நம்ம கடலூர் - Our Cuddalore

நம்ம கடலூர் - Our Cuddalore

உங்கள் நட்புக்கள், உறவுகள் நம் குழுவில் இணைய...
Link to join:

https://chat.whatsapp.com/DCKNBL3ghic9bvxZUDGkLi

Follow the நம்ம கடலூர்-Our Cuddalore channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaCpKzB7j6g95tqpF30Q

_*இப்படி ஒரு திட்டமா...? கடலூருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - என்ன திட்டம் தெரியுமா ?*_கடலுார் மாநகராட்சி சார்பில் 8.63 கோடி...
07/05/2025

_*இப்படி ஒரு திட்டமா...? கடலூருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - என்ன திட்டம் தெரியுமா ?*_

கடலுார் மாநகராட்சி சார்பில் 8.63 கோடி ரூபாய் மதிப்பில் மீன் அருங்காட்சியகம், தேவனாம்பட்டிணம் பீச்சில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணி தொடங்கியது.

*8.63 கோடி ரூபாய் மதிப்பில் மீன் அருங்காட்சியகம்*
கடலுார் மாநகராட்சி சார்பில் 8.63 கோடி ரூபாய் மதிப்பில் மீன் அருங்காட்சியகம், தேவனாம்பட்டிணம் பீச்சில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்.பி., விஷ்ணுபிரசாத், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: கடலுார் சுப்பராயலு பூங்காவில் பல்வேறு மீன் வகைகளை பார்வையிடவும், தேவனாம்பட்டிணம் பீச்சில் பொழுதுபோக்கு சிறப்பம்சங்களுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சுப்புராயலு பூங்காவில் பொதுமக்கள் வருகையை அதிகரிக்கவும், சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்கவும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடக்கிறது.

சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு, வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் 4.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், அழகிய நடைபாதை உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

*4 கோடி ரூபாய் மதிப்பில் வாட்ச் டவர்*
நீலக்கொடி திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பில் வாட்ச் டவர், மணல் சுத்தம் செய்யும் இயந்திரம், ஜாகிங் டிராக், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். துணை மேயர் தாமரைச்செல்வன், செயற்பொறியாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.

*மீன் அருங்காட்சியகம்*
மீன் அருங்காட்சியகம் என்பது மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய தகவல்களை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது மீன் வகைகளை காட்சிப்படுத்துவது.

*இப்படி ஒரு குட் நியூஸ்ஹா..? கடலூருக்கு இப்படி ஒரு விடியலா? - என்ன திட்டம் தெரியுமா ?*கடலூர் மாநகரில் பிரதான பேருந்து நி...
26/04/2025

*இப்படி ஒரு குட் நியூஸ்ஹா..? கடலூருக்கு இப்படி ஒரு விடியலா? - என்ன திட்டம் தெரியுமா ?*

கடலூர் மாநகரில் பிரதான பேருந்து நிலையம், லாரன்ஸ்ரோடு பகுதியில் முதற்கட்ட மின்கேபிள் புதைக்கும் பணிக்கு அரசு 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

மின்கேபிள் புதைக்கும் பணி - 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கடலூர் மாவட்டம், கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்கள், துணை மின் நிலையத்திற்கு வரும் உயர்மின் கோபுரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தின் தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தலைமை செயலகத்திற்கு கூட தகவல் தெரிவிக்க மின்சாரம் இல்லாமல் அரசு அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடலூர் மாவட்டமே தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. இந்த மின்தடையால் ஏற்பட்ட பாதிப்பு அரசுக்கு ஒரு பாடமாக இருந்தது. எதிர் காலத்தில் புயல், மழை, சுனாமி போன்ற பேரிடர் நிகழ்வின் போது மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிடக்கூடாது என கருதி புதை வடமின்கேபிள் அமைக்க வேண்டும் என அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. பேரிடரில் அடிக்கடி பாதிக்கப்படுகிற மாவட்ட தலைநகரங்களில் புதைவட கேபிள் போட முடிவு செய்யப்பட்டது.

ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது
உலக வங்கி உதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடலூர் மாநகரம் மட்டும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் 2018ம் ஆண்டு கடலூர் மாநகரில் 2 கட்டமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலோர கிராமங்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கேபிள் போடப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட 2, 3 பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சேர்த்து 490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதில் கிட்டதட்ட 245 கோடி கடலூர் மாவட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ABP Nadu.

தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடையில் கற்றல் கொண்டாட்டம் - நம்ம கடலூரில்...
26/04/2025

தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடையில் கற்றல் கொண்டாட்டம் - நம்ம கடலூரில்...

Eye camp at Cuddalore today
26/04/2025

Eye camp at Cuddalore today

தினசரி செய்திகள் - இன்று...
24/01/2025

தினசரி செய்திகள் - இன்று...

வடலூர் தைப்பூசம் பற்றிய நோட்டீஸ்...
24/01/2025

வடலூர் தைப்பூசம் பற்றிய நோட்டீஸ்...

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக...
24/01/2025

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்

*அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், கடலூர்* சுவாமி சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர்....
04/10/2024

*அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், கடலூர்*

சுவாமி சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர். உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படா அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் - அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார்.3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலி பீட பிரதிஷ;டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.

_வேப்பெண்ணெய் மருந்து:_
வேப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாடாற்றி ஐயன் அருள் மருந்தாகிய விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள் கட்டிகள் முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும் மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக்கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ் வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது.இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.

_குழந்தைக்கு காப்பிடுதல்:_
பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்கு பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேசம்.குழந்தை பிறந்ததிலிருந்து இங்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்,பொட்டு கூட வைக்க மாட்டார்கள்.இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு பொட்டு வைக்கிறார்கள்.

_சிறப்பம்சங்கள்:_
★ இத்தல முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

உங்கள் நட்புக்கள், உறவுகள் நம் குழுவில் இணைய...
Link to join:

https://chat.whatsapp.com/DCKNBL3ghic9bvxZUDGkLi

Follow the நம்ம கடலூர்-Our Cuddalore channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaCpKzB7j6g95tqpF30Q

🙏அனைவருக்கும் வணக்கம்... 🙏*ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய திருப்பணி செவ்வனே நடைபெற்று நிகழும் குரோதி வருடம் ஆவணி மாதம் 31-ம...
15/09/2024

🙏அனைவருக்கும் வணக்கம்... 🙏

*ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய திருப்பணி செவ்வனே நடைபெற்று நிகழும் குரோதி வருடம் ஆவணி மாதம் 31-ம் தேதி (16-09-2024) திங்கட்கிழமை நாளைய தினத்தில் நடைபெறுகின்றது.*

கடலூர் வட்டம், காரைக்காடு மதுரா, பெரியபிள்ளையார்மேடு கிராமத்தில் (டேன்பாக் எதிரில்) திருக்கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ தட்சணாமூர்த்தி,
ஸ்ரீ கனக துர்கையம்மன், ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி *ஸ்ரீ பெரிய பாளையத்தம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தில்* அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...

கடலூரில் ஐடி வேலை.. பிரபல நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நாளை இன்டர்வியூhttps://whatsapp.com/channel/0029VaCpKzB...
23/08/2024

கடலூரில் ஐடி வேலை.. பிரபல நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நாளை இன்டர்வியூ

https://whatsapp.com/channel/0029VaCpKzB7j6g95tqpF30Q

21/07/2024

Address

Cuddalore

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம கடலூர் - Our Cuddalore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம கடலூர் - Our Cuddalore:

Share