INTJ மாநில ஊடக பிரிவு

INTJ மாநில ஊடக பிரிவு India Thowheed Jamaath(INTJ) is well Known being leading Muslim party in Tamilnadu. It is Operated by the group admins (IT wings)

This is the page of IT wing to promote our activities and functions throughout Tamilnadu on social media.

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார...
15/10/2025

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக நேத்தாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி 15.10.2025 இன்று புதன் கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சகோதரர் கீழை இக்பால் அவர்கள் உரையாற்றினார்...

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

இந்திய தவ்ஹீத் ஜமாஅ(INTJ)தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று லயோலா கல்லூரி அருகாமையில் மாலை 4,மணி முதல் 6 மணிவரை நடைப்பெற்...
15/10/2025

இந்திய தவ்ஹீத் ஜமாஅ(INTJ)
தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று லயோலா கல்லூரி அருகாமையில் மாலை 4,மணி முதல் 6 மணிவரை நடைப்பெற்றது

இதில் ஏராளமான நபர்களுக்கு திருக்குர்ஆன்,மற்றும் புத்தகங்கள்,கேயேடுகள் வழங்கப்பட்டது!

இதில் மாநிலச் செயலாளர் இனாயதுல்லாஹ்,

சூளைமேடு அல்புர்கான் பள்ளித் தலைவர் சம்ஸ் தப்ரேஸ்,தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆழ்வை ஜாகிர்,தோழர்கள்,அப்துல்லாஹ்,முஹம்மது இம்ரான்,அப்துல் வாஜித்,அபுபக்கர்,ரசீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாய்பளித்த அல்லாஹூக்கே எல்லாப் புகழும்!

அல்ஹம்து லில்லாஹ்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி.. காஞ்சி மாவட்ட இந்திய தவ்ஹீ...
14/10/2025

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி..

காஞ்சி மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷா அல்லாஹ் வரும் 25.10.2025 சனிக்கிழமை மாலை ஆலந்தூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையில்..

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள்.

அமைச்சர் தாமோ அன்பரசன் அவர்கள்

மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்..

ிரிவு

மாநில தலைமையகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் முஹம்மது ஷிப்...
13/10/2025

மாநில தலைமையகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநில பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி பொருளாளர் பிர்தௌஸ் துணை பொதுச் செயலாளர் தக்வா மொய்தீன் மாநில செயலாளர்கள் அபு பைசல் இனாயத்துல்லாஹ் கலிமுல்லாஹ் சையத் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

இதில் மாநில தலைமையகத்தில் இயங்கி வரும் மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பான விசயங்கள் பேசப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

ஆவடியில் நடைபெற்ற அழகிய தாஃவா பணி..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக அயப்பாக்கம் பார்க் அருகி...
12/10/2025

ஆவடியில் நடைபெற்ற அழகிய தாஃவா பணி..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக அயப்பாக்கம் பார்க் அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்டால் தாஃவா நடைபெற்றது.

இதில் வாக்கிங் சென்றவர்கள் ஆர்வத்துடன் வந்து இஸ்லாத்தை குறித்து கேட்டு அறிந்தார்கள்.

அவர்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை குறித்து எடுத்து கூறிய நிர்வாகிகள் சகோதரர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தென் சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகளின் முதல்  மாதாந்திர மசூரா, மாவட்ட தலைமையகத்தில் இன்று காலை மா...
12/10/2025

இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தென் சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகளின் முதல் மாதாந்திர மசூரா, மாவட்ட தலைமையகத்தில் இன்று காலை மாநில செயலாளர் சகோதரர் இனாயத்துல்லாஹ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஆழ்வை ஜாஹிர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

இன்ஷா அல்லாஹ். வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்...

ிரிவு

இன்று ஞாயிற்றுக்கிழமை 12-10-1025 காலை இந்திய தவ்ஹித் ஜமாஅத் காஞ்சிமாவட்டம் பெரியாா் நகா் கிளையின் சாா்பாக ஸ்டால் தாவா நட...
12/10/2025

இன்று ஞாயிற்றுக்கிழமை 12-10-1025 காலை இந்திய தவ்ஹித் ஜமாஅத் காஞ்சிமாவட்டம் பெரியாா் நகா் கிளையின் சாா்பாக ஸ்டால் தாவா நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

தென் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர் நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாராந்திர ஸ்டால் தாவா மர்க்கஸுல் அவ்வல் தாவா குழுவின...
12/10/2025

தென் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர் நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாராந்திர ஸ்டால் தாவா மர்க்கஸுல் அவ்வல் தாவா குழுவினரின் சார்பாக நடைபெற்றது.

இன்று 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தாவா நிகழ்வில் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்.

ிரிவு

கம்பத்தில் சமூக நல்லிணக்க பனை நடவு!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்..கம்பம் அதாயி அர...
12/10/2025

கம்பத்தில் சமூக நல்லிணக்க பனை நடவு!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்..

கம்பம் அதாயி அரபிக் கல்லூரி, வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ், தேனி மாவட்ட தன்னார்வலர்கள் (நன்செய் தன்னார்வ அமைப்பு மற்றும் தேனி ரூரல் அப்ளிட்மென்ட் சோசியல் டிரஸ்ட்) இணைந்து நடத்தும் 4-ம் ஆண்டு "சமூக நல்லிணக்க பனை நடவு"

நிகழ்ச்சி 11-10-2025 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் கம்பம் மெட்டு ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகில் 18-ம் கால்வாய் அருகில் வின்னர் அலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதாயி கல்லூரி முதல்வர் தாரிக் அஹமது பிலாலி அவர்கள் மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி நன்செய் செந்தில் தேனி ரூரல் அப்ளிட்மென்ட் சோசியல் டிரஸ்ட் யாசர் அராபத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர்..

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத்..

உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் செய்யத் முஹம்மது அவர்கள்..

வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் ஜெயினூலாபுதீன் அம்பா அவர்கள் சமுதாய தலைவர் O.R குமரேசன் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான் துணை தலைவர் ரபிக் பொருளாளர் சபியுல்லாஹ் துணை செயலாளர் சர்புதீன் இணை தலைவர் அப்துல் சமது புது பள்ளிவாசல் துணை தலைவர் ஹனபி துணை செயலாளர் சலிம் இலாஹி ஓரியண்டல் பள்ளி தலைமை ஆசிரியர் அலாவுதீன் சார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இயற்கையை காப்போம் என்ற முழக்கத்துடன் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடத்திய சகோதரர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் செய்வானாக..

ிரிவு

தோழர் திருமுருகன் காந்தி Thirumurugan Gandhi அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் தோழர் திருமுரு...
10/10/2025

தோழர் திருமுருகன் காந்தி Thirumurugan Gandhi அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செயலுக்கு.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டனம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை..

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறை மோப்பநாய் உதவியுடன் காவல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்..

அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் தோழருக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பதை காவல்துறை உளவுத்துறையும் தீவிர விசாரணை நடத்தி.

உடனடியாக மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு.
A.முஹம்மது யூசுப்
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ிரிவு

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார...
08/10/2025

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக நேத்தாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி 08.10.2025 இன்று புதன் கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சகோதரர் சாதிக் பெளவுமி உரையாற்றினார்...

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தமிழ்நாடு கிளை சார்பில்..இன்று சென்னை ஹஜ் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும...
08/10/2025

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தமிழ்நாடு கிளை சார்பில்..

இன்று சென்னை ஹஜ் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வகஃப் போர்ட்டலில் வக்ஃப் சொத்துக்களைப் பதிவு செய்வது எப்படி என்பது குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடந்து கொண்டிருக்கிது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அபு பைசல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

ிரிவு

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when INTJ மாநில ஊடக பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category