Madha TV

Madha TV Madha TV Official Page. Madha TV - to Nourish Christian faith & spiritual formation, also to impart the 2000 years old Apostolic Biblical Catholic Faith!

06/08/2025

உங்களது ஆன்மீக வளர்ச்சிக்காகவும், உங்களது நாட்கள் அனைத்தும் சமாதானமாகவும் ஆசீர்வாதமாகவும் அமைய இத்திருப்பலியில் முழுமையாக பங்கேற்கவும்.

Check us on : http://www.madhatv.in/
Subscribe us on :
⁨⁩
⁨⁩
⁨⁩
⁨⁩

Follow us on :
Facebook : https://www.facebook.com/madhatv/
Instagram : https://www.instagram.com/madha_tv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y2vV6GcG5EWQVBT0N
Spotify : https://open.spotify.com/user/3165nbzqmb7zweixrcw4ixnqpb6i?si=0e88396b7dda4481

06/08/2025

புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயம் , மார்த்தால் பற்றி விவரிக்கின்றது.

WATCH FULL VIDEO : https://youtu.be/fDFdCSNr8Yg

Check us on: http://www.madhatv.in/
Subscribe us on :





Let’s Stay Connected :
Facebook : https://www.facebook.com/madhatv
Instagram : https://www.instagram.com/madha_tv?igsh=dW9ybHFxYnh5amhv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y2vV6GcG5EWQVBT0N
Spotify : https://open.spotify.com/user/3165nbzqmb7zweixrcw4ixnqpb6i?si=0e88396b7dda4481

06/08/2025

உங்கள் மனதையும் உள்ளத்தையும் முழுமையாக அர்ப்பணித்து இந்த ஆராதனை நேரத்தில் கலந்து கொள்ளுங்கள்.

Check us on: http://www.madhatv.in/
Subscribe us on :





Follow us on :
Facebook : https://www.facebook.com/madhatv/
Instagram : https://www.instagram.com/madha_tv?igsh=dW9ybHFxYnh5amhv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y2vV6GcG5EWQVBT0N
Spotify : https://open.spotify.com/user/3165nbzqmb7zweixrcw4ixnqpb6i?si=0e88396b7dda4481

06/08/2025

சாந்தோம் கலைதொடர்பு நிலையத்தின் பொன்விழா, கடந்த பயணத்திற்கான நன்றியின் நாளாகவும், எதிர்கால பணிகளை உறுதி செய்.....

*ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா 06 08 2025**முதல் வாசகம்*_அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது._*இறைவாக்கினர் தானியேல் நூலிலிரு...
06/08/2025

*ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா 06 08 2025*

*முதல் வாசகம்*

_அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது._

*இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14*

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

*பதிலுரைப் பாடல்*

*திபா 97: 1-2. 5-6. 9 (பல்லவி: 9a, 1a)*

_பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்._

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! - பல்லவி

*இரண்டாம் வாசகம்*

_விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்._

*திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19*

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.

“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

*மத் 17: 5c*

_அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா._

*நற்செய்தி வாசகம்*

_மோசே, எலியா என்னும் இருவர் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்._

*✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36*

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.

அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.

மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார்.

தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

*“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16*

06/08/2025

VINAADI VINA | QUIZ | வினாடி வினா | Madha TV

#வினாடிவினா

Address

150 Luz Church Road, Mylapore
Chennai
600004

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5:30pm

Telephone

+914424991344

Alerts

Be the first to know and let us send you an email when Madha TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madha TV:

Share

Category