KOVAI GREEN MEDIA

KOVAI GREEN MEDIA கோவையின் செய்திகள்

கோவை மாநகர் மாவட்டம்-கடை வீதி பகுதி 2  இளைஞரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள லே.மு. தன்சில் ரஹ்மான் அவர்களுக்கு   ...
28/04/2025

கோவை மாநகர் மாவட்டம்-கடை வீதி பகுதி 2 இளைஞரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள லே.மு. தன்சில் ரஹ்மான் அவர்களுக்கு பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் .

KOVAI GREEN MEDIA




DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam

*கோவையில் ஈத் பெருநாள் தொழுகை* ரம்ஜான் பெருநாள் தொழுகை கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் பள்ளிவாசல...
31/03/2025

*கோவையில் ஈத் பெருநாள் தொழுகை*

ரம்ஜான் பெருநாள் தொழுகை கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்றது. ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் தொழுகையில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர் .

அதைத்தொடர்ந்து ஜமாத் நிர்வாகிகள் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கோவில்குருக்கள், மற்றும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கோயில் வளாகத்தில் சிறுவர்கள் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
18/01/2025

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

19/09/2024

HMR Hotel



*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அல்ஹாஜ் M. அப்துல் ரஹ...
20/08/2024

*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்!

வல்ல இறைவனின் நல்லருள் நம் யாவருக்கும் உரித்தாகட்டும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் மிக நேர்மையுடனும், எந்த நிர்பந்தங்கள் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமலும், வக்பு சட்டப்படி பணிகளாற்றுவதில் எந்த சமரசம் காட்டாமலும், இறையச்சமிக்க
வாழ்வே மிக உயர்ந்தது என்ற உறுதிப்பாட்டுடனும் பணிகள் ஆற்றி வந்திருக்கிறோம்.

இந்த உறுதிப்பாட்டில் நிலைத்திருக்க பல சவால்களையும், விமர்சனங்களையும் சந்திக்கவேண்டும் என்பதும் யதார்த்தம். இது எல்லா தரப்பினருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான்.

ஆனாலும் சமூகப் பொறுப்புகளோடு ஆற்றிவரும் கடமைகளில் இன்னும் அதிக உழைப்பும், ஈடுபாடும், சமுதாய நலன் சார்ந்த அந்த அர்ப்பணிப்பு பணி அவசியத்தேவை. அது காலத்தின் கட்டாயம் என்பதை ஆழ்ந்த கவனத்தில்கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையின் ஒப்புதலோடும், வழிகாட்டுதலோடும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு 19/08/2024 மாலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளேன்.

மிகச் சிறப்பான ஆட்சிக்குத் தனி அடையாளமாய்த் திகழும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பணிகளுக்கு என்றும் துணைநிற்போம்; மக்களுக்குப் பணிகளாற்றுவதில் சவால்களையும் தாண்டி சாதனைகள் புரிவோம்.

இன்ஷா அல்லாஹ்.

செவ்வனே பணிகளாற்ற ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கிய தமிழ்நாடு அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மாண்புமிகு துறை அமைச்சர் மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கும், வாரிய அலுவலர்களுக்கும், பல்வேறு வக்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.

எம். அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu

IUML Tamil Nadu State
Indian Union Muslim League - Kerala State








KOVAI GREEN MEDIA

02/08/2024

முஸ்லிம் லீக் white guard (WG) வாயநாடு நிலசரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்தோடு இணைந்து களப்பணி

மீட்பு பணிகளில் முழு வீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும், தொண்டர்களும்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பேரி...
01/08/2024

மீட்பு பணிகளில் முழு வீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும், தொண்டர்களும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பேரிடர் மீட்புப் பணி குழுவினர் களத்தில் (ஒயிட் கார்ட்ஸ் - White Guards).

இறந்தோர் உடலை கண்டெடுத்து நல்லடக்க பணிகளில் முஸ்லிம் லீகினர்.

வயநாட்டை நோக்கி ஏராளமான வாகனங்களில் முஸ்லிம் லீகின் நிவாரண உதவிகள்.

பாதிக்கப்பட்டோரின் மறு வாழ்விற்கான பணிகளை முன்னெடுக்கும் முஸ்லிம் லீக்.

முஸ்லிம் லீக் சார்பு அமைப்பான KMCC சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு பேருதவி.

24/03/2024

ராமநாதபுரம் வெற்றி வேட்பாளர்

காரியாபட்டியில்

நமது வெற்றி வேட்பாளர் கே.நவாஸ்கனியை

#ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்து 💚

சின்னவர்🖤❤ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரப்புரை

Udhayanidh #ஏணி Stalin

K.Navas Kani Kanimozhi Karunanidhi

31/01/2024

ஆல் இந்தியா கே எம் சி சி சார்பாக (AIKMCC)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75வது பவள விழா ஆண்டை முன்னிட்டு

அனைத்து சமூகத்தினருக்குமான வறிய நிலை மக்களின் திருமண கனவுகளை நிறைவேற்றும் வண்ணமாக

கோவை NSK திருமண மண்டபத்தில் இரு மனங்கள் இணையும் திருமண விழா நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. நடைபெற உள்ளது.




All India KMCC

*கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு*➖️➖️➖️➖️⤵️➖️➖️➖️➖️*கோவை மாவட்டம் மேட்டுப்பாள...
10/01/2024

*கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு*
➖️➖️➖️➖️⤵️➖️➖️➖️➖️
*கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவில், அறங்காவலர் குழு தலைவராக தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார்*.

*கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் ஐந்து பேர் அண்மையில் நியமிக்கப்பட்டனர். கோவை சாய்பாபா காலனி எம்.எம்.ராமசாமி, காரமடை தேவ் ஆனந்த், மத்வராயபுரம் கார்த்திகேயன், கவுண்டம்பாளையம் சுஜாதா, காரமடை மேடூர் குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரில் ஒருவரை, அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்க 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறாத நிலையில், அதற்கான அவகாசம் முடிந்த நிலையில், தலைவரை தேர்ந்தெடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன் படி காரமடையை சேர்ந்த தேவ் ஆனந்தை தலைவராக நியமித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இன்று காரமடை அரங்கநாதர் கோவில் அலுவலகத்தில் தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார். அவருக்கு கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கருணாநிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உடன் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் இருந்தார். இந்நிகழ்ச்சியில் காரமடை நகராட்சி தலைவர் உஷா, அட்மா சங்க தலைவர் சுரேந்திரன், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்*.
🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚

மிக்ஜாம் புயல் நிவாரண பணிஇ.யூ.முஸ்லிம் லீக் தென்சென்னை  மாவட்ட செயலாளர் பனைக்குளம் அபூபக்கர் ஒருங்கிணைப்பில் நிவாரண மற்ற...
07/12/2023

மிக்ஜாம் புயல் நிவாரண பணி

இ.யூ.முஸ்லிம் லீக் தென்சென்னை மாவட்ட செயலாளர் பனைக்குளம் அபூபக்கர் ஒருங்கிணைப்பில் நிவாரண மற்றும் மீட்பு பணி

பத்திரிகை அறிக்கை 18/09/23மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங...
18/09/2023

பத்திரிகை அறிக்கை 18/09/23

மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2023-2026) தேர்தல்
மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெய்தூன் சிக்னேச்சர் ஹோட்டலில் 16-09-2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

அல்ஹாஜ்,முஹம்மது இக்பால் BABL மற்றும் அல்ஹாஜ். மசூது ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு முறையாகவும் திறம்படவும் தேர்தலை நடத்தி கீழ்காணும் பதவிகளுக்கு உறுப்பினர்கள் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

சேர்மன்- அல்ஹாஜ். அஹமது தம்பி
தலைவர்- அல்ஹாஜ் . முஹம்மது ரபீக்
செயலாளர்- அல்ஹாஜ். மின்னூர் சலீம்
பொருளாளர்- அல்ஹாஜ்.சமீர்
துணைத்தலைவர்- அல்ஹாஜ். லேனா இஷாக் துணைச் செயலாளர்- அல்ஹாஜ். அப்துல் ஹக்கீம்

நிர்வாக் குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றவர்கள்: அல்ஹாஜ். அப்துல் ஹக்கீம்
அல்ஹாஜ். தமீம் அன்சாரி
அல்ஹாஜா. பாத்திமா முஸபர்
அல்ஹாஜ்.மஹ்மூத் மரைக்கார் மற்றும்
அல்ஹாஜ். மசூது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுக்குழு மற்றும் தேர்தலில் கலந்துக்கொண்ட மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் நிறுவனங்கள் விபரம் பின்வருமாறு

1,தீன் ஹஜ் சர்வீஸ்.

2,ரிச்வே டூர்ஸ் & டிராவல்ஸ்.

3,சலீம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

4, அல்-நூர் ஹஜ்சர்விஸ் (இந்தியா)பிரைவேட் லிமிடெட்

5, அல் ஹரமைன் ஹஜ் சர்வீஸ் ( பி ) லிட்

6,பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ்.

7,கலந்தர் ஹஜ் ட்ராவல்ஸ்.

8, அல் அமானத் ஹஜ் சர்வீஸ் இந்தியா)பிரைவேட் லிமிடெட்

9,ஷா ஹஜ் சர்வீஸ் இந்தியா பி)லிட்

10, அல்ஹுதா ஹஜ் சர்வீஸ் (பி)லிட்

11,ஸலாமத் ஹஜ் சர்வீஸ்.

12,அப்சல் ஹஜ் டூர்ஸ் & டிராவல்ஸ்.

13,மில்லத் ஹஜ் சர்வீஸ்.

14, அல்ஹுஸாம் டிராவல் & டூர்ஸ் இந்தியா பி லிமிடெட்

15,திருச்சி சன் சைன் ஹஜ் சர்வீஸ்.

16,அல் மதீனா ஹஜ் சர்வீஸ்.

17, அல் மிஸ் பாஹ் ஹஜ் உம்ரா சர்வீஸ்.

18, அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸஸ் (பி) லிமிடெட்

19,அல் சபா ஹஜ் சர்வீஸ்.

20,புஷ்ரா ஹஜ் சர்வீஸ்.

21, அல் தாஜ் ஹஜ் சர்வீஸ்

22 அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் (பி) லிட்,

23, பிளைவேஸ் ட்ராவல்ஸ்

24, H.M டிராவல்ஸ்

25,தாஜ் ஹஜ் சர்வீஸ் டூர்ஸ் & டிராவல்ஸ்

26, பினாரங் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்

27,பரக்கத் ஹஜ் சர்வீஸ்.

28,அல் அலீப் ஹஜ் சர்வீஸ்.

29,முபாரக் ஹஜ்& உம்ரா சர்வீஸ்.

30, ஜஹ்ரத் மக்கா ஹஜ் சர்வீஸ்.

31,மர்வா ஹஜ் சர்வீஸ்.

32, சவுத் ஆசியன் ஹஜ் & உம்ரா சர்வீசஸ்

33, SMK ஹஜ் சர்வீஸ்.

34,அல் மீசாப் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.

35,டால்ஃபின் ஏர் சர்வீஸ்.

36,அஹமத் வேர்ல்ட் டிராவல்ஸ் டூர்ஸ் & கார்கோ.

37,தைபா ஹஜ் சர்வீஸ்.

38,ரிஸ்வான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.

39,நாகூர் ஷரீஃப் ஹஜ் சர்வீஸ்.

40,அல் பதுர் ஹஜ் சர்வீஸ்.

41,அல் மாஸ் ஹஜ் உம்ரா குரூப் சர்வீஸ்.

42,அல் மக்கா ஹஜ் சர்வீஸ் மதுரை.

43, அல் ஃமாமூர் ஹஜ் .

44,நெஸ்ட் ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸ்.

45, தக்பீர் ஹஜ் சர்வீஸ்

46, அல் மக்கா ஹஜ் சர்வீஸ். சென்னை.

47,மக்கா ஜாபர் டூர்ஸ் & டிராவல்ஸ்.

ஆகியோர் மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.

Address

Coimbatore
641001

Telephone

+919363159911

Website

Alerts

Be the first to know and let us send you an email when KOVAI GREEN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share