VAALI Pathippagam

VAALI Pathippagam Our publications is responsible for selling books of Kavignar Vaali and some famous poets...

30/10/2025
காவியக் கவிஞர் வாலியின் பிறந்தநாளை வருடம் தோறும் கொண்டாடுகிற வாலி பதிப்பகம், இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிறு மாலை த...
20/09/2024

காவியக் கவிஞர் வாலியின் பிறந்தநாளை வருடம் தோறும் கொண்டாடுகிற வாலி பதிப்பகம், இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிறு மாலை திருச்சியில் கவிஞர் வாலியின் பிறந்தநாள் விழாவை நடத்துகிறது. வருடம் தோறும் கவிஞர் ஒருவருக்கும் எழுத்தாளர் ஒருவருக்கும் ரூபாய் 50,000 பண முடிப்புடன் கவிஞர் வாலி விருது, கவிஞர் வாலியின் நண்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களின் பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கவிஞர் வாலி விருது மூத்த திரைப்பட பாடல் ஆசிரியர் "கவிஞர் பூவை செங்குட்டுவன்" அவர்களுக்கும், சென்னை பொதிகை தொலைக்காட்சியில் பல்வேறு நாடகங்களை படைத்த சிறப்பிற்குரியவர் "அவள் ஒரு தொடர்கதை" போன்ற வெற்றிகரமான திரைப்படங்களின் கதாசிரியர் எழுத்தாளர் "எம் எஸ் பெருமாள்" அவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. திருச்சியில் நடைபெறுகிற இவ்விழாவில் அரசியல் இலக்கிய திரைப்பட பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

https://youtu.be/GfhlWIm9Hek
02/08/2024

https://youtu.be/GfhlWIm9Hek

நடிகர் திலகத்திற்கு கிடைத்த சாட்டையடி | Sivaji Ganesan | Vaali | Unknown fact about Sivaji ...

https://youtu.be/ncLc_iEWGPk
27/07/2024

https://youtu.be/ncLc_iEWGPk

முதல்வர் நீங்களா நானா ? | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Kavignar Vaali | Nellai Jayantha | Vaali ...

பெரிய கோபுரங்கள் கூட சின்ன ஒரு கல்லில் இருந்து தான் தொடங்குகிறது என்று சொல்வார்கள்.  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்ப...
27/07/2024

பெரிய கோபுரங்கள் கூட சின்ன ஒரு கல்லில் இருந்து தான் தொடங்குகிறது என்று சொல்வார்கள். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் சகோதரி விஜயா தாயன்பன் அவர்களோடு ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன். விரைவில் கலைஞர்- கலைஞர் என்கின்ற குழு சார்பில் கலைஞர் பாடல்கள் அடங்கிய மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டு கொண்டிருந்த நேரம். கலைஞர் எழுதிய பாடல்கள் எது எது என்கின்ற விவரம் சரியாக இல்லையே என்று குறைபட்டார்கள். அதற்குப் பிறகு இதே பேச்சு ஒரு முறை முதலமைச்சர் அவர்களுடைய செயலாளராக இருக்கின்ற திரு. சண்முகம் ஐஏஎஸ் அவர்களுடைய அறையிலே நடைபெற்றது. அப்பொழுது அக்கா சொன்னார்கள் ஜெயந்தா நீங்கள் ஏன் கலைஞர் திரையிசை பாடல்களை தொகுக்கக்கூடாது என்று. நான் சொன்னேன் சிலோன் விஜயந்திரன் என்கின்ற நண்பர் முன்பு இந்த பாடலை தொகுத்து இருக்கிறார். சிலோன் விஜயந்திரன் மறைந்த பிறகும் கூட கலைஞர் அவர்கள் நிறைய படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதனால் சிலோன் விஜயந்திரன் தொகுப்பு முழுமையான தொகுப்பாக இருக்க வாய்ப்பில்லை நான் ஒரு முழுமையான தொகுப்பை தொகுப்பதற்கு ஆரம்பிக்கிறேன் என்று சொன்னேன்.
உடனடியாக கலைஞர் பாடல் எழுதிய படங்கள் எது எது என பல்வேறு புத்தகங்களை திரட்டி அந்த பட்டியலை தயாரிக்க தொடங்கினேன். அடுத்த இரண்டு நாளில் அந்தப் பாட்டு புத்தகங்களை தேடி பெரம்பலூர் அருகிலே இருக்கின்ற வேப்பூரில் வாழ்கின்ற திரையிசை ஆய்வாளர் திரு பொன் செல்லமுத்து அவர்களை சென்று சந்தித்தேன். அவரிடம் சில புத்தகங்கள் இருந்தன, அதை நகலெடுத்து அனுப்புவதாக சொன்னார். அதன் பிறகு திருநின்றவூர் திரு சந்தானகிருஷ்ணன் அவர்களிடம் பேசினேன். அவர் பல்வேறு தகவல்களை சொன்னார். பல பாட்டு புத்தகங்களை தந்து உதவினார். you tube il இருக்கின்ற சில படங்களை பார்த்து கலைஞர் எழுதிய பாடல் வரிகளை அந்த படங்களில் இருந்து என்னுடைய திருமதியை எழுதச் சொன்னேன். கலைஞர் பணியாற்றிய படங்களின் பட்டியலை ஐயா திருநாவுக்கரசு அவர்கள் ஒரு புத்தகத்திலே வெளியிட்டு இருந்தார். அதனை எடுத்து ஆய்வு செய்தேன் . முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற துணைச் செயலாளர் கவிஞர் முருகன் அவர்கள் கலைஞர் பணியாற்றிய படங்களின் பட்டியலை வைத்திருந்தார். அதிலிருந்து சில தகவல்களை எடுத்தேன் பெண்ணாடம் நீலமேகம் அவர்கள் வெளியிட்ட திரைக்களஞ்சியம் பல தகவல்களை சரி பார்க்க உதவியது. கலைஞர் எழுதிய பாடல்கள் மட்டுமல்லாது கலைஞர் பாடல் எழுதிய படத்தில் இடம்பெற்ற அனைத்துபாடல்களின் முதல் வரியையும் குறிப்பிட்டு எந்த பாடலை யார் எழுதினார் என்கின்ற விவரத்தையும் இந்த புத்தகத்தில் தந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் அவர்களை சுற்றி நடந்த திரை உலக சம்பவங்களை ஏறத்தாழ ஒரு 40 பக்கங்களுக்கு மேல் இந்த புத்தகத்தில் தந்திருக்கிறேன். ஆக கலைஞர் 23 படங்களில் எழுதிய 47 பாடல்களோடு அம்மையப்பன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இதில் இணைத்து இருக்கிறேன். அம்மையப்பன் படத்தில் பல பாடல் ஆசிரியர்கள் எழுதியிருந்தாலும் யார் எந்த பாடலை எழுதியது என்று தெரியாததால் கலைஞர் பாடல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாமல் அனைத்து பாடல்களையும் இணைத்து இருக்கிறேன். கலைஞர் தமிழில் பணியாற்றிய 71 படங்களின் விவரங்களும் இதில் தரப்பட்டிருக்கின்றன. கலைஞரின் 9 படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த விவரமும் இந்த புத்தகத்தில் உள்ளது கலைஞருக்கு கலை உலக கலை உலக கதவை திறந்து விட்ட இசை சித்தர் சி எஸ் ஜெயராமன் கலைஞரை முதன்முதலாக தனது வசன உதவியாளராக ராஜகுமாரி படத்தில் சேர்த்துக் கொண்ட இயக்குனர் ஏ எஸ் ஏசாமி கலைஞருடைய திறமையை குறிப்பாக மந்திரிகுமாரி நாடகத்தினுடைய சிறப்பை பற்றி மாடர்ன் தியேட்டர்அதிபர் டி ஆர் சுந்தரம் அவர்களுக்கு எடுத்துச் சொன்ன கவிஞர் கா மு ஷெரீப் ஆகியோரின் வாழ்க்கை குறிப்பும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. புத்தகத்தை அத்தனை பக்கங்களும் வண்ணமயமான அழகோடு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ளது. மன்ற தலைவர் திரு வாகை சந்திரசேகர் அவர்களும் உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாய் அன்பன்அவர்களும் புத்தகத்தின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு சென்ற 20 ஆம் தேதி முத்தமிழ் பேரவையில் நடத்திய விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிதாயினி கனிமொழி கருணாநிதி அவர்கள் அந்த புத்தகத்தை வெளியிட மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் உயர்திரு தங்கம் தென்னரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தமிழ்நாடு இன்று அந்த புத்தகத்தை கலைஞர் தொலைக்காட்சியில் கலைஞர் செய்தி தொலைக்காட்சியின் பொறுப்பாளர் திரு திருமா வேலன் அவர்களை சந்தித்து கொடுக்கலாம் என்று சென்றிருந்தேன். நான் சென்றிருந்த காலை 11.30 மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு பொதுப்பணித்துறைஅமைச்சர் அவர்களும் அறிவாலயத்திற்கு வந்து விட்டார்கள். நான் இரண்டாவது மாடிக்கு சென்று திருமாவேலன் அவர்கள் அறைக்குள் நுழைந்தேன். புத்தகத்தை வாங்கி பார்த்து விட்டு அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார். முதல்வரிடம் புத்தகத்தை கொடுத்து விட்டீர்களா என்று கேட்டார் இன்னும் கொடுக்கவில்லை முதல்வருடைய செயலாளருக்கு அனுமதி கேட்டு செய்தி அனுப்பி இருக்கிறேன் என்று சொன்னேன் இருங்கள் என்று சொல்லிவிட்டு முதல்வர் அவர்களின் உதவியாளர் திரு தினேஷ் அவர்களிடம் நான் வந்திருக்கும் செய்தியை சொல்லி இப்பொழுது நெல்லை ஜெயந்தா முதல்வரிடம் புத்தகம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். உடனே அவர் கீழே வரச் சொல்லுங்கள் என்று சொல்ல வேக வேகமாக நான் கீழே சென்றேன் அங்கே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தார்கள் ஈரோடு இறைவன் என்னை வரவேற்றார். அண்ணன் பூச்சி முருகன் அவர்கள் நலம் விசாரித்தார். திரு தினேஷ் அவர்களை சந்தித்தேன். அவரும் நலம் விசாரித்தார் சகோதரர் பூச்சி முருகன் முதல்வர் அவர்கள் அறைக்குச் சென்று நெல்லை ஜெயந்தா வந்திருக்கிறார் என்று சொன்னவுடன் வர சொல்லுங்கள் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னது என் காதுகளில் விழுந்தது மகிழ்ச்சியோடு உள்ளே சென்றேன். பொதுப்பணித்துறை அமைச்சர் திரு வேலு அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி கே எஸ் இளங்கோவன் அவர்களும் துறைமுகம் காஜா என்று நினைக்கிறேன் அவரும் உள்ளே இருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியோடு வரவேற்ற முதல்வர் அவர்கள் வாருங்கள் ஜெயந்தா நலமா என்று கேட்டார் நல்ல நலம் தலைவரேஎன்று சொல்லிக் கொண்டே அருகில் சென்றேன் பாடல்கள் தொகுப்பை அவர்கள் கையில் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட முதல்வர் தயாரிப்பு அருமையாக இருக்கிறது என்று சொன்னார் . இதுவரை வேறு யாரும் செய்யாத நல்ல பணியை ஜெயந்தா செய்திருக்கிறார் என்று அமைச்சர் அண்ணன் வேலு அவர்கள் சொன்னதும் முதல்வர் மீண்டும் புன்னகைத்தார்.
புகைப்படம் எடுத்தார்கள் புகைப்படம் எடுக்கும் போது நான் முதல்வரை பார்க்க பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் வேலு அவர்கள் ஜெயந்தா கேமராவை பாருங்கள் என்று சொன்னார். அதன் பிறகு திரு டி கே எஸ் இளங்கோவன் அவர்கள் பாடல்களைப் பற்றிய சில விவரங்களை கேட்க சொல்லிவிட்டு வெளியே வந்தேன். முதல்வர் அவர்களோடு எதிர்பாராத ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தந்த கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் பத்திரிகையாளர் திருமாவேலன் அவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு அவர் கொடுத்த அடுத்த பணியையும் முடித்து விட வேண்டும் என்கின்ற உறுதியோடு புறப்பட்டேன்.
கலைஞர் பெருமானுக்கு எத்தனையோ பாடல்கள் எழுதப்பட்டிருந்த போதும் நான் எழுதிய முத்தமிழே வாழ்க என்ற பாடல் அவருக்கு வரவேற்பு பாடலாக அமைந்து சிறப்பான இடத்தை பெற்றதைப் போல கலைஞர் பெருமானை பற்றி எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும் அவருடைய பாடல்களை தொகுத்திருக்கிற என்னுடைய இந்த தொகுப்பு கலைஞரின் புத்தகங்கள் வரிசையில் ஓர் முக்கியமான இடத்தை பெரும் என்கின்ற மகிழ்ச்சியோடு இறைவனுக்கு நன்றி சொல்லியவாறு அங்கிருந்து அகன்றேன்.

Address

Chennai
600089

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAALI Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share