Kowsalya Tamizhachi

Kowsalya Tamizhachi அரசியல்,சினிமா,விளையாட்டு மற்றும் ஆன்மீக தகவல்கள்

எப்படியிருந்த தமிழ் சினிமா இப்படி ஆகிவிட்டது : 1989 தீபாவளியில் எத்தனை 100 நாள் படங்கள் தெரியுமா?“எப்படியிருந்த தமிழ் சி...
30/09/2025

எப்படியிருந்த தமிழ் சினிமா இப்படி ஆகிவிட்டது : 1989 தீபாவளியில் எத்தனை 100 நாள் படங்கள் தெரியுமா?

“எப்படியிருந்த தமிழ் சினிமா இப்படி ஆகிவிட்டது,” என சில பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை 'ரீ-வைன்ட்' செய்து பார்க்கும் போது தோன்றுகிறது. 1989ம் ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் 28ம் தேதியன்று வெளியான படங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

மூன்று ஹீரோக்களுக்கு இரண்டு
அன்றைய தினத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடித்த “அன்புக் கட்டளை, தங்கமான ராசா” ஆகிய இரண்டு படங்களும், சத்யராஜ் நடித்த “திராவிடன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை” ஆகிய இரண்டு படங்களும், விஜயகாந்த் நடித்த, “ராஜ நடை, தர்மம் வெல்லும்,” ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. ஒரே நடிகரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதும், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாவதும் அப்போதெல்லாம் சர்வ சாதாரணம். பின்னர்தான் அதற்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

175 நாள் கொண்டாட்டம்
அதேதினத்தில் ரஜினிகாந்த் நடித்த 'மாப்பிள்ளை', கமல்ஹாசன், பிரபு நடித்த 'வெற்றி விழா', பாலசந்தர் இயக்கிய 'புதுப் புது அர்த்தங்கள்” ஆகிய முக்கிய படங்களும் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே 175 நாட்களைக் கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

'வெற்றி விழா' படம் ராபர்ட் லுட்லம் எபதிய 'த போர்ன் ஐடின்டிட்டி” ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் இந்தப் படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இளையராஜாவின் இசையில் 'மாருகோ மாருகோ மாருகயி' பாடலுக்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'மாப்பிள்ளை' படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'அத்தகு யமுடு அம்மாயிக்கி மொகுடு' படத்தின் தமிழ் ரீமேக். தமிழில் சிரஞ்சீவியே தயாரித்து ஒரு சண்டைக் காட்சியிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இளையராஜான் இசையில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை. 200 நாட்களைக் கடந்து ஓடிய படம் இது.

பாலசந்தர் இயக்கத்தில் ரகுமான், கீதா, சித்தாரா நடித்து வெளிவந்த படம் 'புதுப்புது அர்த்தங்கள்”. இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் ஒரு மாறுபட்ட கதையும் இந்தப் படத்தை வெள்ளிவிழா காண வைத்தது.

7 படங்கள் 100 நாள் வெள்ளிவிழா
“மாப்பிள்ளை, வெற்றி விழா, புதுப்புது அர்த்தங்கள்” படங்கள் மட்டுமல்ல “வாத்தியார் வீட்டுப் பிள்ளை, ராஜநடை, அன்புக்கட்டளை, தங்கமான ராசா” ஆகிய படங்களும் 100 நாட்களைக் கடந்த படங்கள்.

இளையராஜா - தி கிங்
மற்றொரு முக்கியமான விஷயம் அந்த தீபாவளி வெளியீடுகளில் இருக்கிறது. அன்றைய தினம் வெளிவந்த 9 படங்களில் 7 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்த 7 படங்களில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிட வேண்டியவை. இந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு இசையமைத்துவிட்டு யு டியூபில் 100 மில்லியன் எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் யு டியூப் எல்லாம் வந்திருந்தால் அந்த 7 படங்களின் பல பாடல்கள் 100 மில்லியனைக் கடந்திருக்கும்.

1989 தீபாவளி நாளில் அப்போதைய டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராமராஜன், மோகன், ஆகியோரது படங்கள் வெளியாகி அவை அனைத்துமே லாபத்தைக் கொடுத்தது. இந்தக் காலத்தில் ஒரே ஒரு படத்தை அனைத்துத் தியேட்டர்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டு 500 கோடி வசூல் என அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

1999 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முக்கிய படமாக இயக்குனர் சங்கரின் முதல்வன் இதில் அர்ஜுன் நடித்திருந்தார், விஜயகாந்தின் கண்ணுபட...
29/09/2025

1999 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முக்கிய படமாக இயக்குனர் சங்கரின் முதல்வன் இதில் அர்ஜுன் நடித்திருந்தார், விஜயகாந்தின் கண்ணுபட போகுதய்யா, முரளி நடித்த ஊட்டி, பிரசாந்தின் ஹலோ, மனோஜின் தாஜ்மஹால் , அம்சவர்த்தனின் மானசீக காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த தீபாவளிக்கு சேது படமும் ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் ஆனது. இதில் உங்கள் மனம் கவர்ந்த படம் எது? உங்களுக்கு பிடித்த படத்தை எங்கே பார்த்தீர்கள்?

21 வயதில் திருமணம், ஒரே ஒரு பெண் குழந்தை: இவரின் கணவர் சிம்பு நடித்த ஹிட் படத்தின் இயக்குனர்!பிரபுவுடன் சீதனம், ராமராஜனு...
29/09/2025

21 வயதில் திருமணம், ஒரே ஒரு பெண் குழந்தை: இவரின் கணவர் சிம்பு நடித்த ஹிட் படத்தின் இயக்குனர்!

பிரபுவுடன் சீதனம், ராமராஜனுடன் அம்மன் கோயில் வாசலிலே ஆகிய படங்களில் நடித்திருந்த சங்கீதா, 1996-ம் ஆண்டு, விஜயுடன் பூவே உனக்காக என்ற படத்தில் நடித்திருந்தார்.

21 வயதில் தனக்கு திருமணம் நடந்ததாகவும், முதல் குழந்தைக்கு கொடுத்த அன்பை போலவே 2-வது குழந்தைக்கும் கொடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அதனால் நான் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டேன் என்று நடிகை சங்கீதா கூறியுள்ளார்.

1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சினேக்கான் ஒரு பொண்ணு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அவர், தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே, இதய வாசல், சரத்குமாருடன் சாமுண்டி, ரஜினியுடன் நாட்டுக்கு ஒரு நல்லவன், சிவாஜி பிரபு இணைந்து நடித்த நாங்கள், கமல்ஹாசனின் மகாநதி உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1995-ம் ஆண்டு ராஜ்கிரண் இயக்கி தயாரித்து நடித்த எல்லாமே என் ராசாதான் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சங்கீதா, அதன்பிறகு, பார்த்திபனுடன் புள்ளக்குட்டிக்காரன், பிரபுவுடன் சீதனம், ராமராஜனுடன் அம்மன் கோயில் வாசலிலே ஆகிய படங்களில் நடித்திருந்த சங்கீதா, 1996-ம் ஆண்டு, விஜயுடன் பூவே உனக்காக என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு காலம் மாறிப்போச்சு, கேப்டனுடன் அலெக்சாண்டர், பொங்கலோ பொங்கல், ரத்னா என பல வெற்றிப்படங்களில் நடித்தார்,

கடைசியாக, கடைசியாக 2000-ம் ஆண்டு கண்திறந்து பாரம்மா என்ற தமிழ் படத்தில் நடித்திருந்த சங்கீதா, அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகினார். 2014-ம் ஆண்டு மீண்டும் மலையாள படத்தில் களமிறங்கிய சங்கீதா, காளிதாஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சமீபத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். இதனிடையே அவள் விகடன் யூடியூப் சேனலில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய நடிகை சங்கீதா, 21 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அதன்பிறகு நான் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன்.

முதல் கர்ப்பம் எனக்கு மிஸ்ஃபுல்லாக இருந்தது. ஆனால் 2-வது அதே மாதிரி இருக்குமா என்று தெரியவில்லை. என் முதல் குழந்தை மீது எனது முழு அன்பும் பாசமும் இருக்கிறது. 2-வது கர்ப்பம் ஆனால் முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் ஆகிவிடுமா? 2-வது குழந்தைக்கும் முழுவதுமாக கவனித்துக்கொள்ள முடியாத நிலை வரும். இதுபோன்று பொதுவாக எல்லா பெண்களுக்கும் வரும் யோசனை தான் எனக்கும் வந்தது. அதனால் என்னை 2-வது குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாரும் வற்புறுத்தவில்லை.

எனது வீட்டிலும், கணவர் வீட்டிலும், நான் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படடார்கள். ஆனால், எனக்கு என்னமோ ஒருவருக்கு சின்சியராக இருந்தால், அப்படியே இருந்துவிட வேண்டும் என்று நினைத்து 2-வது குழந்தை பற்றி நான் யோசிக்கவில்லை என்று சங்கீதா கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்த சங்கீதாவின் கணவர் எஸ்.சரவணன், பூவே உனக்காக படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற சிலம்பாட்டம் படத்தின் இயக்குனரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பம், 3 தலைமுறை நடிகர்கள்; மூவரையும் வைத்து படம் தயாரித்த பிரபலம்: இந்த பன்முக கலைஞர் யார் தெரியுமா?சிவாஜி, பிர...
29/09/2025

ஒரே குடும்பம், 3 தலைமுறை நடிகர்கள்; மூவரையும் வைத்து படம் தயாரித்த பிரபலம்: இந்த பன்முக கலைஞர் யார் தெரியுமா?

சிவாஜி, பிரபு ஆகியோரின் தலா ஒரு படத்தை தயாரித்த இவர், விக்ரம் பிரபு நடிப்பில் 3 படங்களை தயாரித்துள்ளார், அந்த 3 படங்களும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

சினிமாவை பொறுத்தவரை ஒருவர் நடிகர் ஆகிவிட்டால், அடுத்து அவர் குடும்பத்தில் இருந்து நடிகர் நடிகைகள் வந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் முன்னணி நட்சத்திரங்களாக மாறும்போது, அந்த குடும்பத்து நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவருக்கும் வரும். அந்த வகையில், தெலுங்கில் வெளியான மனம் படத்தில் நாகேஷ்வர ராவ், நாகர்ஜூனா, நாக சைதன்யா ஆகிய 3 தலைமுறை நடிகர்களை வைத்து ஒரு படம் வெளியானது,

அதேபோல் தமிழில், விஜயகுமார் அவரது மகன் அருண் விஜய், அவரது பேரன் ஆகிய மூவரையும் இணைத்து, ஓ மை டாக் என்ற படம் வெளியானது. இந்த வரிசையில் இல்லை என்றாலும், சிவாஜி குடும்பத்தில் அவர், அவரது மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் நடிப்பில், படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் இருக்கிறார். இதில் சிவாஜி, பிரபு ஆகியோரின் தலா ஒரு படத்தை தயாரித்த இவர், விக்ரம் பிரபு நடிப்பில் 3 படங்களை தயாரித்துள்ளார், அந்த 3 படங்களும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

அந்த தயாரிப்பாளர் வேறு யாரும் இல்லை கலைப்புலி தாணு தான். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் இசையமைப்பாளர், பாடல்ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கலைப்புலி தாணு, கடந்த 1999-ம் ஆண்டு, மன்னவரு சின்னவரு என்ற படத்தை தயாரித்திருந்தார், இந்த படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜூன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவாஜிக்காக ஒரு பாடலையும் எழுதி பாடவைத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் எடுக்கப்பட்ட படம்.

அதன்பிறகு, 2009-ம் ஆண்டு கந்தசாமி என்ற படத்தை தயாரித்திருந்தார். விக்ரம் நாயகனாக நடித்த இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபு நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து, 2014-ம் ஆண்டு அரிமா நம்பி என்ற படத்தை தயாரித்தார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபுவின் மகனும் சிவாஜியின் பேரனுமான விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தான் அவரது திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த கமர்ஷியல் படம் என்று தாணு கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு 60 வயது மாநிறம், துப்பாக்கி முணை ஆகிய இரு படங்களை தாயரித்திருந்தார். இந்த இரு படங்களிலும் விக்ரம் பிரபு தான் ஹீரோ. இதில் 60 வயது மாநிறம் படம் விக்ரம் பிரபுவை ஒரு நடிகனாக நிலை நிறுத்திய நிலையில், துப்பாக்கி முணை திரைப்படம், ஒரு ஆகஷன் ஹீரோவாக அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. இதன் மூலம் ஒரே குடும்பத்தில் தாத்தா மகன் பேரன் ஆகிய மூவரையும் வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே படம்.. வெளியான பின் காத்திருந்த ட்விஸ்ட்..இன்று காமெடி கதாபாத்திரங்களில் வ...
29/09/2025

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே படம்.. வெளியான பின் காத்திருந்த ட்விஸ்ட்..

இன்று காமெடி கதாபாத்திரங்களில் வரும் பலரை திரைப்படங்களில் பார்க்கும் இளைஞர்கள் பலரும் அவர்கள் உண்மையாகவே நடிகர்கள் என்று நினைத்து கொள்கின்றனர். ஆனால் அப்படி நடிகர்களாக இருக்கும் பலரும் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பார்கள். அப்படி ஒரு பன்முக திறமை கொண்டவர் தான் ஆர். சுந்தர்ராஜன்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தமிழ் திரை உலகில் பல்வேறு அவதாரங்களில் இருந்தவர் சுந்தர்ராஜன். பெரும்பாலும் இவரை பலருக்கும் நடிகராக தெரிந்தாலும் ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பலரை இயக்கி உள்ளார் என்பது இந்த காலத்து பசங்களுக்கு தெரியாத விஷயம். ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

மோகன், பூர்ணிமா ஜெயராமன் நடித்த இந்த படத்திற்கு முதல் ஒரு வாரம் தியேட்டரில் ரசிகர்களை வரவில்லை. ஆனால் அதன் பின்னர் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், கவுண்டமணி காமெடி, உருக வைக்கும் கிளைமாக்ஸ் என இந்த படத்தின் தகவல்கள் ரசிகர்களுக்கு பரவியதை அடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதன் பிறகு ஆர். சுந்தர்ராஜன் ஏராளமான படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களும் நடித்தார்கள் ஆர் சுந்தரராஜனுக்கு திருப்புமுனையை கொடுத்த இன்னொரு படம் என்றால் அது ‘நான் பாடும் பாடல்’. சிவகுமார், அம்பிகா, மோகன் நடித்த இந்த படம் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று.

இதனையடுத்து அவரது இயக்கத்தில் ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் விஜயகாந்த்துக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

’வைதேகி காத்திருந்தாள்’ வெற்றியை அடுத்து ’அம்மன் கோவில் கிழக்காலே’ திரைப்படத்தை இயக்கிய ஆர் சுந்தர்ராஜன் ’மெல்ல திறந்தது கதவு’ ’தழுவாத கைகள்’ ’காலையும் நீயே மாலையும் நீயே’ ’என் ஜீவன் பாடுது’ போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில், அவர் ரஜினியுடன் முதல் முதலாக ராஜாதி ராஜா என்ற படத்தின் மூலம் இணைந்திருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் ஆக்சன் நடிகர் ரஜினிக்கும் காமெடி மற்றும் ரொமான்ஸ் படங்களை இயக்கிய ஆர் சுந்தரராஜனுக்கும் எப்படி பொருத்தம் ஆகும் என்று தான் ரசிகர்கள் சந்தேகப்பட்டனர். எனவே இந்த படம் பெரிய எதிர்பார்ப்பு இன்றி தான் வெளியானது. ஆனால் படம் வெளியானவுடன் சூப்பர் ஹிட்டானது. ரஜினியின் இரட்டை வேடம், காமெடி, இசைஞானி இளையராஜாவின் இசை, ஆர் சுந்தரராஜன் இயக்கம் என பல பிளஸ் பாயிண்ட்டுகள் இந்த படத்தில் இருந்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆனால் அதன் பிறகு ரஜினி படத்தை அவர் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜாதி ராஜா வெற்றியை அடுத்து ’தாலாட்டு பாடவா’ ’என்கிட்ட மோதாதே’ ’சாமி போட்ட முடிச்சு’ போன்ற படங்களை இயக்கினார். அதன் பின்னர் விஜயகாந்த் ரேவதி நடித்த ’என் ஆசை மச்சான்’ மற்றும் ’காந்தி பிறந்த மண்’ போன்ற படங்கள் சுமாரான வெற்றி தான் பெற்றது.

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே திரைப்படம் ’காலமெல்லாம் காத்திருப்பேன்’ தான். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

’காலமெல்லாம் காத்திருப்பேன்’ படத்தை அடுத்து பெரிய அளவில் படங்களை இயக்கவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து தான் அவர் ’சித்திரையில் நிலாச்சோறு’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் அதன் பின்னர் அவர் நடிப்பதில் பிஸியாகிவிட்டதால் திரைப்படங்கள் இயக்கவில்லை.

ஆர் சுந்தர்ராஜன் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். குணச்சித்திர வேடம், அப்பா வேடம், தாத்தா வேடம், காமெடி வேடம் என அவர் இன்றும் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் ’உன்னால் என்னால்’ ’80ஸ் பில்டப்’ உள்பட ஒரு சில படங்கள் வெளியானது.

ஆர். சுந்தரராஜன் இயக்கம் மட்டுமின்றி சில படங்களுக்கு கதை வசனம் எழுதி கொடுத்துள்ளார். விஜயகாந்த் நடித்த ’நானே ராஜா நானே மந்திரி’ மோகன் நடித்த ’இது ஒரு தொடர்கதை’ போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். மேலும் சில படங்களில் அவர் பாடல்கள் எழுதி உள்ளார்.

திரையுலகில் பல்வேறு சாதனைகள் செய்த ஆர் சுந்தர்ராஜன் சின்னத்திரை உலகில் தனது முத்திரையை பதித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ’கல்யாணமாம் கல்யாணம்’ என்ற திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்தார். இதன் பின்னர் ’கல்யாண வீடு’, ’சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரை உலகில் பல்வேறு சாதனை செய்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த ஆர் சுந்தரராஜன் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

நடித்த ஒரே தமிழ் படத்தில் விஜய்க்கு ஜோடி, 10 வயது இளையவரை திருமணம் செய்த நடிகை; பல கோடிக்கு அதிபதி!சினிமா ரசிகர்களால் நட...
29/09/2025

நடித்த ஒரே தமிழ் படத்தில் விஜய்க்கு ஜோடி, 10 வயது இளையவரை திருமணம் செய்த நடிகை; பல கோடிக்கு அதிபதி!

சினிமா ரசிகர்களால் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கொண்டாடப்படுகிறார்கள். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என நீங்கள் தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் என்று நினைத்தால் அது தவறு.

பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளும், தென்னிந்தியத் திரையுலகில் (டோலிவுட், கோலிவுட்) ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா போன்றோரும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக இருந்தாலும், இவர்களை விட திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட ஒரு நடிகை தான் அதிக சம்பளம் பெறுகிறார்.

சினிமா ரசிகர்களால் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கொண்டாடப்படுகிறார்கள். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என நீங்கள் தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் என்று நினைத்தால் அது தவறு.

ஒரு திரைப்படத்திற்கு ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கும் இந்த நடிகையே, கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகைகளில் ஒருவர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உலக அளவில் புகழ்பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல, முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ராதான்.

பாலிவுட்டில் கதாநாயகிகளின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றிய பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார்.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஒரு படத்திற்கு $5 மில்லியன் (சுமார் ரூ. 40 கோடி) வரை சம்பளம் பெறுகிறார். இருப்பினும், அவர் இந்திய படங்களில் நடிக்கும்போது, ஒரு படத்திற்கு ரூ. 14 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக அதே அறிக்கை குறிப்பிடுகிறது.

பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் எனப் பயணித்தாலும், அவரது சினிமாப் பயணத்தைத் தொடங்கியது தமிழ் சினிமாதான். அவர் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதுவே பிரியங்காவின் முதல் திரைப்படமாகும்.

அதன்பிறகு வரிசையாக இந்தி படங்களில் நடித்தார். ஹாலிவுட்டுக்கு சென்ற அவர், இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரியங்கா நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' மாபெரும் வெற்றி பெற்றது. இவர் தன்னைவிட வயதில் இளையவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார். இவர்களது திருமணம் உமைத் பவன் என்ற அரண்மனையில் நடைபெற்றது. தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என பிரியங்கா சோப்ரா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தனி கேரியரில் சாப்பாடு, தினமும் ரூ2000 சம்பளம்; தனது முதல் ஆசான் கமல் குறித்து மனம் திறந்த தீனா!வட சென்னை படத்தில் முக்க...
29/09/2025

தனி கேரியரில் சாப்பாடு, தினமும் ரூ2000 சம்பளம்; தனது முதல் ஆசான் கமல் குறித்து மனம் திறந்த தீனா!

வட சென்னை படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திய சாய் தீனா, தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படையாண்ட மாவீரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ரூ300 சம்பளம் பெற்றுக்கொண்டு ஜிம் பாயாக இருந்த என்னை அதிக சம்பளம் கொடுத்து தனி கேரியர் வைத்து சாப்பாடு கொடுத்தவர் கமல்ஹாசன். எனது ஆசான் அவர் தான் என்று நடிகர் சாய் தீனா உருக்கமாக பேசியுள்ளார்.

ரயில்வேதுறையில் வேலை பார்த்து வந்த சாய் தீனா, அதன்பிறகு, திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது தான் நடிகர் கமல்ஹாசன், தான் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்த விருமாண்டி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். ஜெயிலில் வார்டனாக தீனா நடித்த இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு, புதுப்பேட்டை, தலைநகரம், எந்திரன், ராஜா ராணி, கொம்பன், தெறி, மெர்சல் என முன்னணி நடிகர்களில் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தீனா, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் என வெற்றிப்படங்களில் நடித்துள்ள தீனா, சில படங்களில் காமெடி வில்லனாகவும் நடித்துள்ளார். அதேபோல் வட சென்னை படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திய சாய் தீனா, தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படையாண்ட மாவீரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் சில படங்கள், இந்தியில் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீனா, தனது திரையுலக அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், சினிமாவுக்கு என் முதல் ஆசான், கமல் சார் தான். அவர் தான் சினிமா என்றால் என்ன? நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவர். அந்த படத்தில் 3 மாதங்கள் நடித்தேன். இதில் 20-30 நாட்கள் கமல்சாருடன் தான் நடித்திருந்தேன். சாதாரண ஒரு ஜூனியர் நடிகர் ஜிம்பாய் என்று இல்லாமல், அவன் ஒரு ஆர்டிஸ்ட் என்ற மரியதை கொடுத்தவர்.

ஜூனியர் ஆர்டிஸ்ட் அனைவரும் லைனில் நின்று சாப்பிடுவார்கள். ஆனால் நான் நடிகன் ஆகிவிட்டேன் என்று சொன்ன கமல் சார் எனக்கு தனியாக கேரியர் கொடுக்க சொன்னார், தினமும் என் தோலில் கைபோட்டு பேசிக்கொண்டே இருக்கார். எனது அங்கிள் கமல் சாரின் நெருங்கிய நண்பர் அவரை பற்றியும், ஸ்டண்ட் பற்றியும் நிறைய பேசுவார். அங்கிருந்து தான் எனக்கு ஒரு ஸ்பார்க் ஸ்டார்ட் ஆச்சு. வேலைக்கு போகிறோம் 200-300 கிடைக்குது சாப்பிடுகிறோம் என்று இருந்தேன்.

முதல்முறையாக ஒரு நாளைக்கு ரூ2000 சம்பளம் கொடுத்து நடிப்பு என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்து, நீ நடிக்க வா என்று அழைத்தவர் கமல் சார் தான். வேலையும் கொடுத்து அதற்கான பயிற்சியும் கொடுத்தவர் என்று தீனா கூறியுள்ளார்.

வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் வெளிச்சத்துக்கு வந்த விஜயகாந்த்சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த விஜயகாந்துக்கு இனிக்கும் இளமை...
28/09/2025

வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் வெளிச்சத்துக்கு வந்த விஜயகாந்த்

சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த விஜயகாந்துக்கு இனிக்கும் இளமை படத்தின் மூலமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜயகாந்த் எதிர்பார்த்த வரவேற்பை அப்படத்தில் பெறவில்லை.

அடுத்ததாக அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் படங்களின் கதாசிரியரான ஆர். செல்வராஜ் அகல் விளக்கு என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பளித்தார். அவருக்கு ஜோடியாக ஷோபா நடித்தார். இந்தப் படத்தில்தான் பிரபல பாடலான 'ஏதோ நினைவுகள்' பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தப் படத்திற்கும் எதிர்மறையான விமர்சனங்களே வந்ததால், படம் வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக, சாமந்திப்பூ, நீரோட்டம் ஆகிய படங்கள் வந்தன. அவை பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்குப் பிறகு, கே. விஜயனின் இயக்கத்தில் 'தூரத்து இடி முழக்கம்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார் விஜயகாந்த். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி.

விஜயகாந்த் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கவனம், இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்தது. 1981ஆம் ஆண்டின் "இந்தியன் பனோரமா"வில் திரையிடப்பட்ட 21 படங்களில் இந்தப் படமும் ஒன்றாக அமைந்தது.

புதுமுக இயக்குநரான எஸ்.ஏ. சந்திரசேகர், 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்ற தனது முதல் படம் சரியாகப் போகாத நிலையில் தனது அடுத்த படத்தை ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக உருவாக்க நினைத்தார். அந்தப் படம், சட்டம் ஒரு இருட்டறை. கோபக்கார பழிவாங்கும் இளைஞனாக இதில் விஜயகாந்த் நடித்தார். படம் மிகப் பெரிய ஹிட்

1987இல் விஜயகாந்த் நடித்து வெளிவந்த உழவன் மகன் திரைப்படம், விஜயகாந்த்திற்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது. அந்த ஆண்டு த...
28/09/2025

1987இல் விஜயகாந்த் நடித்து வெளிவந்த உழவன் மகன் திரைப்படம், விஜயகாந்த்திற்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது. அந்த ஆண்டு தீபாவளிக்கு உழவன் மகன் திரைப்படத்தோடு, விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு விளையாட்டு, ரஜினிகாந்த் நடித்த மனிதன், கமல் நடித்த நாயகன் ஆகிய படங்களும் வெளியாகின.

இதில் ரஜினி, கமல் படங்களுக்கு இணையாக வசூலைக் குவித்தது உழவன் மகன்.

இதில் உங்களுக்கு பிடித்த படம் எது எங்கே பார்த்தீர்கள்.

ஆக்ஷனில் கலக்கிய ரஜினியின் எமோஷனல் பக்கத்தை வெளிக்காட்டிய FeelGood படம்கொஞ்சம் அர்ஜுன் ரெட்டி, கொஞ்சம் ஆட்டோ கிராப், ...
27/09/2025

ஆக்ஷனில் கலக்கிய ரஜினியின் எமோஷனல் பக்கத்தை வெளிக்காட்டிய FeelGood படம்

கொஞ்சம் அர்ஜுன் ரெட்டி, கொஞ்சம் ஆட்டோ கிராப், 96 ஆகிய படங்களின் காட்சிகள் சேர்ந்து ரஜினி நடிப்பில் 43 ஆண்டுகளுக்கு முன்பே காதல் கலந்த Feel Good திரைப்படமாக புதுக்கவிதை வெளியாகி கல்ட் கிளாசிக்காக இருந்து வருகிறது. ரஜினிகாந்த் - எஸ்பி முத்துராமன் கூட்டணியின் மற்றொரு ஹிட் படமாக இந்தப் படம் உள்ளது.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான நா நின்னா மறையலரே என்ற படத்தின் ரீமேக்காக உருவான படம்தான் புதுக்கவிதை. பைக்ரேசராக அடவாடி கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினி, ஜோதி மீது காதல் வயப்பட்டு அவரது தாயின் சூழ்ச்சியால் பிரிவதும், பின்னர் கிளைமாக்ஸில் சேருவதும்தான் படத்தின் ஒன் லைன்.

ஆண்களுக்கான Mood Swing எப்படி இருக்கும் என காட்டிய அர்ஜுன் ரெட்டி, காதலில் தோல்வியுற்ற ஹீரோ குடிபழக்கத்துக்கு அடிமையாகி இன்னொரு பெண் மூலம் தன்னை மீட்டு எடுக்கும் ஆட்டோகிராப், காதலித்த பெண்ணை அவள் திருமணமான பிறகு சந்தித்து பீலிங்ஸை கொட்டும் 96 என ட்ரெண்ட் செட்டர் படங்களாக அமைந்த ஒட்டு மொத்த ரெபரன்ஸும் கொட்டி கிடக்கும் படமாக புதுக்கவிதை உள்ளது.

இந்த படத்தை புதிதாக பார்ப்பவர்களுக்கு மேற்கூறியது படங்கள் மட்டுமில்லாமல், மேலும் சில ஹிட் தமிழ் சினிமாக்களின் கதையுடன் ஒத்துப்போவதை தவிர்க்க முடியாது என்றே உறுதியாக கூறலாம்.

பைக் ரேஸராக அறிமுகமாகி தனது ஸ்டைலில் அடாவடி நடிப்பை வெளிப்படுத்தும் ரஜினிகாந்த், போக போக காதல் ரசம் சொட்டும் நபராக மாறி அபார நடிப்பில் விருந்து படைத்திருப்பார். புற்றுநோயால் இறந்து போன நடிகை ஜோதி கதையின் நாயகியாக, ரஜினிக்கு ஈடுகொடுக்கும் விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

முரட்டுகாளை, கழுகு, ராணுவ வீரன், போக்கிரி ராஜா என ரஜினியை வைத்து தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களை இயக்கி வந்தார் எஸ்.பி. முத்துராமன். இடையில் நெற்றிக்கண் என்ற வித்தியாசமான கதையை இயக்கியிருந்தாலும், அதில் ரஜினியை ஒரு கதாபாத்திரம் நெகடிவ் ஷேடில் இருந்தது.

இதனால் ஆறிலிருந்து அறுபதுவரை படத்தை போல் ரஜினியின் நடிப்பு திறமை வெளிகொண்டு வரும் விதமாக புதுக்கவிதை படத்தை உருவாக்கினார். அதே சமயம் ரஜினியின் ரசிகர்களை கவரும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகளையும் வைத்து சமரசம் செய்திருப்பார். இந்த படம் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ரஜினியின் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது.

இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெறும் வெள்ளை புறா ஒன்று, வா வா வசந்தமே பாடல்கள் காலத்தில் அழியாமல் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களாக உள்ளன.

ரஜினியை முழுக்க முழுக்க எமோஷனலை வெளிப்படுத்தும் ஹீரோவாகவே காட்டியிருப்பார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். இவர்கள் இருவர் கூட்டணியில் வெளி வந்த Feel Good படமாக புதுக்கவிதை அமைந்தது.

படம் ப்ளாப் என்ற ரசிகர்கள்...ஒரு வாரம் ரஜினியின் மெனக்கெடல்...பின் நடந்தது மேஜிக்..அபூர்வ ராகங்கள் படத்தின் மூலதம் சினிம...
27/09/2025

படம் ப்ளாப் என்ற ரசிகர்கள்...ஒரு வாரம் ரஜினியின் மெனக்கெடல்...பின் நடந்தது மேஜிக்..

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலதம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். இன்று 160 படங்களுக்கும் மேல் நடித்து இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். ரஜினி என்றால் அவரது ஸ்டைல்தான். செண்டிமெண்ட் , ஆக்‌ஷன் என எல்லா காட்சிகளிலும் ரசிகர்கள் பார்ப்பது அவரை ஸ்டைலைதான். ஒரு சில படங்களில் ரஜினி தனது வழக்கமான நடிப்பில் இருந்து விலகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் அளித்து நடித்துள்ளார். அந்த வகையில் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படம் ரஜினிக்குள் இருக்கும் ஒரு தேர்ந்த நடிகரை வெளியேகொண்டு வந்த படங்களில் ஒன்று. இந்த படம் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்

முள்ளும் மலரும் படம் பற்றி ஜான் மகேந்திரன்

1978 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கி ரஜினி நடித்த திரைப்படம் முள்ளும் மலரும். தமிழ் சினிமாவில் எல்லா காலமும் கொண்டாடும் கிளாசிக் படங்கள் வரிசையில் இந்த படம் இருந்து வருகிறது. இந்த பட பற்றி ஜான் மகேந்திரன் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் அவர் " முள்ளும் மலரும் படம் வெளியானபோது அது தோல்விப்படம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரையும் சிக்ரெட் பிடிப்பது , தலைமுடியை எடுத்துவிடுவது என ரஜினியை ஸ்டைலாக பார்த்த ரசிகர்கள் கை இல்லாமல் ரஜினியை பார்த்ததும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது அப்பா கொஞ்சம் உடைந்து போய்விட்டார்.

அப்போதுதான் ரஜினி சார் எந்த படப்பிடிப்பு இருந்தாலும் தினமும் இரவு எங்கள் வீட்டிற்கு வருவார். அவரது பைக் ஹெட்லைட் அப்பா இருக்கும் அறையின் மேல் அடிக்கும். இருவரும் கிளம்பி வெளியே செல்வார்கள். பின்னிரவில் ரஜினி அப்பாவை வந்து டிராப் செய்வார். காலை ஆழ்வார்பேட்டையில் கோயிலுக்கு போய்விட்டு அப்பாவை வந்து பார்ப்பார். ஒரு நடிகர் தான் மதித்த இயக்குநர் எடுத்த படம் சரியாக போகவில்லை அதனால் அவர் துவண்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஒரு வாரம் அப்பாவை இரவும் காலையும் வந்து பார்த்துவிட்டு சென்றார். ஒரு வாரம் கழித்து ஃபேமிலி ஆடியன்ஸ் உள்ளே வந்து முள்ளும் மலர் படத்தை கொண்டாடினார்கள். அதுவரை ரஜினி சார் என் மகேந்திரன் என்கிற இயக்குநருக்கு தோள் கொடுத்து நின்றார். " என தெரிவித்துள்ளார்.

டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது; இந்த சாதனை நாயகன் யா...
27/09/2025

டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது; இந்த சாதனை நாயகன் யார்?

முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை வென்ற சாதனை இயக்குநர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 1974-ஆம் ஆண்டு இயக்குநர் அவதார் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘27 டவுன்’. காலத்தால் அழியாத காவியமான இந்த படைப்பு இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படைப்பாகவே உள்ளது.

இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. மேலும், இந்திய சினிமாவில் ஒரு மையில்கல்லாகத் திகழ்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் அவதார் கிருஷ்ணா கவுலின் நிஜ வாழ்க்கையும் இந்த படத்தை போலவே மனதை தொடும் கதையாக உள்ளது.

அதாவது, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஃபதேக்கடல் பகுதியில் செப்டம்பர் 27, 1939 அன்று பிறந்த அவதார் கிருஷ்ணா கவுல். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பல நிதி தொடர்பான சவால்களை எதிர்கொண்டார்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவதார் கிருஷ்ணா கவுல் தனது தந்தையால் வீட்டிலிருந்து வெறியேற்றப்பட்டார். பின்னர், ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு தேநீர் கடையில் வேலை செய்தார். தொடர்ந்து, அம்பாலாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை தேடினார்.

இவர் வேலை செய்து கொண்டே அவரது கல்வியையும் தொடர்ந்தார். திறந்தவெளிப் பள்ளி மூலம் பட்டப்படிப்பை முடித்த அவதார் கிருஷ்ணா கவுலுக்கு வெளியுறவு அமைச்சகத்தில் வேலை கிடைத்தது. இந்த சாதாரண அரசு வேலை அவருக்கு அமெரிக்காவில் பணியமர்த்தப்படும் வாய்ப்பை வழங்கியது.

அவர் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து திரைப்படத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து தன் தேவைகளுக்கு ஏற்றபடி பல்வேறு சிறிய வேலைகளை செய்தார். அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிரிட்டிஷ் தகவல் சேவைகள் போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்களிலும் வேலை செய்தார்.

இயக்குநர் அவதார் கிருஷ்ணா கவுல், அமெரிக்காவில் ஆன்னை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி கடந்த 1970 -இல் இந்தியா திரும்பியது. இதையடுத்து மிக குறுகிய காலத்தில் அவதார் கிருஷ்ணா கவுல் புகழ்பெற்ற மெர்ச்சன்ட் ஐவரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் பாம்பே டாக்கி திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.

இந்த அனுபவம் அவருக்கு திரைப்பட தயாரிப்பை கற்றுக் கொடுத்தது மற்றும் அவர் இயக்குநராக அறிமுகமாகுவதற்கு அவரை தயார்படுத்தியது. இதையடுத்து, கடந்த 1974-ஆம் ஆண்டு அவர் எழுதி, இயக்கி, தயாரித்த ’ 27 டவுன்’ திரைப்படம் வெளியானது.

கடமைக்கும் ஆசைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

Address

Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kowsalya Tamizhachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share