்களில் பார்க்க முடிகிறது.
ராகு போக காரகன், ராகு தசை நடப்பதால் பொருளாசை, நாட்டம் விருப்பம் பிரம்மாண்டமாய் கிடைத்தாலும் அதே நேரத்தில், கேதுவும் சரியாக 180 டிகிரியில் நின்று தூண்டப்படுவதால், நிச்சயமாக ராகு திசையில் ஒரு குட்டு வைத்தது போல் உணர வைப்பார்.
கேது தானென்ற பாவகத்தின் விரக்தியை உச்சபட்சமாக கொடுத்து அதன்மூலம் ஞானத்தை கொடுப்பவர்.
ராகு ஆனந்தம் என்றால் கேது பேரானந்தம்.
சில குழந்தைகள் கேதுவின் மூலம் ஆட்கொள்ளப்பட்டு பிறக்கும் பொழுதே நோயினால் அவதியுருவத்தை பார்க்க முடிகிறது .காரணம் கர்ம பிணைப்பு (பெற்றவர்களின் கர்மா மற்றும் குழந்தையின் முன் ஜென்ம கர்மா) இரண்டையும் கர்ம கணக்கை சரியாக கச்சிதமாக பினைப்பவர் கேதுவே ஆவார் .
களத்திர ஸ்தானத்தில் கேது நிற்கும் பொழுது (கணவன் /மனைவி) உறவில் விரக்தியை உருவாக்குபவர் கேது. விரக்தியில் இருந்து மீண்டு ஞானம் கிடைத்தவர் வெகுசிலரே அதற்கு கர்மாவும் ஒத்துழைக்க வேண்டும்.
கர்மா சேமிக்கும் இடம் ராகு என்றால், கர்மாவை உணரவைத்து அதற்கான தண்டனையை அனுபவிக்க செய்து, ஞானத்தை வழங்குபவர் கேது.
காமத்திற்கு அதிபதியும் கேதுவே ஆவார். (சன்னியாசி தானே கேது என மனதில் நினைப்பவர்கள் ஏராளம்) உண்மையில் உச்சகட்ட காமத்தில் தன்னிலை மறக்கச் செய்பவர் கேது.
சுக்கிரன் கேது இணைந்து இருப்பவர்கள், சுக்கிரனின் காரகத்துவங்கள் அவரவர் வாங்கிய கர்ம வினையின் படி அதிகரிக்கப்பட்டு அதனால் அவமானப்படுத்துபவரும் கேதுவே ஆவார் .
ஒருவர் உயர்ந்த பதவியை அடைவதற்கும், நாடாளும் யோகம் ஒருவருக்கு வருவதற்கும், கேதுவின் துணையில்லாமல் நிகழாது, (சூரியன் தன்னுடைய உச்ச பாகை அடைவதே அஸ்வினி நட்சத்திரத்தில் என்பதை கருத்தில் கொள்க)
மருந்து போடுபவர் கேது, நோயை கொடுப்பவர் ராகு. (மருந்து இங்கே சொல்வது கர்மாவை உணர்வது, நோய் என சொல்வது கர்மாவை சேமிப்பது )
கேது திசையில் ஒருவருக்கு கொடுக்கும் /கிடைக்கும், ஞானமும் சொத்தும் வேறு எந்த திசையிலும் பறிகொடுக்க அல்லது இழக்க இயலாத நிலையானதாக அமையும் .
அன்புடன்
ஜோதிட முரசு மிதுனம் செல்வம்
ஜோதிட ஆலோசனைக்கு
9789822448