17/09/2025
பிரண்டை தொக்கு
4.75 கிலோ இருப்பு உள்ளது
தற்போது நமது அங்காடியில் முற்றிலும் வீடு முறைப்படி செக்கில் ஆடிய நல்லெண்ணெய்யில் இயற்கையான மூலப்பொருள்கள் மூலம் விளைந்த பொருள்களை கொண்டு தயாரானது.
பிரண்டை தொக்கு செய்முறை:
இயற்கையாக விளைந்த பிரண்டை உடைய கொழுந்து, மரசெக்குநல்லெண்ணைய்,மலைப்பூண்டு,உப்பு, கடுகு,மலைபுளி, வெந்தயம்,நாட்டு மிளகாய் கொண்டு இரும்பு சட்டியில் செய்த பிரண்டை தொக்கு மற்றும் ஊறுகாய் ஆடரின் பெயரில் குறைந்த அளவோ அல்லது மொத்தாகவோ கிடைக்கும்.
ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் வரை அதிக அளவு அல்லது கிடைக்கும், அதன் பிறகு பிரண்டை தளிர் விடாது அதனால் செய்வது கடினம் .
இதுபோல் வல்லாரை தொக்கு மற்றும் நார்தை ஊறுகாய்யும் கிடைக்கும்.
நன்மைகள்:
சுவையின்மையை போக்கி பசியை தூண்டும்.
பிரண்டை வயிற்றுவலி ,வாயு தொல்லை போன்றவற்றை குறைய செய்யும் .
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்,இதயம் பலப்படும்.
இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.
வயிற்று பெருமல்,சிறுகுடல் மற்றும் பெருங்குடல் புண்களை நீக்கி,நல்ல பசி உண்டாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்ப்படும் முதுகு வலி ,இடுப்பு வலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
பிரண்டை உடம்பில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்,
பிரன்டையில்கல்சியம் அதிகமாக உள்ளது ,இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது ,எனவே கால்சியம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் உணவில் அதிகமாக சேர்து கொள்ளலாம் ,கால்சியம் மாத்திரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
மற்ற பயன்கள்
மெலிந்த உடல் குண்டாக
ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.
ரத்த ஓட்டம் சீராகும்
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751