15/08/2025
கூலியின் முதல்நாள் சம்பவம்
ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்தாயிரம் ஸ்க்ரீன்களில் வெளியானது. ஏற்கனவே ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் கூலி வசூலில் சாதனை படைத்திருக்கு.
கூலி படத்துல ரஜினியின் ஸ்டைல், எனர்ஜி, டயலாக் பேசும் விதம், இந்த வயதிலும் செய்யும் நடனம், சண்டை காட்சி என அத்தனையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார், படத்தை ஒற்றை ஆளாக தன்னுடைய தோள்களில் சுமந்திருக்கிறார், அதேபோல் அவருக்கு அடுத்ததாக சௌபின் சாஹிரும், நாகார்ஜுனாவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்கள் என்ற பாசிட்டிவ் விமர்சனங்களும்,
பழிவாங்குதல், லோகி கதையை ஒழுங்கா டெவலப் செய்யல, படம் ரொம்ப ஸ்லோவான கணிக்கக்கூடிய ஸ்க்ரீன் ப்ளே, வழக்கமான கடத்தல் ஜானர் என எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இப்படி விமர்சனங்கள் வந்தாலும் ஃபர்ஸ்ட் ஷோ போடப்பட்டதிலிருந்து வசூலை கூலி படம் அள்ள தொடங்கிவிட்டது. முதல் ஷோ முடிவில் இந்தியாவில் மொத்தம் 30 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளிவந்துள்ளது,
இந்நிலையில் முதல் நாளில் படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற தகவலும் தற்போது வந்துள்ளது. அதன்படி நேற்று மட்டும் மொத்தம் இந்தியாவில் 100 கோடிக்கும் மேல் வசூலித்ததாகவும், உலகமுழுவதும் 150 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சினிமா விமர்சகர்கள் பொறுத்தவரை இந்தியாவில் 65 முதல் 70 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லுகிறார்கள்.
இதில் தமிழில் மட்டும் 45 இருந்து 50 கோடி ரூபாயும், தெலுங்கில் 15 கோடி ரூபாயும், ஹிந்தியில் 4.5 கோடி ரூபாயும், கன்னடத்தில் 1 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக சொல்லுகிறார்கள்.
ரஜினியின் கூலி படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | | | | | | | | | | | | #கூலி |