Tamil Boomer

Tamil Boomer Tamil Boomer is your go-to page for fun and engaging videos in Tamil. Our videos are designed to make you laugh, think.

We're all about creating a bridge between boomers and millennials through entertaining and valuable content.

26/09/2026

Chennai: One Night EMU Service Cancelled

சென்னையில் இரவில் மின்ரயில்கள் ரத்து

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2026 செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1,2,3 ஆகிய நாள்களில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இரவு 11:59 மணிக்கு புறப்படும் தாம்பரம் மின்ரயிலும்,

தாம்பரத்தில் இரவு 10:45 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மின்ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

2026 செப்டம்பர் 27 ஞாயிறு அன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இரவு 11:59 மணிக்கு புறப்படும் தாம்பரம் மின்ரயிலும்

தாம்பரம் ரயில் நிலையத்தில் இரவு 11:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதுபோன்ற ரயில்சேவை தகவலை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

26/09/2026

Google Pay & PhonePe: Avoid This Costly UPI Mistake!

பணத்தை வேகமாக திரும்ப வரப்பண்ணுவது எது என்று நினைக்கிறீர்கள்? UPI என்றா? இல்லை! வழக்குரைஞர் ஒருவரின் letterhead.

சில மாதங்கள் முன்னர், எங்கள் அக்கவுண்ட்ஸ் குழுவினர் ஓர் ஆலோசகருக்குக் கட்டணம் செலுத்தினார்கள்.

UPI IDல் ஓர் எழுத்து தவறாகப் போட்டுவிட்டனர்.

பணம் போய்விட்டது. தெரியாத ஒரு நபருக்கு. அதே பெயர் கொண்ட வேறொரு நபர். வேறு பட்டணத்தில் வசிப்பவர்.

அந்தப் பெண்ணை கண்டுபிடிப்பதற்கு எங்கள் வங்கி உதவி செய்தது. மேலாளர் அந்தப் பணத்தை அனுப்பிவிடும்படி கூறிய போதும், 'இது என் பணம்' என்று மறுத்துவிட்டார்.

படித்தவர். வேலையில் இருப்பவர். ஒரு மேலாளர், பணத்தை அனுப்புமாறு கேட்கிறார்.

இவ்வளவுக்கும் அது தவறி வந்துவிட்ட பணம்.

நாம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து பெருமையாக பேசுகிறோம்.

ஆனால், உங்களுடையதல்லாத பணத்தை திருப்பிக் கொடுப்பது என்றால், பழைய முறைதான். Pending. Pending. Pending.

இரண்டு மாதங்கள் நாங்கள் சாந்தமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.
ஒன்றும் நடக்கவில்லை.

அதேவேளையில் எங்கள் ஆலோசகருக்கு, உறவு, நற்பெயரை காப்பாற்றுவதற்காக தனியே பணம் கொடுத்துவிட்டோம்.

பிறகு சட்ட அறிவிக்கை (legal notice) வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பினோம்.

பணம் ஏழே நாள்களில் வந்துவிட்டது.

வேண்டி வேண்டி கேட்டுப் பார்த்தது இரண்டு மாதங்கள். ஆனால், வக்கீல் நோட்டீஸ் சென்று ஒரே வாரம்தான்.

UPI வாயிலாக பணம் அனுப்பும்போது QR codeஐ மட்டும் பயன்படுத்துங்கள். ஒருபோதும் UPI IDஐ டைப் செய்யாதீர்கள்.

QR Codeடே ஆனாலும் பணம் செல்கிறவரின் பெயரைப் பார்த்து, அனுப்பும் முன்னர் உறுதி செய்துகொள்ளுங்கள். போலி QR Codeகள் எங்கும் பரவியுள்ளன.

புதிதாக ஒருவருக்கு அனுப்பவேண்டுமென்றால் முதலாவது 1 ரூபாய் அனுப்பி உறுதி செய்துகொள்ளுங்கள்.

உறுதிப்படுத்தப்பட்டவர்களை, திரும்ப அனுப்ப வேண்டியதிருப்பவர்களின் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு முறை சோதியுங்கள். ஒருவர் தயாராக்கினால், இன்னொருவர் அனுப்பும்போது சோதியுங்கள்.

தவறாகவே அனுப்பிவிட்டீர்களா? உங்கள் வங்கிக்கும் UPI செயலிக்கும் உடனே புகார் தெரிவியுங்கள்.

சாந்தமான வேண்டுதல்கள் ஒரு வாரம், இரண்டு வாரங்களுக்குள் பலன் அளிக்காவிட்டால், வக்கீல் நோட்டீஸ் legal notice அனுப்புங்கள். எங்களைப் போல மாதக் கணக்கில் காத்திருக்காதீர்கள்.

சிறுவணிகங்கள், சட்ட ரீதியான நடவடிக்கை தாமதமாகும், செலவு பிடித்தது என்று எண்ணி தினமும் இதே போன்ற இழப்புகளை சகித்துக்கொள்கின்றன.

சொல்ல முடியாது. சிலவேளைகளில் ஒரே ஒரு நோட்டீஸ் முழு வேலையையும் செய்து முடித்து விடுகிறது.

UPI பரிமாற்றம் குறித்து Anubhav Chaturvedi இப்படிக் கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

25/09/2026

The Simple Rule for Guilt-Free Spending

எப்போதாவது காருக்கு 200 ரூபாய் வாடகையாகக் கொடுத்துவிட்டு, வழியெல்லாம் மனம் குத்திக்கொண்டே இருந்திருக்கிறதா?

நீங்கள் அதிகமாய் களைத்துப்போய் இருக்கிறீர்கள். உங்கள் பை இன்னும் கனமாக இருக்கிறது. அடுத்த பஸ் வருவதற்கு இருபது நிமிடங்கள் உள்ளது. ஆனாலும் காரில் ஏறி உட்கார்ந்த பின்னர், ஐயோ, கடவுளே பஸ்ஸில் போயிருந்தால் பணம் மிச்சமாகியிருக்குமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட செலவுகளை கணக்கிடுவதற்கு ஒரு வழி இருக்கிறது.
Nick Maggiulliயின் 0.01% rule என்பதே அந்த விதி.

உங்களிடம் இருக்கும் பணத்திலிருந்து, நீங்கள் கொடுக்கவேண்டியதை கழிக்கவேண்டும். அந்தத் தொகையை பத்தாயிரத்தால் வகுக்கவேண்டும்.

கிடைக்கும் தொகையே, பெரிய யோசனையில்லாமல் நீங்கள் வாங்கக்கூடியதாகும். அந்தத் தொகையை செலவழிப்பதற்கு நீங்கள் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கவேண்டாம்.

உதாரணமாக, சேமிப்பு முதலீடு எல்லாம் சேர்ந்து உங்களிடம் 12 லட்ச ரூபாய் இருக்கிறது. ஆனால், நீங்கள் செலுத்த வேண்டிய கல்வி கடன் 2 லட்ச ரூபாய் இருக்கிறதென்றால், உங்களிடம் இருக்கும் பணத்தின் நிகர மதிப்பு 10 லட்ச ரூபாயாகும்.

அதில் 0.01 சதவீதம் என்றால் 100 ரூபாய்.

அதுவே 30 லட்சமென்றால் 300 ரூபாய். 50 லட்சமென்றால் 500 ரூபாய்.

இப்போது 200 ரூபாய் செலவழிக்கவேண்டுமென்றால், வழக்கமாக ஆகும் செலவுகள், அம்மாதத்திற்கான சேமிப்பு எல்லாம் முடிந்துவிட்டதென்றால்

களைத்துப்போன நாளில் 200 ரூபாய் கொடுத்து காரில் வீடு திரும்பலாம். சீக்கிரமாய் வீட்டை அடைந்து, நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கலாம். எப்போதாவது அப்படி செய்வதால் நீங்கள் பணத்தை நிர்வகிக்கவில்லை என்பது அர்த்தமல்ல.

நூறு ரூபாய் செலவழிப்பதை குற்றமாக கருதிக்கொண்டு பணக்காரராகும்வரைக்கும் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.

பணத்தை நிர்வாகம் செய்யும் எளிய வழியாக NISHANT JOSHI இதைக் கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

25/09/2026

Coimbatore–Nagercoil Express: Route Diversion on This Day

கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் போத்தனூர் வழி

வண்டி எண் 16322 கோயம்புத்தூரில் காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 2026 செப்டம்பர் 26ம் தேதி திருப்பூர், ஈரோடு வழியாக செல்லாது.
மாறாக போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல்லை அடைந்து, நாகர்கோவில் செல்லும்.

இதுபோன்ற ரயில்சேவை செய்திகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

24/09/2026

Important Update: Trichy–Karaikkal DEMU Partially Cancelled

திருச்சி - காரைக்கால் ரயில் பகுதி ரத்து

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 2026 செப்டம்பர் 24, 25, 26, 27, 28 மற்றும் 30ம் தேதிகளில் வண்டி எண் 76820 காலை 8:40 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் புறப்படும் காரைக்கால் டீசல் மின் ரயில் திருவாரூடன் நின்று விடும். இந்த ரயில் திருவாரூர் - காரைக்கால் இடையே பகுதியாய் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் இதே நாள்களில் (2026 செப்டம்பர் 24, 25, 26, 27, 28 மற்றும் 30ம் தேதிகளில் ) வண்டி எண் 76819 பிற்பகல் 4:15 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு திருச்சி செல்லும். காரைக்காலிலிருந்து புறப்படாது.

இதுபோன்ற ரயில்சேவை தகவலை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

24/09/2026

One-Way Special Train Between Tambaram & Podanur

தாம்பரம் போத்தனூர் இடையே சிறப்பு ரயில்

2026 செப்டம்பர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் வண்டி எண் 06025 சிறப்பு ரயில் எழும்பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூரை அடையும்.

படுக்கை வசதி பெட்டிகள், ஏசி இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும் இந்த ரயிலுக்கான முன்பதிவு 2026 செப்டம்பர் 24ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

இதுபோன்ற ரயில்சேவை தகவலை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

24/09/2026

Sometimes We Need a Mirror, Not Advice

என் தோழியுடன் உணவகம் ஒன்றுக்குச் சென்றேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் சாப்பாடு வரவில்லை.

அவளுக்குக் கோபம் வந்தது.

அவளுக்குக் கோபம் வந்தால், தன்னிலை மறந்து, சர்வரிடம் கத்துவாள் என்பது எனக்குத் தெரியும்.

சிறுவயதிலிருந்து அவள் எனக்குத் தெரியும். ஆகவே, என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்துவிட்டேன்.

'அமைதியாயிரு' (calm down), 'எல்லோரும் பார்க்குறாங்க' (don’t create a scene) வகை வார்த்தைகள் எல்லாம் அவளிடம் வேலை செய்யாது.

ஆகவே, அவள் ஆரம்பிக்கும் முன்னரே, நான் சர்வரிடம் கத்தத் தொடங்கினேன்.

அவள் என்னை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

நான் ஒருபோதும் இப்படி நடந்துகொண்டதில்லை.

அவள், என்னிடம் 'நிறுத்து' என்று சொன்னாள்.

அவளுடைய குணத்தின் கொடுமையை அவளே உணர்ந்தாள்
She had just got a taste of her own medicine.

சாப்பாடு வந்தது
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

சிலவேளைகளில் சிலருடைய போக்கை மாற்றுவதற்கு அறிவுரை எல்லாம் பயன்தராது.

கண்ணாடியை பிடித்து அவர்கள் முன்னர் காட்டுவதுதான் ஒரே வழியாகும்.
Just hold up a mirror.

மாற்றத்திற்கான வழியாக Vik Gambhir இதைக் கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

23/09/2026

Festival Special Express Between Chennai & Kollam on Saturdays

சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சென்னை கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2026 அக்டோபர் 3 முதல் அக்டோபர் 31 வரை சனிக்கிழமைகளில் வண்டி எண் 06121 எழும்பூரில் இரவு 11:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4:20 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06122 2026 அக்டோபர் 4 முதல் நவம்பர் 1 வரை கொல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை திங்கள் பகல் 11:35 மணிக்கு வந்தடையும்.

படுக்கை வசதிப் பெட்டிகள், ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டிகள், ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஏசி முதல் வகுப்புப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும்.

இதுபோன்ற ரயில்சேவை செய்திகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

23/09/2026

Special Trains to Kollam From Egmore Via Podanur

சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2026 அக்டோபர் 1 முதல் அக்டோபர் 29 வரை வியாழக்கிழமைகளில் வண்டி எண் 06117 எழும்பூரில் இரவு 11:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4:20 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06118 சிறப்பு ரயில் 2026 அக்டோபர் 2 முதல் 30 வரை வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12:30 மணிக்கு எழும்பூரை அடையும்.

படுக்கை வசதிப் பெட்டிகள், ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டிகள், ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஏசி முதல் வகுப்புப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும்.

இதுபோன்ற ரயில்சேவை செய்திகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

23/09/2026

Pooja Holidays Special Train: Sengottai to Charlapalli Via Salem

செங்கோட்டை - சர்லபள்ளி சிறப்பு ரயில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு செங்கோட்டை தெலங்கானா சர்லபள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2026 அக்டோபர் 2 முதல் நவம்பர் 27 வரை வெள்ளிக்கிழமைகளில் வண்டி எண் 07191 சர்லபள்ளியில் காலை 7:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 07192 2026 அக்டோபர் 3 முதல் நவம்பர் 28 வரை செங்கோட்டையில் சனிக்கிழமை மாலை 5:40 மணிக்கு புறப்பட்டு சர்லபள்ளியை திங்கள் அதிகாலை 12:30 மணிக்கு சென்றடையும்.

10 படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 5 ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டிகள், 3 ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும்.

இதற்கான முன்பதிவு 2026 செப்டம்பர் 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

இதுபோன்ற ரயில்சேவை செய்திகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Boomer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share