03/09/2025
அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய மூலிகை புத்தகம்.
510 மூலிகைகளின் தெளிவான குணம்,(குணப்பாடம்) வண்ண புகைப்படம்,அனைத்து தகவல்களும் அடங்கி உள்ள நூல் ஐந்து பாகம் கொண்டது.
*மூலிகை பெயர்,பொட்டனிகல் பெயர்,அதன் வகைப்பாட்டியல்,வழக்கு பெயர்,சங்ககால பெயர்,வளர் இயல்பு, பயன்படும் பாகம்,
*ஆங்கில பெயர் மற்றும் இந்திய மொழிகளில் மூலிகையின் பெயர்,
*மூலிகையின் பண்புகளான -வளரும் இயல்பு,வளரும் இடம்,இலை,பூ,காய் ,கனி,விதை அமைப்பு,பூக்கும் பருவம்,காய்க்கும் பருவம்,அதன் பரவியிருக்கும் வாழ்விடம்.
*மூலிகையின் ஒவ்வொரு பாகத்தின் உடைய சுவை,தன்மை(சூடு ,குளிர்ச்சி, வாயு).
*மேலும் மூலிகையின் பாகத்தை எடுத்து கொண்டால் அதனால் ஏற்ப்படும் உடல் செய்கை (உடம்பில் ஏற்படும் மாற்றம்) அனைத்தும் பின்வருமாறு
நச்சுமுறிவு,குளிர்ச்சி,மலமிலக்கி, குடல்புழுவகற்றி,துவர்பி,உரமாக்கி,பித்தநீர்பெருக்கி,வீக்கமுருக்கி,வெப்பமுண்டாக்கி,உமிழ்நீர் பெருக்கி,தடிப்புண்டாக கி,உடற்றேற்றி,பசிதூண்டி,ஆண்மைபெருக்கி,சூலக உரமாக்கி,சூலக வெப்பகற்றி,உள்ளழலாற்றி,கோழையகற்றி,வறட்சியகற்றி,குருதிப்பெருக்கி,உறக்கமுண்டாக்கி,உறக்கமெழுப்பி,குருதிபோக்குஅடக்கி,நீர்பெருக்கி,தாபமகற்றி,வலிநிவாரணி,உணர்சியகற்றி,வியர்வைபெருக்கி,பித்தசமனி,வாந்தியுண்டாக்கி,நீர்மலம்போக்கி,அகட்டுவாய்வகற்றி,தாதுவெப்பகற்றி,நாற்றமகற்றி,புண்ணழுக்கற்றி,குமட்டலெழுப்பி,செரிப்புண்டாக்கி,ருதுவுண்டாக்கி,இசிவகற்றி,பால்பெருக்கி,வாதமடக்கி,முத்தோடமகற்றி,செந்நீரிளக்கி,நச்சரி,மலநீராக்கி,வாந்தியுண்டாக்கி,குடல்புரட்டி,சிறுதுவர்ப்பி,,பால்சுருக்கி,பெருமலம்போக்கி,தடிப்புண்டாக்கி,வழுவழுப்பு,முத்தோடமகற்றி,அழுகலகற்றி,தொத்துப்புழுவகற்றி,சிறுநீர்குறைபடப்பெருக்கி,
தெளிவாக விளக்கி உள்ளனர்.
மேலும்
மூலிகையின் பயன்படும் பாகம்-பாடல் உடன்,விளக்கம்,பயன்கள்,மருந்துசெய்முறை,சுத்திமுறை,உபயோகிக்கும் முறை,மூலிகையால் ஏற்படும் பக்கவிளைவுகள் என பல தகவல்களையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக எழுதி தொகுத்து நூல் ஆசிரியர் அவர்களின் இந்த அளப்பரிய முயற்சி நாம் அனைவரும் போற்ற தகுந்தது.
எடுத்துகாட்டாக அரிசிக்கு(நெல்) 46 பக்கத்திற்கு மேல் விளக்கமுள்ளது.
இவ்வளவு கட்டுக்கு அடங்காத தகவல்கள் ஒரு புத்தகமாக சுருக்கிவிடாமல் ஐந்து பாகங்களாக தரமான காகிதம் கொண்டு அச்சில் ஏற்றி, வரும் தலைமுறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,பள்ளி,கல்லூரி,மருத்துவ மாணவர்கள் என அனைவருக்கும் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் நூலை வெளியிட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அங்காடி
9486072414(whatsup)
சதுரகிரி அழகேசன்