
11/06/2025
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றார் ஆன்மிகப் பெருஞ்சுடர் அய்யா வைகுண்டர். ஒடுக்கப்பட்ட மக்களை எளிய இலக்குகளாக மாற்றி அவர்களது உடையை, உணவை இளக்காரமாகப் பேசி அவர்களின் சுயமரியாதையைத் துவம்சம் செய்யும் வெறுப்பு அரசியல் சூழல், 11 வருடங்களாக நாட்டில் படர்ந்திருக்கிறது. இந்த மக்களாட்சி அழிப்புக்கு எதிராக சமரசம் இல்லாமல் போர் செய்யும் மாவீரராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னால் நிற்கிறார். இந்தத் தருணத்தில், ஸ்டாலினுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் சமூக நீதிக்கு எதிரானது. ஸ்டாலினுக்கு வலு சேர்க்கும் ஒவ்வொரு செயலும் நாட்டில் மக்களாட்சியைச் சீரமைக்கும் மாபெரும் தொண்டாகும்!
#தலைமைத்துவம்
#சமூகநீதி
#எல்லார்க்கும்எல்லாம்
#ஓரணியில்தமிழ்நாடு