
30/09/2025
வா, சண்டை செய்
வெளியே வா, சண்டை செய்
இனிமேலாவது சண்டை செய்
இதுதான் அரசியல் தெரிஞ்சுக்கோ
உன்ன நம்பி செத்தவங்களுக்கு
நீதி வாங்கித் தருவதற்காவது வெளியே வா
41 உயிர்களுக்கு நீதி கிடைத்த பிறகு
அடுத்த வேலை செய்
அதுவரை சண்டை செய்
சனிக்கிழமைகளுக்கு காத்திருக்காதே
குற்றவாளி யார் என்பதை உலகுக்கு காட்டு
வழக்குகளுக்கு அஞ்சித் தஞ்சம் செல்லாதே
நீதிக்காக ஓடு
உன் தொண்டர்களுக்காவது
நீ உண்மையாய் இரு
உன் மௌனம் வேண்டுமென்றால் உடைந்து இருக்கலாம் ஓலங்கள் அல்ல
உன் அரசியல் வாழ்க்கை இனி தான் தொடங்குகிறது
இதில் டூப்பு கிடையாது
நீயேதான் குதிக்க வேண்டும்
எங்கள் வாக்கு உனக்கல்ல அந்த அளவுக்கெல்லாம் உன் காணொளி இல்லை.
வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியலல்ல
அதையும் நம்பி உனக்கு வாக்கு போடத் துடிப்பவர்களுக்காகக் களத்தில் இறங்கு
டிரான்ஸ்பார்மர் திரையரங்க பால்கனி அல்ல
இரசிக குஞ்சுகளை முதலில் மனிதனாக்கு
இன்னும் குரங்குகளாகவே இருக்கிறார்கள்
கூடும் கூட்டம் வாக்கு அல்ல
நீ மனிதனாக வா வா, சண்டை செய்
இங்கர்சால் நார்வே