
01/04/2022
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 3, 1/2லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பதுக்கியவர் கைது மேலும் குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல்தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரங்கசாமி அவர்கள் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் இருந்து அதியமான் கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த நபரைநிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் காரிமங்கலம் அடுத்த காளப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர்(41) என்பதும் அவர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருசக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று கிராமப்புறங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது உடனடியாக போலீசார் ராஜசேகர்(42) வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 மூட்டைகளில் இருந்த 600 கிலோ குட்கா வை பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் 3,1/2 லட்சம் ஆகும் மேலும் குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.
https://nizhalyugam.com/taminadu-police-arrest/
tamilnadu-police-arrest தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu