
24/07/2025
#கம்யூனிஸ்ட்_கட்சி_உறுப்பினர்?
அடுத்த சில நிமிடங்களில் தூக்குமேடையில் ஏறப்போகிறோம் என்பது தெரிந்தும், தனக்கு கிடைத்த லெனின் எழுதிய புத்தகத்தைப் படித்த பகத் சிங், இப்புத்தகம் முன்கூட்டியே கிடைத்திருக்குமானால் தனது வாழ்க்கை வேறு மாதிரி அமைந் திருக்குமென நண்பர்களிடம் கூறியதாக நாம் அறிகிறபொழுது உறுப்பினர் அந்தஸ்து பெறாத ஒரு கம்யூனிஸ்ட் பகத் சிங் என்பதை உணர முடிகிறது. சாகிறபொழுதும் கூட தான் மாற வேண்டுமென்ற அந்தத் தியாகியின் ஆதங்கமே, அவனது நண்பர்களைப் பயங்கரவாதப் பாதையை விட்டு கம்யூனிஸ்ட் குணாம்சங்களைக் கொண்டவர்களாக மாறிவிடத் தூண்டியது: பின்னர் அவர்களில் பலர் கட்சி உறுப்பினர்களானார்கள். இந்த வரலாறு இன்றும் இளைய தலைமுறைக்கு ஆதர்சமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.
நான் மாற வேண்டிய அவசிய மில்லை, சீர்திருத்த வேண்டிய எந்த கெட்ட குணமும் என்னிடமில்லை என்று ஒருவர் கருதுவாரேயானால், அவர் கம்யூனிஸ்ட் குணங்களை இழந்து கெட்டு வருகிற மாறுதலுக்கு ஆளாகி விட்டார் என்றே கருத வேண்டும்.
- தோழர் வே.மீனாட்சி சுந்தரம் எழுதிய சிறு புத்தகத்தில் இருந்து