13/09/2025
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகரக் காவல் துறை மற்றும் சாலை பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் ஆகியவை இணைந்து, கோவையில் மிகப்பெரிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரமான 'நான் உயிர் காவலன்' - ஐ துவக்கி வைக்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தையும் அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையை சனிக்கிழமை (13.9.2025) கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிமுகம் செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் மலர்விழி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
| | | |