01/09/2026
ராஜா பாட்டுக்கு, AIR விதித்த தடை!
1970-களின் இறுதியில், All India Radio கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. மக்களின் இயல்பான பேச்சு வழக்கிற்கும் இந்த தடை AIR வைத்திருந்தது.
இதனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தனது இசையில் கொண்டு வந்தார் இளையராஜா.
அப்படி அவர் உருவாக்கிய இரு பாடல்கள் அன்றைய வானொலியில் தடை செய்யப்பட்டன:
1. "கேட்டேளா அங்கே" (பத்ரகாளி - 1976): குறிப்பிட்ட சமூக மக்களை கேலி செய்வது போல் உள்ளது எனக்கூறி தடை செய்யப்பட்டது.
2. '"ஓரம் போ" (பொண்ணு ஊருக்கு புதுசு - 1979): மக்கள் தவறாக சித்தரித்து பாட வாய்ப்புள்ளது எனக்கூறி, "சமூக நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது" என தடை செய்யப்பட்டது.
வானொலி தடை விதித்தாலும், மக்கள் இப்பாடல்களைக் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடியது! கிராமபோன் தட்டு தொடங்கி ஊர்த் திருவிழாக்களில் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன.
நீங்க முதன்முதலில் கேட்ட ராஜா பாடல் எது? கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்! 👇