அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் Arts & Entertainment தமிழ் செய்தி, விசேட செய்தி,இந்திய,இலங்கை செய்தி, உலகச் செய்தி...

கேட்டு கொடுப்பது தானம்...!கேட்காமல் அளிப்பது தர்மம்...!தானம், தர்மம் என்கிறார்களே?  அப்படியென்றால் என்ன?மகாபாரதத்தில் உட...
20/09/2025

கேட்டு கொடுப்பது தானம்...!
கேட்காமல் அளிப்பது தர்மம்...!

தானம், தர்மம் என்கிறார்களே?
அப்படியென்றால் என்ன?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க
பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை.
எவரிடம் கேட்பது.?
எவர் தெளிவாகக் கூறுவார்கள் ?
குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன்,
அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,

என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே..

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.

ஆனால்,

எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே...

நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,
ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.

தானமும் தர்மமும்
பாவமும் புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்கிறார்.

நாமும் புரிந்துகொள்வோம்.

#கேட்டு_கொடுப்பது #தானம் !
#கேட்காமல்_அளிப்பது #தர்மம் !

தர்மம் தலை காக்கும்...!

அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!* ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்ட...
19/09/2025

அர்த்த சாஸ்திரம் உரைக்கும்
அர்த்தமுள்ள அறிவுரைகள்..!

* ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

* வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப் படும்போதும், துரதிர்ஷ்டமான காலத்திலும் அறியலாம்.

* நீர் நிறைந்த ஆறு, கூரிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்பக் கூடாது .

* ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

* அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

* ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

* நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

* உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

* கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

* கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

* காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

* பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

* பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

* ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

* யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டே சென்று விடுங்கள்.

* எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

* அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

* சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம் ஆனால் நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

* வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

* அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

* கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

* எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

* மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

* பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

* பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

* கஞ்சனுக்கு பிச்சைக்காரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரணநிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும். கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

* வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

* பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவர்த்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலையானது சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

* வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது. சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்தூய்மை வராது.

* கல்வி கற்கும் மாணவன் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டிய எட்டு விஷயங்களாவன - அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.

* உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.
தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அவை கஷ்டப்பட்டு தேடிய தேனை தானே உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள் ...
எக்காலத்திற்கும் ஏற்ற அறிவுரைகள் ..!
நாங்கள் படித்து வியந்தோம் ..!
உங்களுக்காக இங்கே பதிவிடுகிறோம் ..!

மிகச்சிறந்த முதலீடு பணத்தில் அல்ல, சரியான மனிதர்களில் தான்.    -ரத்தன் டாட்டா
18/09/2025

மிகச்சிறந்த முதலீடு பணத்தில் அல்ல, சரியான மனிதர்களில் தான்.
-ரத்தன் டாட்டா

சிந்தித்து செயல்படுங்கள்!!! 👇
16/09/2025

சிந்தித்து செயல்படுங்கள்!!! 👇

16/09/2025
கோவையில் நடந்த India Today Conclave South இல் அண்ணாமலை அவர்களும் மிக்கச்சிறப்பான ஒரு பேட்டியை வழங்கியிருக்கிறார். எப்போத...
15/09/2025

கோவையில் நடந்த India Today Conclave South இல் அண்ணாமலை அவர்களும் மிக்கச்சிறப்பான ஒரு பேட்டியை வழங்கியிருக்கிறார். எப்போதுமே அண்ணாமலையின் பேச்சில் இருக்கும் தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் எல்லாமே இந்த நேர்காணலிலும் சிறப்பாகவே வெளிப்பட்டது.

ஒரு சிறந்த தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களில் முதலாவது தைரியம். மக்களை எதிர்கொள்ளும், கடினமான முடிவுகளை எடுக்கும், உண்மையை பயமின்றி பேசும் தைரியம் அவசியம்.

இரண்டாவது தெளிவான பார்வை. ஒரு தலைவன் தனது இலக்குகளை தெளிவாக வரையறுத்து, மக்களுக்கு அதை எளிதாக புரியவைக்க வேண்டும்.

மூன்றாவதாக, பொறுமை மற்றும் சுய ஒழுக்கம். அரசியல் ஒரு நீண்ட பயணம். இதில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுய ஒழுக்கம் தவறிய ஒருவனால் நிச்சயம் ஒரு கூட்டத்தை நேர்மையாக வழி நடத்திவிட முடியாது.

நான்காவதாக, மக்களை ஒருங்கிணைக்கும் திறன். வெவ்வேறு கருத்துகளை உடைய மக்களை ஒரே நோக்கத்திற்காக இணைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இது அத்தனையும் கொண்ட ஒரே தலைவராக தற்போது அண்ணமலை மட்டுமே இருக்கிறார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி John Quincy Adams சொன்னது போல ‘If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader.’

அண்ணாமலையின் சொல், செயல், நடத்தை, அறிவு, துணிவு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாமே இளைஞர்களை ஈர்க்கிறது. He is an inspiration.

எந்த கட்சி சார்பும் இல்லாது, கொத்தடிமை மனநிலையில் இல்லாது, நடுநிலையான கண்ணோட்டத்தோடு அரசியலை அணுகும் யாரையும் அண்ணாமலை எனும் இளம் தலைவன் நிச்சயம் கவர்வான்.

முன்கூட்டியே செட்அப் செய்த பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு கூட பிட்டு பேப்பரில் பதில் எழுதி வைத்து அதையும் பார்த்து தப்பு தப்பாக படித்து உளறிக் கொட்டும் தலைவர்கள் மத்தியில் நிச்சயம் அண்ணாமலை ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தான்.



- றின்னோஸா-

எத்தனை பேர் இத பாத்திருக்கீங்க?
14/09/2025

எத்தனை பேர் இத பாத்திருக்கீங்க?

நிருபர் : உக்ரைன் போர் பற்றி இந்தியா ஏன் உலகளவில் கருத்து கூறவில்லை?ஜெய் - ஐரோப்பியர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஐர...
14/09/2025

நிருபர் : உக்ரைன் போர் பற்றி இந்தியா ஏன் உலகளவில் கருத்து கூறவில்லை?

ஜெய் - ஐரோப்பியர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஐரோப்பாவில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் உலகைளவிலான பாதிப்பாக ஊடகமும் மக்களும் நம்புகிறார்கள். அதற்காக உலகமே குரல் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள், ஆனால் ஆசிய நாடுகளில் நடக்கும் சம்பவங்களை ஐரோப்பியர்கள் கண்டுகொள்வதில்லை. ஐரோப்பியர்களின் பெரியண்ணன் மனப்பாண்மை தான் உங்கள் கேள்விகளில் தெரிகிறது என்றார்.

{இதை நேற்று தான் டிரம்ப் புரிந்து கொண்டார்

'உக்ரைன்' ஐரோப்பிய யூனியனின் தலைவலி, இதனால இந்திய US உறவு பாதிக்க கூடாது , வர்தக பேச்சுவார்த்தை தொடரும் - டிரம்ப்}

 #மனிதனை கொ* ல்வது நோயா? பயமா?1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசி...
14/09/2025

#மனிதனை கொ* ல்வது நோயா? பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்?.... ஏன்?.... ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்டும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமுமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்.

காற்றை கண்டு பயப்படாதீர்கள்.

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்.

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்.

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்.

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்.

இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்...


கண்ணில் பட்ட அழகான பதிவு.
By Kannadi Channel Bilal

ஒருவழியாக Breaking Bad பார்த்து முடித்துவிட்டேன்.இதுவரை நான் பார்த்த Money Heist, Squid Game உள்ளிட்ட அனைத்து சீரிஸ்களும...
14/09/2025

ஒருவழியாக Breaking Bad பார்த்து முடித்துவிட்டேன்.

இதுவரை நான் பார்த்த Money Heist, Squid Game உள்ளிட்ட அனைத்து சீரிஸ்களும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கி, போகப்போக சற்று தொய்வடைய ஆரம்பித்துவிடும். கதையை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில், அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து, பார்ப்பவர்களை சோர்வடையச் செய்வார்கள். அப்படி இல்லையென்றால், சம்பந்தமே இல்லாமல் கதை திசைமாறி எங்கெங்கோ அலைந்துவிடும்.

ஆனால், ஆரம்பமே அட்டகாசமாகத் தொடங்கி, போகப்போக இன்னும் வேகமும் விறுவிறுப்பும் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஒரே சீரிஸ் இதுவாகத்தான் இருக்க முடியும்.

திரையில் வால்டர் வைட் காய்ச்சும் மெத்தின் போதையை நமக்குள் ஏற்றி, மொத்தமாக இந்த சீரிஸுக்கு அடிமையாக்கிவிடுகிறார்கள். சத்தியமாகச் சொல்கிறேன், இதுவரை நான் பார்த்தவற்றில் THE BEST என்றால் இது தான்.

ஹீரோ வால்டர் வைட் ஒரு வெள்ளைக் கலர் ஜட்டியோடு நடு ரோட்டில் கையில் துப்பாக்கியோடு நிற்கும் காட்சியோடு ஆரம்பிக்கும் இந்த சீரிஸின் கடைசி அத்தியாயம் வரை அந்த வெள்ளை ஜட்டியோடு தான் தலைவர் அலைகிறார். அந்த அழுக்கு ஜட்டியை நான்கு லட்சம் அமெரிக்க டாலருக்கு ஒருவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார் என்றால், இந்த சீரிஸுக்கு எப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி, இப்போது கதைக்கு வருவோம்.

மொத்தம் 5 சீசன்கள், 62 எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 50 நிமிடங்கள் வரை நீள்கிறது.

சீரிஸின் ஒன்-லைனர் ரொம்ப சிம்பிள்: ஒரு அம்மாஞ்சியான கெமிஸ்ட்ரி புரொஃபஸர் எப்படி அதிரடியான போதைப் பொருள் சாம்ராஜ்யத்தின் டானாக மாறுகிறார் என்பது தான் கதை.

வழக்கமான கிச்சா ஆண் போலவே வீட்டில் பொண்டாட்டியும் மதிக்காம, ஸ்கூலில் பாசங்களும் கண்டுக்காம, ‘ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல’ என்றபடி வாழ்க்கையை நடத்துகிறார் கெமிஸ்ட்ரி வாத்தியாரான வால்டர் வைட். பள்ளி வருமானம் குடும்பம் நடத்த போதாமல், முகத்தில் கால் கிலோவுக்கு புருவம் வளர்த்த ஒரு சிடு மூஞ்சி கார் வாஷ் ஓனரிடம் பார்ட் டைமாக வேலைக்கு சேர்க்கிறார். இப்படி அமைதியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாள், திடீரென வாழ்வே மாயம் கமலஹாசன் போல இரும ஆரம்பிக்கிறார்.

டாக்டரிடம் போய் செக் அப் செய்து பார்த்தால் ‘சாரி உங்களுக்கு ஸ்டேஜ் 3 லங் கேன்சர்’ என்று டாக்டர் கன்பர்ம் பண்ண, அந்த நேரம் பார்த்து அவரது மனைவி வேறு இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

"இப்போ என்ன செய்வது?" என்று திகைத்து நிற்கும் வைட்டை, விதி எப்படி மெத்தம்பேட்டமைன் (மெத்) எனும் போதைப் பொருள் வியாபாரத்துக்குள் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது என்பதை ஒரு துளி சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வின்ஸ் கில்லிகன் (Vince Gilligan) .

வால்டர் போதைப் பொருள் தயாரிக்கும் ஆசாமியாக இருக்க, அவரது மைத்துனர் ஹாங்க் ஷ்ரேடர் ஒரு DEA (Drug Enforcement Administration) ஏஜன்ட்டாக இருப்பார்.

ஒரு நாள் போதைக் கும்பலைப் பிடிக்கச் செல்லும்போது, "நீயும் வா, மாப்ளே!" என்று ஹாங்க் வால்டரையும் அழைத்துச் செல்கிறார். அப்போது தான் மெத் எனும் மாபெரும் போதைப் பொருள் சாம்ராஜ்யம் வால்டருக்கு அறிமுகமாகிறது.

குறிப்பாக, கல்கண்டு போல நீல நிறத்தில் இருக்கும் மெத்தம்பேட்டமைன் எனும் போதைப் பொருள் தயாரிப்பில் பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதையும் அவர் தெரிந்துகொள்வார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் தான் சீரிஸின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ஜெஸ்ஸி பிங்க்மேன் அறிமுகமாகிறார்.

வால்டரின் முன்னாள் மாணவனான ஜெஸ்ஸியுடன் இணைந்து, மெத் உலகுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கும் வால்டர், ஒரு கட்டத்தில் செஃப் தாமு போல அமெரிக்காவின் தரமான மெத் கிரிஸ்டலை சமைக்கும் மிகச் சிறந்த "குக்" ஆக மாறுகிறார்.

நியூ மெக்ஸிகோவின் புறநகர்ப் பகுதியில் ஒரு சிறிய கேரவன் வண்டிக்குள் ஆய்வகம் அமைத்து ஆரம்பிக்கும் மெத் வியாபாரம், பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து இறுதியில் சர்வதேச அளவுக்கு விரிவடைகிறது. பணம் கூரையை அல்ல, வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

பிசினஸ் வளர வளர லியோ பட கிளைமாக்ஸ் மாதிரி கூட்டம் கூட்டமாக வில்லன்களும் உருவாகுகிறார்கள்.

கஜினி பட கொடூர வில்லன் போல இருக்கும் டுக்கோவில் ஆரம்பித்து, டுக்கோவின் கிரிமினல் தாத்தா, டுக்கோவின் மொட்டை பாய்ஸ் கசின்ஸ், டொட், டொட்டின் குடுமி மாமா என டிசைன் டிசைனாக நீளும் வில்லன்களின் லிஸ்ட்டில் மாஸ்டர் பீஸ் வில்லன் - வெளிப்பார்வைக்கு KFC போன்றதொரு restaurant நடத்திக்கொண்டே திரைமறைவில் ஒரு மிகப்பெரிய போதை சாம்ராஜ்ஜியத்தையே கட்டி ஆளும் கஸ் ஃபிரிங்கில்.

மெல்லிய சிரிப்பு, அமைதியான எந்த உணர்ச்சிகளையும் காட்டாத முகம். எப்போதும் டை கட்டி டக் இன் பண்ணிய ஷர்ட் என மனுஷன் அடக்கி வாசித்து பட்டையை கிளப்புகிறார்.

இது தவிர கொசுறு கொசுறாக எக்கச்சக்க கொடூர கொலைகார கூட்டம் வந்து வந்து போகிறது. இவர்கள் அத்தனை பேரையும் சாதாரண நிழல்கள் ரவியாக இருந்த வால்டர் ஒயிட் எப்படி தில்லா, கேனிஷா பெயரில் ஸ்டுடியோ ஆரம்பிக்கும் அளவுக்கு தைரியமான ஜெயம் ரவியா மாறி போட்டுத் தள்ளுகிறார் என்பதை, நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்துக் கதை சொல்கிறார் வின்ஸ் கில்லிகன்.

இதில் வரும் கேரக்டர் டெவலப்மெண்ட் அளவுக்கு வேறு எதிலுமே நான் இதுவரை பார்த்ததில்லை. வால்டர் வைட், ஜெஸ்ஸி பிங்க்மேன், ஹேன்க் ஷ்ரேடர், கஸ் ஃப்ரிங் முதல் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் ஒரு திறமையான சிற்பியின் கைவண்ணத்தில் உருவான சிலையைப் போல அத்தனை கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வின்ஸ் கில்லிகன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகம் முதல் முடிவு வரை, அவர்களின் உணர்வுகள், மன மாற்றங்கள் என அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை மிக மிக நுணுக்கமாகச் செதுக்கியுள்ளார்.

உதாரணத்துக்கு ஆரம்பத்தில் அம்மாஞ்சி கெமிஸ்ட்ரி டீச்சராக இருக்கும் வால்டர் வைட் போகப் போக Drug லோர்ட் Heisenberg ஆக மாறும் அந்த transformations எல்லாம் வேற லெவல் Perfection to the core!.

மூன்றாவது சீசனின் இறுதி அத்தியாயத்தில், வால்டர் வைட்டின் மனைவி ஸ்கைலர், தன் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, கண்ணீருடன் தன் பயத்தை வெளிப்படுத்துவார்.

அந்த உணர்ச்சிகரமான தருணத்தில் அமைதியாகவும் ஆழமாகவும் ஸ்கைலரின் கண்களை ஊடுருவிப் பார்க்கும் வால்டர், "I am not in danger, Skyler. I am the danger" என்று கூறும் வசனம், தொடரின் தரத்தை ஜஸ்ட் ஒரு வரியில் உணர்த்தி விடும்.

அந்தக் காட்சியில் வால்டரின் கண்களில் தெரியும் அகங்காரம், அவரது பார்வையில் வெளிப்படும் தீவிரம், உடல் மொழியின் திமிறு என எல்லாமே, “பார் மொத்தமா சந்திரமுகியா மாறி நிக்குற உன் மனைவி கங்காவை பார்’ என்பது போல வேற லெவல் goosebump மோமென்ட்.

அதே போல ஜெஸ்ஸி பிங்க்மேனுடைய கேரக்டர் டெவலப்மெண்ட்டுமே ரொம்ப ரொம்ப உணர்வுபூர்வமாக செதுக்கியுள்ளார்கள்.

ஆரம்பத்தில் “Hey Yo whatssaaappp maan..” என்று ஒரு don't care attitude இல், எந்த பொறுப்பும் இல்லாத போதை ஆசாமியாக, எடக்கு மடக்காக எதையாவது செய்து வால்டரை பிரச்சனையில் மாட்டிவிடும் முட்டாளாக வரும் ஜெஸ்ஸி பிங்க்மனை பார்த்தாலே கடுப்பாகும்.

ஆனால், போகப் போக ஜெஸ்ஸியின் இலகிய மனம், குழந்தை குணம், அவனது உணர்ச்சி மிகுந்த பயணம், அவன் செய்யும் தவறுகள், அவனது வலிகள் என மொத்தமாக உணரத் தொடங்கும் வேளையில், ஜெஸ்ஸிக்கு அகில உலக ரசிகர் மன்றம் அமைக்கும் அளவுக்கு போய்விடுவோம்.

வாழ்க்கை புரட்டிப் போடும் போது ஒரு மனிதன் எப்படியெல்லாம் மாறுவான் என்பதை வால்டர் வைட் மற்றும் ஜெஸ்ஸி பிங்க்மேன் எனும் இரண்டு கதாபாத்திரத்தை வைத்து மிக அழகாக சொல்லி விட்டார் வின்ஸ் கில்லிகன்.

மெயின் கேரக்டர்கள் மாத்திரமல்ல இதில் வரும் சப்போர்டிங் கேரக்டர்களை கூட அவ்வளவு மெனக்கடலுடன் வடிவமைத்திருக்கிறார்கள். அவர்களும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு புது புது கேரக்டர் அறிமுகமாகிக் கொண்டே இருக்கும். ஆனால் எந்த இடத்திலும் தொய்வோ குழப்பமோ இல்லாமல் கடலோடு இயல்பாக வந்து கலக்கும் தெளிந்த நீரோடை போல அவை பிரதான கதையோடு கலந்து பயணிக்கத் தொடங்கும்.

அதே போல ஒவ்வொரு எபிசோட் ஆரம்பிக்கும் போதும் முந்தைய எபிசோட்டின் முடிவுக்கு தொடர்பே இல்லாமல் ஒரு காட்சியை சில நிமிடங்களுக்கு காட்டுவார்கள். அதைப் பார்க்கும் போது “என்ன எழவுடா இது சம்பந்தமே இல்லையே’ எனத் தோணும். ஆனால், போகப் போக எல்லாமே ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து ஒரு அழகான கதையாக இணைந்து தெளிவாக நமக்கு புரிய வரும்.

டைரக்ஷன் ஒரு கலை என்றால் Vince Gilligan அதன் மேதை.

நான் முதல் பதிவை எழுதியபோது, சிலர் முதல் ஒன்று அல்லது இரண்டு சீசன்களை மட்டும் பார்த்துவிட்டு, "ரொம்ப மெதுவாக இருக்கு, பொறுமையை சோதிக்குது, அதனால பாதியிலேயே விட்டுட்டேன்" என்று கூறினார்கள்.

But, Trust me, அந்த முதல் இரு சீசன்களையும் கடந்து விட்டீர்கள் என்றால் போதும், அடுத்த மூன்றாவது சீசனில் இருந்து உச்ச வேகத்தில் எகிறி அடித்து மேலே செல்லும் ரோலர் கோஸ்டேர் ரைட் போல உங்களை ஒரு இன்ச் நகர விடாமல் கட்டிப்போட்டு விடும்.

மூன்றாவது சீசனில் பற்றிக்கொள்ளும் ஃபயர் ஐந்தாவது சீசனில் சும்மா கொழுந்து விட்டு எரியும். அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியும் அதன் ஸ்கிரீன் பிளேவும் தெறி மாஸாக இருக்கும்.

62 எபிசொடின் ஸ்கிரீன் பிளேயுமே ரொம்பவே consistency ஆக இருந்தது. எந்த ஒரு இடத்திலும் ஒரு சின்ன லாஜீக் பிசிறு கூட தட்டவில்லை. அத்தனை perfection.

அதே போல அவர்கள் ஆங்காங்கே வைத்துக்கொண்டு வரும் எல்லா loose end களையும் அப்படியே கொண்டு வந்து, இறுதியில் கனெக்ட் செய்து, சஸ்பென்ஸ்சை மிகச் சரியாக அவிழ்க்கும் தருணங்கள் எல்லாமே உண்மையிலேயே WOW!

மொத்த சீசனுக்குமான top-notch கடைசி ஐந்தாவது சீசன் தான். ஜெட் வேகத்தில் விறுவிறுவென்று ஓடும் காட்சிகளோடு சேர்ந்து நம் இதயத்துடிப்பும் எகிறும்.

கடைசியில் சீரீஸ் மொத்தமாக முடிந்த பிறக்கும் சிறிது நேரத்துக்காவது மனதை கனமாக்கி, சிலை போல அப்படியே அமரச் செய்து விடும்.

இதில் எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு விடயம் என்னவென்றால், ஏனைய சீரிஸ்களை போல இதில் வில்லனை களோரிஃபை பண்ணவில்லை.

உதாரணத்துக்கு, Money heist எடுத்துக்கொண்டால் முதல் சீசன் முதல் எபிசோடிலேயே புரொஃபசரின் கடின சாவு விசிறியாக பலர் மாறினார்கள்..

ஆனால் இதில் ஆரம்பத்தில் அச்சச்சோ பாவமே என அனுதாபம் வரவைக்கும் வால்டர் வெயிட்டை போகப் போக தசாவதாரத்தில் வரும் கிழவி போல “சண்டாள பாவி இவனுக்கு ஒரு கேடு வர மாட்டுதே’ என மனசு திட்டித் தீர்க்க ஆரம்பித்து விடுகிறது.

கேன்சர் நோயாளியாக இருமி இருமி கஷ்டப்படும் போதும் சரி, முதல் கொலையை வேறு வழியில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பண்ணும் போதும் சரி, “அட விடுப்பா பாத்துக்கலாம்…’ என்று நாமே வால்டரை முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்துவோம்.

ஆனால் போகப் போக தன் சுய நலத்துக்காக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கொலைகளை செய்யும் போது ‘இந்த நாய புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..’ என்று DEAக்கு கால் செய்து போட்டுக்கொடுக்கும் அளவுக்கு அவர் மேல் கொலைவெறி வந்துவிடுகிறது.

படத்தின் ஹீரோவும் அவரே - வில்லனும் அவரே.

பணம் மட்டுமே ஒருவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்து விடாது. சில சமயங்களில் நாம் துரத்தும் பணமே நம்மை துரத்த ஆரம்பிக்கும் என்பதையும், கட்டுப்பாடற்ற ஈகோ ஒரு மனிதனின் அழிவுக்கு எப்படியெல்லாம் வழிவகுக்கும் என்பதையும் வால்டர் வைட்டின் வாழ்க்கை இதில் உரக்கச் சொல்கிறது.

நாம் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாம் மட்டுமே முழுப் பொறுப்பாளிகள்.

நமது தேர்வுகள் நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும், நமக்கு எந்தவிதத் தொடர்புமே இல்லாதவர்களையும் கூட ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.

நமது செயல்கள் ஒரு டொமினோ விளைவைப் போலவோ, பட்டாம்பூச்சி விளைவை (Butterfly Effect) போலவோ ஒரு அதிர்வலையை உருவாக்குகின்றன.

அந்த சிறிய அலை, தொடர்ந்து விரிந்து, பரவி, பெரிதாகி, உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு அப்பாவியின் வாழ்க்கையை சிதைத்து விடக் கூடிய அளவுக்கு வீரியம் மிக்கதாக மாறும் என்தே Breaking Bad சொல்லிக்கொடுக்கும் பால பாடம்.

பல நேரங்களில், நாம் தேர்ந்தெடுக்கும் பாதை, திரும்பி வர முடியாத ஒற்றைவழிப் பயணமாகவே அமைந்துவிடவும் கூடும்!

- றின்னோஸா-


Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when அழகிய தமிழ் மகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share