
10/07/2025
கிட்டத்தட்ட எங்களுக்கு தெரிஞ்சு 18,20 வருஷங்களுக்கு மேலாக அந்த சுவை மாறாத குறிஞ்சிப்பாடி ரோஸ் மெஸ்
சாப்பாடு 60₹
பெரிய கட்டிட ஹோட்டல் கிடையாது அமர்ந்து உள்ள பெரிய சேர் டேபிள்கள் இருக்காது முன்பு எப்படி இருந்தது அப்படியே தான் இன்று வரையும் இருக்கிறது ஆனாலும் உணவின் சுவையும் மக்கள் வரவும் குறையும் இல்லை.
ஒரு துண்டு மீனும் அந்த ஒரு கீத்து மாங்காய் போடப்பட்ட மீன் குழம்பு பாக்கெட்டுக்கு சுவையும் மௌசும் இங்கு அதிகம்.
அப்பயும் சரி இப்பயும் சரி ஒரு சாப்பாடு வாங்கணும்னா குறைஞ்சது 15 நிமிஷத்தில் இருந்து 25 நிமிஷம் ஆகும் ஏன்னா எப்பவும் இந்த கூட்டம் குறையாமல் இருக்கும்.