08/09/2016
கோவை 03.09.16
சுயலாபத்திற்காக நீதிமன்றங்களில் தடையாணை பெறும் முதல்வர் ஜெயலலிதா சிறுவாணி பிரச்சினையில் கேரளஅரசின் நடவடிக்கைக்கு எதிராக ஏன் தடையாணை பெற முயற்சிக்கவில்லை என கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும், அணை கட்டும்கேரள அரசை கண்டித்தும், மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் திமுக சார்பில் கோவை கொடிசியாமைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமைதாங்கினார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கோவை,திருப்பூர் ,ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கிடைக்கும்தண்ணீர் சிறுவாணியில் அணைகட்டப்பட்டல் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார். சிறுவாணியின் குறுக்கே கேரளஅரசு அணை கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கைகளை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கல் வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதாகவும், அதிமுக எம்.பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் பாடல்கள் பாடுவது மட்டுமேவேலையாக இருப்பதாகவும் தெரிவித்தார். சிறுவாணி பிரச்சினைக்காக தமிழக அரசு அனைத்து கட்சிதலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும் எனவும், முதல்வர் அழைத்தால்திமுக வரத்தயார் எனவும் அவர் தெரிவித்தார். முதல்வர் வராவிட்டாலும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும்பொருப்பாளர்கள் தலைமையில் டெல்லி செல்ல தயார் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் சட்டமன்றத்தில்தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு மெத்தனமாக தமிழக அரசு இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும்கொங்கு மண்டலத்தின் முக்கிய கோரிக்கையான அத்திகடவு அவினாசி திட்டத்தினை மாநில அரசிடம் உள்ள நிதியைகொண்டே செயல்படுத்த முடியும் என தெரிவித்த அவர், ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் அரசு காலம்தாழ்த்தி வருகின்றது எனவும் குற்றம்சாட்டினார். காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பாலாறு போன்றபிரச்சினைகளில் அந்த மாநில முதல்வர்களுடம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் பேசுவதில்லை என தெரிவித்தஅவர், அண்டை மாநில அரசுகளுடன் ஜெயலலிதா நல்லுறவை வளர்க்கவில்லை எனவும் தெரிவித்தார். அண்டைமாநில முதல்வர்களும் நல்லுறவு வைத்துக்கொள்ளாமல் இருக்கும் ஜெயலலிதா ஆட்சி செய்வது சுயநலத்திற்காகவும்,அவருடன் இருக்கும் குடும்பத்தினரின் நலனுக்காகவுமே என தெரிவித்தார். சொத்துகுவிப்பு வழக்கு, மக்கள்நலப்பணியாளர்கள் வழக்கு ,சமச்சீர் திட்டத்திற்கு எதிரான வழக்கு போன்ற சுயலாபத்திற்கான விசயங்களில் நீதிமன்றம்சென்று தடையாணை வாங்கும் ஜெயலலிதா , சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்குதடையாணை வாங்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் கேள்வி எழுப்பினார். அணை கட்ட வழங்கியஅனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும்ஸ்டாலின் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கனோர்கலந்து கொண்டனர்.
www.coimbatoretimes.com Team