Covai Chronicle

Covai Chronicle A Coimbatore-based News Platform that reports positive things happening in the second largest city in Tamil Nadu !

ஆர்.எஸ்.புரம் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வுகோவை, 30 அக்டோபர் 2025கோவை ஆர்.எஸ்.புரம...
30/10/2025

ஆர்.எஸ்.புரம் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை, 30 அக்டோபர் 2025

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி பன்னடுக்கு வாகன நிறுத்தம் ( மல்டி லெவல் கார் பார்க்கிங்) அமைந்துள்ளது. ரூ.40.78 கோடி மதிப்பில் 2.87 ஏக்கர் நிலத்தில் 370 கார்கள் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு 2022 ஆகஸ்ட் மாதம் திறக்கப்படடது. செயல்பாட்டில் இருந்தாலும் இந்த வளாகம் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த வளாகத்தை இன்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ். இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெண்ணின் வயிற்றில் இருந்த 7½ கிலோ கட்டியை அகற்றி கோவை ராயல் கேர் மருத்துவர்கள் சாதனை!நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயத...
30/10/2025

பெண்ணின் வயிற்றில் இருந்த 7½ கிலோ கட்டியை அகற்றி கோவை ராயல் கேர் மருத்துவர்கள் சாதனை!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் வயிறு அழற்சி காரணமாக அவதிப்பட்டு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அடையவில்லை. பின்னர், அவர் நோய் தீர்விற்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்கள் அவரை முழுமையாக பரிசோதித்து, தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டனர். அனைத்து புற்றுநோய் குறியீடுகள் (Tumour Markers) இயல்பாக இருந்தன. தொடர்ந்து எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனையில், வயிற்றுப் சுமார் 28 x 26 x 17 செ.மீ அளவுடைய மிகப்பெரிய 7.5 கிலோ கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த மிகப்பெரிய கட்டியை அகற்றுவதற்காக சிறப்பு மருத்துவர்கள் — டாக்டர் மணிகண்டன் (புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்), டாக்டர் வினோதா (மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர்), டாக்டர் முத்துகுமார் (மயக்கவியல் நிபுணர்), டாக்டர் அன்னபூரணி (பெதாலஜி நிபுணர்) ஆகியோர் குழுவாக இணைந்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர்.

அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது; எந்தவித தொந்தரவும் இன்றி கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. கட்டி புற்றுநோய் தன்மை கொண்டதா என்பதை உறுதிப்படுத்த, ஆய்வக பரிசோதனை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது மேற்கொள்ளப்பட்ட ஃப்ரோஸன் செக்ஷன் (Frozen Section) பரிசோதனையில், அது கருப்பை புற்றுநோய் அல்லாத கட்டி (Uterine Leiomyoma) என உறுதி செய்யப்பட்டது.

வெற்றிகரமான அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நோயாளி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.

இது குறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தெரிவித்ததாவது:

“பெண்களில் வயிற்று வலி, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும். குறிப்பாக, 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் காலத்தில் சினைப்பை அல்லது கருப்பை கட்டிகள் உருவாகக்கூடும்."

"இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவுடன், உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, இத்தகைய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்,” என்றார்.

இன்றைய தங்கம் விலை நிலவரம் எப்படி? - 30.10.25தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,100 ஆகவும் ...
30/10/2025

இன்றைய தங்கம் விலை நிலவரம் எப்படி? - 30.10.25

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,100 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.88,800 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ. 1,800 குறைந்துள்ளது.

18 காரட் தங்கம் 1 கிராம் ரூ. 9,260 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.74,080 ஆகவும் உள்ளது. இதன் 1 பவுன் விலை நேற்றை விட இன்று ரூ.1520 ஆக உள்ளது.

சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.12,109 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.96,872 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ.1968 குறைந்துள்ளது.

இது ஜி.எஸ்.டி. போன்ற வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலை.

சிறுதுளியால் சிறிது சிறிதாக பசுமையாக மாற்றம் காணும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகம் கோவை, 29 அக்டோபர் 2025கோவை மாநக...
29/10/2025

சிறுதுளியால் சிறிது சிறிதாக பசுமையாக மாற்றம் காணும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகம்

கோவை, 29 அக்டோபர் 2025

கோவை மாநகரில் தினமும் 1100 முதல் 1200 டன் அளவிற்கு குப்பைகள் உருவாகின்றன. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பல வருடங்களாக கோவை மாநகரில் உருவான குப்பைகள் அங்கு ஏற்கனவே டன் கணக்கில் மலைபோல குவிந்துள்ளன. கோவை மாநகராட்சி எடுத்துள்ள முயற்சியால் 2020 முதல் 2024 வரை குப்பைக்கிடங்கு வளாகத்தில் பழைய குப்பைகள் மேலாண்மை செய்யப்பட்டு, 55 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இன்னும் பெருமளவில் குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதலில், பசுமை அமைப்பான சிறுதுளி சார்பில் மீட்கப்பட்ட நிலப்பரப்பில் 10,000 த்துக்கும் அதிகமான மரங்கன்றுகள் 6 மாதங்கள் முன்பு நடப்பட்டது. இப்போது அவை வளர்ந்து, அந்த இடத்தை சற்று பசுமையாகி உள்ளது.

சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு கோவை, 29 அக...
29/10/2025

சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை, 29 அக்டோபர் 2025

பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்திட மாநகராட்சி அலுவலர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

காலை நேரங்களில் வீடுகளுக்கே வந்து குப்பைகளை வாங்கிக்கொள்ள மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கூட இரவு நேரங்களில் இல்லத்தரசிகள் நைசாக குப்பைகளை எடுத்து வந்து முன்னர் குப்பைத்தொட்டிகள் இருந்த இடத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இல்லையென்றால் காலையில் குடும்பத்தலைவர்களிடம் கொடுத்து, போகும் போக்கில் வீசிவிட்டு சென்றுவிடுங்கள் என கூறுகின்றனர்.

இதையெல்லாம் தடுக்கும் வகையில் கோவை மாநகரின் பல இடங்களில் குப்பைகள் குவியும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மாநகராட்சியால் பொருத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண்.54-க்குட்பட்ட இந்திரா நகர் கார்டன் மற்றும் இராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை கண்ட ஆணையர் குப்பைகளை உடனடியாக அகற்றிடவும், இதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்திடவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வார்டு எண்.54-க்குட்பட்ட காமராஜர் சாலை, ஜோதி நகர் பிரதான சாலை பகுதியில் சேதமடைந்த கால்வாயினை ஆணையர் நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய திட்ட அறிக்கையினை தயார் செய்ய தொடர்புடைய பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

மீண்டும் ஒரு ஆண் யானை கோவையில் உயிரிழப்பு! உண்மை காரணத்தை கண்டறிய வனத்துறை தீவிரம் ...கோவை, 29 அக்டோபர் 2025கடந்த வாரம் ...
29/10/2025

மீண்டும் ஒரு ஆண் யானை கோவையில் உயிரிழப்பு! உண்மை காரணத்தை கண்டறிய வனத்துறை தீவிரம் ...

கோவை, 29 அக்டோபர் 2025

கடந்த வாரம் வியாழக்கிழமை (23.10.25) கோவை தொண்டாமுத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட மின் கம்பத்தை முட்டிய 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை, மின் கம்பியை தொட்டதால் உயிரிழந்துள்ளது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சும்மா 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்பு காட்டை ஒட்டியுள்ள பகுதியில் அகழியை (நீண்ட பள்ளம்) தாண்டி விவசாய தோட்டத்தினுள் நுழைய முயன்றது. அப்போது தோட்டத்தை சுற்றி போடப்பட்டுள்ள சோலார் மின் வேலியை அறுத்து விட்டு செல்ல இயலாமல் மீண்டும் அகழிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்த காரணத்தால் யானை தடுமாறி அகழிக்குள் விழுந்து இறந்ததா என வனத்துறை மருத்துவ குழுவினரின் முழுமையான ஆய்விற்கு பின்னர் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் ரயிலில் மோதி ஏற்படும் விபத்துகளை குறைக்க நல்ல படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் அது தடுக்கப்பட்டுள்ளது என தகவல் வரும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மற்றொரு பக்கம் வனத்திலிருந்து உணவு தேடி வரும் யானைகள் இதுபோல ஏதோ ஒரு சம்பவத்தில் உயிரிழந்து போவது சோகத்தை ஏற்படுத்துகிறது. வனத்தில் யானைக்கான உணவுகள் இல்லாத சூழல் தீர்ந்து, யானைகள் இறப்பு குறைய வேண்டும் என எதிர்பார்ப்போம்.

கோவை மாநகரில் தானாகவே தெருவிளக்குகள் எரிய, அணைய கட்டமைப்பை ரூ. 2 கோடி மதிப்பில் மேம்படுத்த மாநகராட்சி திட்டம்!கோவை, 29 அ...
29/10/2025

கோவை மாநகரில் தானாகவே தெருவிளக்குகள் எரிய, அணைய கட்டமைப்பை ரூ. 2 கோடி மதிப்பில் மேம்படுத்த மாநகராட்சி திட்டம்!

கோவை, 29 அக்டோபர் 2025

மாலை, இரவு நேரங்களில் கோவை மாநகரில் உள்ள தெருவிளக்குகள் தக்க நேரத்தில் எரிய துவங்கினால் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பல இடங்களில் நேரத்திற்கு விளக்குகள் எரிகின்றன என்றாலும் சில இடங்களில் தெருவிளக்குகளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் பாக்ஸை யாரவது ஆன் செய்தால் தான் எரியும் நிலை உள்ளது.

கோவை மாநகரில் 52,000 தெரு விளக்குகளை 3,563 மின்சார கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் மாநகராட்சி இயக்கி வருகிறது. இந்த 3,563 கட்டுப்பாடு அமைப்புகளில் 3,130 அமைப்புகள் தானாக இயங்கக்கூடியவையாக உள்ளது. 433 அமைப்புகள் மட்டும் மனித செயல்பாட்டை நம்பி உள்ளது.

இவற்றையும் தானியங்கி முறைக்கு மாற்றம் திட்டத்தை மாநகராட்சி முன்னெடுக்க உள்ளது. ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் இதை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மருதமலையின் மலைப்பாதையில் குடும்பத்துடன் கூட்டமாக வந்த காட்டு யானை!கோவை, 29 அக்டோபர் 2025 கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல ...
29/10/2025

மருதமலையின் மலைப்பாதையில் குடும்பத்துடன் கூட்டமாக வந்த காட்டு யானை!

கோவை, 29 அக்டோபர் 2025

கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல 700 படிக்கட்டுகள் கொண்ட பாதை ஒன்றும், மலை சாலை மார்கமாக செல்ல ஒரு வழியும் உள்ளது.சமீபத்தில் மருதமலை மலைச் சாலையில் ஒரு காட்டு யானை கூட்டம் பரபரப்பாக குட்டிகளுடன் சென்றுள்ளது.

இதை அங்கு வந்த சிலர் மொபைலில் படம்பிடித்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளிவந்த யானைகள் மனிதர்கள் குரல் கேட்டதும் வனப்பகுதிக்கே சென்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை அதிகரிப்பு!கோவை, 29 அக்டோபர் 2025தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,210 ஆகவும் ...
29/10/2025

தங்கம் விலை அதிகரிப்பு!

கோவை, 29 அக்டோபர் 2025

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,210 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.89,680 ஆகவும் உள்ளது. நேற்றை விட இன்று பவுன் விலை ரூ.1,080 அதிகரித்துள்ளது.

18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,350 ஆகவும் அதன் 1 பவுன் ரூ. 74,800 ஆகவும் உள்ளது. 18 காரட்டின் 1 பவுன் ரூ.1,200 அதிகரித்துள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.12,229 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.97,832 ஆகவும் உள்ளது. இதன் பவுன் விலை ரூ.1,176 அதிகரித்துள்ளது.

இவை ஜி.எஸ்.டி. போன்ற வரி மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலை.

கோவையில் நாளை 30.10.25 இங்கெல்லாம் மின் தடை கோவை, 29 அக்டோபர் 2025மாதாந்திர பராமரிப்பு பணிகள் கோவை மாநகரில் உள்ள 1 துணை ...
29/10/2025

கோவையில் நாளை 30.10.25 இங்கெல்லாம் மின் தடை

கோவை, 29 அக்டோபர் 2025

மாதாந்திர பராமரிப்பு பணிகள் கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை மேற்கொள்ளப்படவுள்ளதால் கீழ் காணும் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்

குறிச்சி துணை மின் நிலையம்: சிட்கோ, சுந்தராபுரம், போத்தனுார், ஈச்சனாரி, குறிச்சி, எ.ஐ.சி.,காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் தொகையை 5 ஆண்டுகளாக வழங்காத நிறுவனம் மேல் அதிரடி நடவடிக்கை எடுத்த தீர்ப்பாயம்! கோவை, 28 அ...
28/10/2025

பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் தொகையை 5 ஆண்டுகளாக வழங்காத நிறுவனம் மேல் அதிரடி நடவடிக்கை எடுத்த தீர்ப்பாயம்!

கோவை, 28 அக்டோபர் 2025

கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1 கோடியே 23 லட்சம் இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிறுவனம், தீர்ப்பாயம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அந்த தொகையை வட்டியுடன் கொடுக்க உறுதியளித்துள்ளது.

வெங்கடேசன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கியதில், அவரது 2 கால்களின் செயல்பாடுகளும் முடங்கின. அவர் யுனைட்டட் இண்டியா இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் 3ஆம் நபர் காப்பீடு எடுத்திருந்த நிலையில், அதனை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்சூரன்ஸ் தொகையை 5 ஆண்டுகளாக வழங்காத யுனைட்டட் இண்டியா இன்ஸூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தீர்ப்பாய அதிகாரி ஜப்தி நடவடிக்கைக்காக சென்றபோது, நாளைக்குள் காப்பீட்டுத் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிடுவதாக காப்பீட்டு நிறுவனம் கடிதம் வழங்கியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Covai Chronicle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Covai Chronicle:

Share