26/06/2016
நம்மை அகதியாக்க தான் ஜல்லிக்கட்டு தடையா? அ...
தமிழர்கள் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர்கள். அதில் மிக முக்கியமானதுஜல்லிக்கட்டு.
காளையை அடக்கும் இப்போட்டிக்கு கடந்த சில வருடங்களாக தடை போடப்பட்டுள்ளது. இந்த தடையை நீட்டிக்க வேண்டும் என பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருபவர் ஹிப்ஹாப் தமிழா.
ஒரு காளையை தழுவும்போது, அந்த காளை எல்லாவற்றையும் தாண்டி ஒரு 50 அடி தூரம் சென்றுவிட்டால் அந்த காளைக்கு வீரியம் அதிகம் என்று கூறி அதை இனப்பெருக்கத்திற்கு அனுப்புவார்கள். தோற்றுப்போன காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கு தடை கோருபவர்கள் யாரென்று கேட்டால், நிறைய பேர் அரசாங்கம் என்று கூறுகிறார்கள். உண்மையில், தமிழக அரசாங்கம் இன்று மட்டுமல்ல, என்றைக்கும் ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. இதற்கு தடை கோருபவர்கள் நிறைய தனியார் அமைப்புகள்தான். அதில் பல பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
கிரிக்கெட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கிரிக்கெட் நிபுணர்களிடம் கேட்கிறோம். கால் பந்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த விளையாட்டை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கிறோம். ஆக, ஜல்லிக்கட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், மாடு வளர்க்கிறவர்களிடம் கேட்கவேண்டும், மாடு பிடிப்பவர்களிடம் கேட்கவேண்டும்.
10 வருடத்திற்கு முன்பு சுமார் 9 லட்சம் காளைகள் இருந்தது. இப்போது சுமார் 60 ஆயிரம் காளைகள்தான் இருக்கிறது. இனி 3 வருடத்தில் என்னாகும். இதற்கு முக்கியமான காரணம் நமது அறியாமையால்தான் இது அழிந்துகொண்டு வருகிறது. இது நமது அடையாளம். அடையாளத்தை இழந்தால் நமது தாய்நாட்டில் நாம் அகதிகளாகத்தான் வாழவேண்டும். கண்டிப்பாக சிந்திப்போம்..! செயல்படுவோம்..! என்று கூறி முடித்துள்ளார்.
இசையமைப்பாளரான இவர் தற்போது ஜல்லிக்கட்டின் பெருமையை விளக்கும் விதமாக டக்கரு டக்கரு என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
https://youtu.be/no8-RcTP2rs
A Difference Of Opinion Production Tamizhanda Movement Initiative Credits Direction - Devesh Jeyachandran, Sreekanth & Hiphop Tamizha Conceptualised - Hiphop...