WIM southchennainorthdistrict

WIM southchennainorthdistrict �பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை�

20/08/2026
20/08/2026
இன்று 19/7/2026 SDPI கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக ஆலந்தூர் மாவட்ட அலுவலகதில் கட்சியின் மகளிர் அணியா...
19/08/2026

இன்று 19/7/2026 SDPI கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக ஆலந்தூர் மாவட்ட அலுவலகதில் கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) ன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது தென் சென்னை வடக்கு மாவட்டத்தின் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விவரங்கள் …..

மாவட்டத் தலைவர் : சல்மா
மாவட்ட பொதுச் செயலாளர் : சமீரா
மாவட்டச் செயலாளர் : புவனேஸ்வரி
மாவட்டத் துணைச் செயலாளர்: சாக்கிரா
மாவட்ட பொருளாளர் : நிஷா
மாவட்ட செயற்குழு உறுப்பினர்: ரஷ்யா

தமிழ்நாடு YOUNG DEMOCRATS முதல் மாநில செயற்குழு கூட்டம்.மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் தலைமையில் திரு...
13/08/2026

தமிழ்நாடு YOUNG DEMOCRATS முதல் மாநில செயற்குழு கூட்டம்.
மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இணை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தாஹா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களும் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி அவர்களும் YOUNG DEMOCRATS தேசிய இணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் ஹஸ்ஸான் பைஜி மற்றும் அனீப் கான் ஆகியோரும் கலந்து கொண்டு புதிய மாநில நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கினர்.

தீர்மானங்கள்

1) தமிழ்நாடு YOUNG DEMOCRATS மாநில நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாட்டில் இளைஞர்களின் குரலை ஜனநாயக ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாநில நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கிய SDPI மாநில நிர்வாகத்திற்கும், YOUNG DEMOCRATS தேசிய நிர்வாகத்திற்கும் இம்மாநில குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களின் அடிப்படையில் செயல்பட மாநில நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

2) அனைத்து மாவட்டங்களிலும் YOUNG DEMOCRATS மாவட்ட குழுக்கள் அமைத்தல்

தமிழ்நாடு முழுவதும் YOUNG DEMOCRATS அமைப்பை அடித்தள அளவில் வலுப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும்
செப்டம்பர் மாதத்திற்குள் மாவட்ட குழுக்களை அமைத்து, அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என இம்மாநில குழு தீர்மானிக்கிறது.

3) NEET தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் மாணவர்களின் கல்வி உரிமை, சமூகநீதி மற்றும் மாநிலத்தின் தனித்துவமான கல்வி முறையை கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான NEET தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இம்மாநில குழு வலியுறுத்துகிறது.

4) தமிழக பட்ஜெட்டில் கடந்த நிதியாண்டை விடவும் இம்முறை கணிசமான அளவிற்கு பள்ளி மற்றும் உயர்கல்விக்கான நொய்தி ஒதுக்கீடு குறைந்திருப்பது கண்டனத்திற்குறியது. உடனடியாக கூடுதல் நிதியை ஒதுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது.

5) போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படவேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக இம்மாநில குழு கவலை தெரிவிக்கிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழும் புகார்களை அரசு தீவிரமாகக் கண்காணித்து, சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றிலுமாக தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு யங் டெமாக்ரேட்ஸ் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் பயாஸ் முஹம்மது, முஹம்மது பர்ணாஸ்

மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் அப்துல் பாசித், அஷேன் அலி, ஆஷாத், அஜீஷா, அப்துல் ரஹ்மான், முஹம்மது அர்பயீன், வழக்கறிஞர் அசாருதீன் முஹம்மது ரபீக், ஷேக் நதீம், தவுபீக் உமர், தப்ரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக இணை ஒருங்கிணைப்பாளர் A.சமிரா நன்றி கூறினார்.

"International Youth Day" உலக இளைஞர்கள்  தினமான ஆகஸ்ட் 12-ல் தனது முதல் மாநில செயற்குழுவை திருச்சி மாநகரில் கூட்டுகிறது....
11/08/2026

"International Youth Day" உலக இளைஞர்கள் தினமான ஆகஸ்ட் 12-ல் தனது முதல் மாநில செயற்குழுவை திருச்சி மாநகரில் கூட்டுகிறது.
தமிழ் நாடு Young Democrats

இளையோனே வா நீதிக்கா ஒன்றாய் பயணப்படுவோம் பலப்படுவோம்,

நீட் தேர்வை முற்றிலும் தடை செய், கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு கொண்டு வா என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மா...
27/07/2026

நீட் தேர்வை முற்றிலும் தடை செய், கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு கொண்டு வா என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாக, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று (ஜூலை 26) நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் யங் டெமாக்ரடிக் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக் தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஃபிர்னாஸ், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் அசேன் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் ஏராளமான யங் டெமாக்ரட்டிக் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

Address

Chennai
600088

Alerts

Be the first to know and let us send you an email when WIM southchennainorthdistrict posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share