Village Oorvalam

Village Oorvalam பயணம் ஒன்றே பல இதயங்களை இணைக்கும் வழி. இணைந்து வாருங்கள் இதயங்களே, தொடர்ந்து பயணிக்கலாம் ❤❤❤
(2)

✨ இயற்கையின் பேரதிசயம்… மின்மினிப் பூச்சி! 🪲ஒரு காலத்தில் மாலை இருட்டத் தொடங்கிவிட்டாலே, கிராமங்களில் பெரிய மரங்களின் இர...
09/09/2026

✨ இயற்கையின் பேரதிசயம்… மின்மினிப் பூச்சி! 🪲

ஒரு காலத்தில் மாலை இருட்டத் தொடங்கிவிட்டாலே, கிராமங்களில் பெரிய மரங்களின் இருட்டுக்குள் ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் மின்னிக்கொண்டிருக்கும்.

வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக பறக்கும் அவற்றைப் பிடிக்க ஓடிய சிறுவயது கைகள் ஏராளம்… ❤️

ஆனால் இன்றோ… விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட மின்மினிப் பூச்சிகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. 😔

எனது நல்ல நேரமோ… அல்லது உங்கள் நல்ல நேரமோ தெரியவில்லை! 😊 நேற்று என் கண்ணில் பட்டது இந்த அழகான மின்மினிப் பூச்சி. 🥰

அதன் உயிருக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில், இந்த அழகை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ❤️

உங்கள் சிறுவயது நினைவுகளிலும் இந்த மின்மினிப் பூச்சிகள் இருந்தால்… அந்த நினைவுகளை எங்களோடு பகிருங்கள்!

🌊 2024 டிசம்பர்… மறக்க முடியாத தென்பெண்ணை ஆற்று வெள்ளம்!விழுப்புரம் பிடாகம் மேம்பாலத்தைத் தொட்டுக்கொண்டு பாய்ந்த தென்பெண...
08/09/2026

🌊 2024 டிசம்பர்… மறக்க முடியாத தென்பெண்ணை ஆற்று வெள்ளம்!

விழுப்புரம் பிடாகம் மேம்பாலத்தைத் தொட்டுக்கொண்டு பாய்ந்த தென்பெண்ணை ஆற்று வெள்ளம்… 🌊😰

இந்த வெள்ளத்தால் ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து இயல்பு வாழ்க்கையே முடங்கியது.

குறிப்பாக அரசூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. வீடுகள், சாலைகள் என பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்த அந்த காட்சிகள் இன்றும் நினைவில் நிற்கின்றன. 😔

இன்று இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, அந்த நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையும் நினைவுக்கு வருகிறது.

#2024

🍎 எங்கள் சிறுவயதில் கிடைத்த ஆப்பிள் இதுதான்! ❤️🌿சிறுவயதில் கிராமத்து வேலிகளில் தானாக விளைந்து கிடந்த கோவைப் பழம்தான் எங்...
08/09/2026

🍎 எங்கள் சிறுவயதில் கிடைத்த ஆப்பிள் இதுதான்! ❤️🌿

சிறுவயதில் கிராமத்து வேலிகளில் தானாக விளைந்து கிடந்த கோவைப் பழம்தான் எங்களுக்கான ஆப்பிள்! 😍

வேலியோரம் காய்ந்து பழுத்துக் கிடக்கும் கோவைப் பழங்களை பறித்து, அப்படியே சாப்பிட்ட அந்த நாட்கள்… அந்த சுவையும், அந்த சந்தோஷமும் இன்றும் மறக்க முடியாதவை! 🥹❤️

அந்த காலத்தில் காசு கொடுத்து வாங்கிய உணவுகளைவிட, வேலியோரத்திலும், விவசாய தோட்டங்களிலும் இலவசமாக கிடைத்த பழங்கள்தான் எங்களுக்கு விருந்து! 😋🌿

உங்களுக்கும் சிறுவயதில் கோவைப் பழம் சாப்பிட்ட நினைவுகள் இருக்கிறதா? 👇❤️

08/09/2026

"யாமிருக்க பயமேன்" ஓம் முருகா 🙏

குரும்பையனார் கோயில், கருக்கை கிராமம்
08/09/2026

குரும்பையனார் கோயில், கருக்கை கிராமம்

🍬 இது சாப்பிடும் உணவு என்றால் நம்ப முடிகிறதா..? 😍இதில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சாப்பிட வேண்டும்! 😋 (பிளேட் ஐ த...
08/09/2026

🍬 இது சாப்பிடும் உணவு என்றால் நம்ப முடிகிறதா..? 😍

இதில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சாப்பிட வேண்டும்! 😋 (பிளேட் ஐ தவிர 😀)

பார்ப்பதற்கு வேறு ஏதோ ஒரு பொருள் போல இருக்கிறது… ஆனால் உண்மையில் இது ஒரு சுவையான இனிப்பு! 🤩

பார்க்கும்போதே சாப்பிடணும்னு தோணுதே..!இது என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்..?🙏
07/09/2026

பார்க்கும்போதே சாப்பிடணும்னு தோணுதே..!
இது என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்..?🙏

💧 கடலூர் மாவட்டத்து செம்மண் பூமியின் தண்ணீருக்கு அப்படி ஒரு சுவை! ❤️கடலூர் மாவட்டம் என்றாலே ஒரு தனிச்சிறப்பு… அதிலும் இந...
07/09/2026

💧 கடலூர் மாவட்டத்து செம்மண் பூமியின் தண்ணீருக்கு அப்படி ஒரு சுவை! ❤️

கடலூர் மாவட்டம் என்றாலே ஒரு தனிச்சிறப்பு… அதிலும் இந்த செம்மண் பூமியில் விளையும் அனைத்துமே தனி அழகுதான்! 🌱

அதேபோல இந்த மண்ணின் அடியில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீருக்கும் ஒரு தனி சுவை இருக்கிறது. 💧😋

இன்றைக்கு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீரின் சுவையைக்கூட, இந்த தண்ணீரின் முன் ஒப்பிடவே முடியாது. 😂

குடித்த பிறகும் நாவில் தங்கும் அந்த சுவையின் ஈர்ப்பு… அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்! ❤️

📍 கடலூரிலிருந்து நடுவீரப்பட்டு செல்லும் சாலையில், கொடுக்கன்பாளையம் கிராமம்.

இந்த பகுதியின் தண்ணீரை நீங்கள் குடித்திருக்கிறீர்களா? அந்த சுவை எப்படி இருந்தது? 💧👇

📻 டேப் ரெக்கார்டர்… ஒரு காலத்தில் இசைக்கருவி மட்டுமல்ல, ஒரு நண்பன்! ❤️சமீபத்தில் பண்ருட்டியில் ஒரு டெய்லர் கடைக்குச் சென...
07/09/2026

📻 டேப் ரெக்கார்டர்… ஒரு காலத்தில் இசைக்கருவி மட்டுமல்ல, ஒரு நண்பன்! ❤️

சமீபத்தில் பண்ருட்டியில் ஒரு டெய்லர் கடைக்குச் சென்றபோது, கண்ணில் பட்டது இந்த பழைய டேப் ரெக்கார்டர்.

அந்த காலத்தில் டெய்லர் கடை, டீ கடை, பட்டறை என வேலை செய்யும் இடங்களில் இப்படிப்பட்ட டேப் ரெக்கார்டர்கள் ஒரு முக்கியமான துணையாக இருந்திருக்கிறது. 🎶

கையில் வேலை ஓடிக்கொண்டிருக்க… பின்னணியில் பிடித்த பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.
வேலைப்பளுவும் தெரியாது… நேரம் போவதும் தெரியாது! 🙂

இப்போது ஒரு சின்ன மெமரி கார்டில் ஆயிரக்கணக்கான பாடல்கள்.
ஆனால் அன்று ஒரு கேசட்டை தேயத் தேயக் கேட்ட அந்த பாடல்களோடு சேர்ந்த நினைவுகள் மட்டும் இன்றும் தேயாது ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது! 🥹❤️

இந்த டேப் ரெக்கார்டரை பார்த்ததும் உங்களுக்கு நினைவுக்கு வரும் பாடல் எது? 🎶👇

#டேப்ரெக்கார்டர்

07/09/2026

அந்த கால நினைவுகள்..❤️

Address

Cuddalore

Alerts

Be the first to know and let us send you an email when Village Oorvalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Oorvalam:

Shortcuts

Share